சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

5 ஆயிரம் குடும்பங்களுக்கு ஒருமாத மளிகை பொருள்களை வழங்கிய பிரபல தயாரிப்பாளர்!

5 ஆயிரம் குடும்பங்களுக்கு ஒருமாத மளிகை பொருள்களை வழங்கிய பிரபல தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  *5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்* ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார். தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார். இவர் திருவண்ணாமலை பகுதியிலுள்ள 5000 ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கினார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் வேலை இழந்து தினக்கூலி தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என லட்சக்கணக்கான குடும்பங்கள் நாடு முழுவதும் வறுமையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றன. பலர் ஒருவேளை உணவு இன்றியும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ...
கொரானா பிடியில் இருந்து விடுபட்ட இங்கிலாந்து இளவரசர்!

கொரானா பிடியில் இருந்து விடுபட்ட இங்கிலாந்து இளவரசர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பிடியில் இருந்து விடுபட்ட இங்கிலாந்து இளவரசர்! இங்கிலாந்து , இளவரசர் சார்லசுக்கு கொரானா தொற்று இருப்பது கடந்த செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான கொரானா அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும், தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இளவரசர் சார்லஸ் தனது மனைவி கமிலாவுடன் ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில், இளவரசர் சார்லசை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கொரானா வைரசில் இருந்து குணமடைந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளார்....
நிவாரண நிதி அறிவிக்காத திரையுலகம்… ஸ்டாலின் வழியை பின்பற்றுவாரா ரஜினி

நிவாரண நிதி அறிவிக்காத திரையுலகம்… ஸ்டாலின் வழியை பின்பற்றுவாரா ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    நிவாரண நிதி அறிவிக்காத திரையுலகம்... ஸ்டாலின் வழியை பின்பற்றுவாரா ரஜினி! உயிர்க்கொல்லி வைரஸ் ஆன கொரானாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரானா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு இடங்களில் சிறப்பு தனிமைபடுத்தும் மையங்கள் அமைக்க அரங்குகள், வீடுகளை கொடுங்கள் என அரசு அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து கொரானா சிறப்பு மருத்துவமனைக்கு கலைஞர் அரங்கத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் என மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் அனுப்பினார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த கடிதத்தை முன்னாள் மேயர் சுப்பிரமணியம் கொண்டு போய் கொடுத்தார். இதே போல விழுப்புரம், திருச்சி நகரங்களில் உள்ள கலைஞர் அரங்கங்களையும் பயன்படுத்தி கொள்ள திமுக அறிவித்து உள்ளது. திமுக தரப்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ் மக்களின் ...
வீட்டுவரி, குடி நீர் வரி உள்ளிட்ட எல்லா வரிகளையும் கட்ட ஜூன் மாதம் வரை கால அவகாசம் – அமைச்சர் வேலுமணி

வீட்டுவரி, குடி நீர் வரி உள்ளிட்ட எல்லா வரிகளையும் கட்ட ஜூன் மாதம் வரை கால அவகாசம் – அமைச்சர் வேலுமணி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    வீட்டுவரி,குடி நீர்  வரி கட்ட ஜூன் மாதம் வரை கால அவகாசம் - அமைச்சர் வேலுமணி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறும்போது "தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த வருகிற ஜூன் மாதம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என்றார்....
உ.பி.யில் தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டது மனிதாபிமானமற்ற செயல்!

உ.பி.யில் தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டது மனிதாபிமானமற்ற செயல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உபி.யில் தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டது மனிதாபிமானமற்ற செயல்! உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரானா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது.டெல்லி, மும்பை உள்பட பல்வேறு நகரங்களில்  வேலை பார்த்து வந்த  லட்சகணக்கான  மக்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி  வருகின்றனர். உத்தரபிரதேசம், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் லட்சகணக்கில் உள்ளனர். அவர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதனால் சமூக தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் இவ்வாறு சொந்த ஊர் திரும்பிய ஆயிரகணக்கானவர் மீது கொரானா அச்சத்தால் ...
கொரானா தீவிரத்தால் ஏப்ரல் 30வரை அமெரிக்காவில் நீளும் ஊரடங்கு…

கொரானா தீவிரத்தால் ஏப்ரல் 30வரை அமெரிக்காவில் நீளும் ஊரடங்கு…

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா தீவிரத்தால் ஏப்ரல் 30வரை அமெரிக்காவில் நீளும் ஊரடங்கு... சொகுசு கப்பல்கள் திடீர் மருத்துவமனைகளாகிறது! உலகம் முழுவதும் 7 லட்சத்து 68 ஆயிரத்து 466 பேருக்கு கொரானா வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 36 ஆயிரத்து 914 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து வைரஸ் தற்போது அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் அமெரிக்காவில் தான் கொரானா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 478 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் கொரானாவால் 271 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண...
கொரானாவால் தடைபட்ட ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை 23ல் தொடங்கும்!

