ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

ஹர்பஜன் சிங் ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் பிரண்ட்ஷிப்!

ஹர்பஜன் சிங் ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் பிரண்ட்ஷிப்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஹர்பஜன் சிங் ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் பிரண்ட்ஷிப்! கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தீவிர ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக அவதாரம் எடுத்து வருகிறார். சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி உள்ளார். சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். இந்த படத்தை அடுத்து கன்சல்டன்ஸி சர்வீசஸ் என்ற வெப் சீரிஸில் திருவள்ளுவர் கேரக்டரில் நடிக்கிறார் ஹர்பஜன் சிங். அடுத்ததாக ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் படம் ‘பிரண்ட்ஷிப்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கிறார்கள். அதோடு இதில் பிக்பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூ...
இந்தியில் முதன்முதலாக கால் பதிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.!

இந்தியில் முதன்முதலாக கால் பதிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இந்தியில் முதன்முதலாக கால் பதிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்து, நடிகர் கார்த்தி நடித்த படம் 'கைதி'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாகி உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல், கார்த்தி இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் முதன் முறையாக 100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஹிந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்கிறார்கள். இதன் மூலம் இந்தியில் முதன் முதலாக கால் பதிக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள். இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்....
கொரானாவுக்கு தாய்லாந்தில் மருந்து கண்டுபிடிப்பாம்!

கொரானாவுக்கு தாய்லாந்தில் மருந்து கண்டுபிடிப்பாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சீனாவுக்கு அடுத்தப் படியாக தாய்லாந்து நாட்டில் அதிகம் பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நாட்டில் 19 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்த அரசு அறிவித்துள்ளது. டாக்டர் கிரிங்கஸ்க் தலைமையிலான டாக்டர்கள் குழு இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது. காய்ச்சல் தடுப்பு மருந்தையும், எச்.ஐ.வி. கிருமி தடுப்பு மருந்தையும் சேர்த்து 71 வயது சீனப் பெண் நோயாளிக்கு டாக்டர்கள் கொடுத்தனர். தாய்லாந்துக்கு வந்திருந்த அந்த பெண் 3 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிப்புடன் பாங்காங்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். டாக்டர்கள் புதிய கலவை மருந்தை அந்த பெண்ணுக்கு கொடுத்த 48 மணி ந...
வாழ வந்த ரஜினி தமிழகத்தை ஆள தகுதி இல்லை – பாரதிராஜா அதிரடி

வாழ வந்த ரஜினி தமிழகத்தை ஆள தகுதி இல்லை – பாரதிராஜா அதிரடி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ரஜினி தமிழர் இல்லை என்பதால் தமிழ்நாட்டை ஆள தகுதி இல்லை - பாரதிராஜா பரபரப்பு தமிழன் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற கோஷம் அடிக்கடி எழும்பும். தேர்தல் நேரத்தில் அந்த கோஷம் அமுங்கி விடும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக பல ஆண்டுகளாக சொல்லி வருகிறார். இன்னும் அரசியல் கட்சி எதையும் ஆரம்பிக்கவில்லை. இந்த சூழலில் இயக்குனர் பாரதிராஜா ஒரு பரபரப்பு கிளப்பியுள்ளார். ரஜினிகாந்த் குறித்து இயக்குனர் பாரதிராஜா கூறிய கருத்து தமிழக அரசியலிலும், திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படி என்ன சொல்லி இருக்கிறார் ... "அசாமை ஒரு அசாமியர் ஆளுவதைப்போல் மராட்டியத்தை மராட்டியர் ஆள்வதுபோல், கர்நாடகாவை கர்நாடகக்காரர் ஆள்வது போல், கேரளாவை ஒரு கேரளக்காரர் ஆள்வது போல் தமிழகத்தை ஒரு தமிழர்தான் ஆள வேண்டும் தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது. வெள...
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி?

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி? சீனாவில் உள்ள ஊஹான் நகரில் கடந்த 2019 டிசம்பர் மாதம் இறுதியில் ஒரு வினோத நோய் வேகமாகப் பரவத் தொடங்கியது. ஒரு புது வகையான கொரானா வைரஸ் தான் இந்த புதிய தொற்று நோய்க்கு காரணம் என்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 17 வருடங்களில் நூற்றுக்கணக்கான உலக மக்களை கொன்றுகுவித்த சார்ஸ் (severe acute respiratory syndrome coronavirus/SARS-CoV) மற்றும் மெர்ஸ் (Middle East respiratory syndrome coronavirus (MERS-CoV) வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு வைரஸ் தான் இந்த புதிய கொரானா வைரஸ். இந்த புதிய கொரானா வைரஸ்க்கு 2019-nCoV என்று பெயரிட்டுள்ளது உலக சுகாதார மையம். தொடக்கத்தில் அதிகம் ஆபத்துகளை ஏற்படுத்தாத வைரசாக இருக்கும் என்று கருதப்பட்ட கொரானா வைரஸ் சுமார் ஒரு மாத காலத்துக்குள் சீனாவில் மட்டும் பல்லாயிரக்கணக்...
அண்ணா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட தலைவர்கள் மரியாதை!

அண்ணா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட தலைவர்கள் மரியாதை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட தலைவர்கள் மரியாதை! பேரறிஞரின் 51வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அண்ணா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  உள்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அண்ணாவிற்கு மரியாதை செலுத்தினர். முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளோடு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்....
கொரானா வைரஸ் பீதியால் சீனாவில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து!

கொரானா வைரஸ் பீதியால் சீனாவில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      கொரானா வைரஸ் பீதியால் சீனாவில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து! சீனாவில் இந்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி (நேற்று) சிறப்பு வாய்ந்த அதிர்ஷ்ட நாளாக கருதப்பட்டது. ஏனெனில் 02.02.2020 என்ற தேதியை பின்பக்கமாக வாசித்தாலும் ஒரே மாதிரியே இருக்கும். இதனால் இந்த அதிர்ஷ்ட நாளில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களை நடத்த சீன மக்கள் முன்னரே திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர். ஆனால் தற்போது அங்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் அதிவேகத்தில் பரவிவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிப்ரவரி 2-ந்தேதி திருமணங்களை நடத்த வேண்டாம் என மக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்தது. இது குறித்து சீன மக்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பிப்ரவரி 2-ந்தேதி அதிர்ஷ்ட நாள் என்று நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை ரத்து செய்து விடுங்கள். தற்போது நிலவும் சூழ்நிலையை மற்றவர்கள...
பெயரைப் போலவே ரசிகர்களை ஏமாற்றியதா டகால்டி – கோடங்கி விமர்சனம்

பெயரைப் போலவே ரசிகர்களை ஏமாற்றியதா டகால்டி – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
    காமெடி ஹீரோ ஆக்‌ஷன் ஹீரோ ஆக முயற்சி எடுத்திருக்கும் படம் தான் டகால்டி. சின்னச் சின்ன தவறுகளை செய்து பணம் சம்பாதிக்கும் சந்தானத்திடம் ஒரு பெண்ணை கண்டுபிடித்து ஒப்படைக்கும் வேலை கொடுக்கப்படுகிறது. அந்த பெண்தான் ஹீரோயின் ரித்திகா. அவரை பார்க்காமலேயே படம் வரைந்து வில்லன் தேடுகிறார். அவரிடம் ஹீரோயினை ஒப்படைத்து சந்தானம் பணம் வாங்கினாரா ஹீரோயின் என்ன ஆகிறார் எனபதுதான் டகால்டி கதை. சந்தானம் நண்பராக முதல்முறையாக யோகிபாபு இணைந்து நடித்திருக்கிறார். அதனால் காமெடி நிச்சயம் என்று நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் தான். ஆனால் அதற்கு பதிலாக சந்தானம் ஆக்‌ஷன் ஹீரோவாக பறந்து பறந்து சண்டை போடுகிறார். இயக்குனர் விஜய் ஆனந்த் ஆக்‌ஷனில் காட்டிய தீவிரத்தை கதையிலும் திரைக்கதையிலும் காட்டி இருந்ததால் படம் கண்டிப்பாக பேசப்பட்டிருக்கும். படத்துக்கும் பாடல்களுக்கும் தொடர்பில்லாமல் இருப...
மார்டன் கடவுளாக விஜய் சேதுபதி களமிறங்கிய ஓ மை கடவுளே!

மார்டன் கடவுளாக விஜய் சேதுபதி களமிறங்கிய ஓ மை கடவுளே!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மார்டன் கடவுளாக விஜய் சேதுபதி களமிறங்கிய ஓ மை கடவுளே! அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், வில்லா, தெகிடி படங்களில் நாயகனாக நடித்த அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ஓ மை கடவுளே. இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக இறுதிச்சுற்று, சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை படங்களில் நாயகியாக நடித்த ரித்திகா சிங் நடித்துள்ளார். திருமண வாழ்வில் இணையும் தம்பதிகளாக இருவரும் ஃபர்ஸ்ட் லுக்கில் கொஞ்சம் டாம் அண்ட் ஜெர்ரி போல காட்சி அளிக்கின்றனர். ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட ஜெயம் ரவி "என்னது இது என் கதை மாதிரியே இருக்கு" என கேப்ஷன் போட ... இது ஜெயம் ரவியின் ரியல் கதை மாதிரி இருக்கா அல்லது அவர் இயக்க எழுதி வைத்த கதை மாதிரி இருக்கா என தனியாக ரசிகர்கள் பட்டிமன்றம் நடத்த தொடங்கி விட்டனர். இந்த சூழலில் இந்த படத்தில் விஜய் சேதுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்...
கொரோனா வைரஸ் பீதி – சீனாவில் இருந்து 2வது கட்டமாக சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த இந்தியர்கள்!

கொரோனா வைரஸ் பீதி – சீனாவில் இருந்து 2வது கட்டமாக சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த இந்தியர்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரோனா வைரஸ் பீதி - சீனாவில் இருந்து 2வது கட்டமாக சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த 323 இந்தியர்கள்! சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரசினால் அந்நாட்டில் இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளனர். 14,000 நபர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட பல நாடுகளில் இந்த வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.  உலக நாடுகள் பலவும் சீனாவில் உள்ள தங்களது குடிமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன.   இதற்கிடையே, சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள வுகான் நகரில் உள்ள இந்தியர்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதுகுறித்து சீன அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேச்ச...