கொரானாவால் தடைபட்ட ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை 23ல் தொடங்கும்!

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
    கொரானா வைரஸ் பீதியால் தள்ளிப்போன ஒலிம்பிக் போட்டிகள் வரும் 2021 ஜூலை 23ம் தேதி தொடங்கும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை பலிவாங்கி வரும் கொரானா வைரஸ் பரவலால் உலகின் பல நாடுகளில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் சீர்குலைந்து உள்ளது. 2020ல் டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரானா தொற்று பீதி காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த சூழலில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அவசர கூட்டத்தில் 2020 ஒலிம்பிக் போட்டிகளை டோக்கியோவில் வரும் ஆண்டு ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. உலகை அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரானா பீதி அதற்குள் கட்டுக்குள் வந்துவிடும் என ஒலிம்பிக் கமிட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளது....
கொரானா தடுப்பு பணிக்காக நர்ஸ் ஆக மாறிய நடிகை!

கொரானா தடுப்பு பணிக்காக நர்ஸ் ஆக மாறிய நடிகை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    கொரானா தடுப்பு பணிக்காக நர்ஸ் ஆக மாறிய நடிகை! உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி உயிர்பலிகளை வாங்கி வரும் கொரானாவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். நாளுக்கு நாள் தொற்று அதிகமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவதால் மருத்துவ பணியாளர்கள் பலருக்கும் பணிச் சிரமம் ஏற்படுகிறது. இதனால் மருத்துவ பணியாளர்களின் தேவை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் பேன் (fan) என்ற படத்தில் நடித்தவர் ஷிஹா மல்ஹோத்ரா. இவர் டெல்லியில் உள்ள வர்தாமன் மஹாவீர் மெடிக்கல் காலேஜில் நர்சிங் படிப்பு படித்து டிகிரி பெற்றவர். திரைத்துறை வாய்ப்பு காரணமாக மருத்துவ துறை பணியை விட்டுவிட்டு நடிக்க வந்தார். இந்த நிலையில் கொரானா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற மீண்டும் தன்னை மருத்துவ ...
கொரானா பரவ காரணம் யார்னு தெரியுமா..? பிரகாஷ்ராஜ் ஆவேசம்

கொரானா பரவ காரணம் யார்னு தெரியுமா..? பிரகாஷ்ராஜ் ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    கொரானா பரப்பி விடுவது யார் ? பிரகாஷ்ராஜ் ஆவேசம் உலகின் பெரும்பாலான நடுகளை நிலைகுலைய செய்து உயிர்பலிகளை வாங்கி வரும் கொரானா தொற்றால் சுமார் 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரானா பரவலை தடுக்க 21நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். அதே நேரம் கொரானா தொற்றின் தீவிரம் புரியாமல் பலரும் சுற்றி வருகிறார்கள். கொரானா விழிப்புணர்வுக்கு ஒவ்வொரு நடிகர் நடிகையும் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ்ராஜ் சமூகத்தில் எந்த ஒரு பிரச்சனைக்கும் அழுத்தமாக தன் கருத்தை பதிவு செய்வார். கொரானா விழிப்புணர்விலும் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். கொரானா வைரசை பரப்பியது சீனாதான் என்று அமெரிக்கா ஊடகங்கள் சில ஆதாரங்களுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது. ஆனால் நடிகர் ப...
இந்தியாவில் கொரானா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது… தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு தொற்று!

இந்தியாவில் கொரானா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது… தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு தொற்று!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியாவில் கொரானா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது... தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு தொற்று! இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92 பேருக்கு கொரோனா: நான்கு பேர் பலி உலகம் முழுதும் மிக வேகமாக பரவி வரும் கொரானாவை கட்டுப்படுத்த பல்வேறு வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துக் கொண்டே வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள...