மூன்று மொழிகளில் OTT சீரிஸ்கள்… அடுத்ததாகத் திரைப்படத் தயாரிப்பு! திரைத்துறையில் புதிய பயணத்தைத் தொடங்கும் ஹன்சா என்டர்டெயின்மென்ட்!
மூன்று மொழிகளில் OTT சீரிஸ்கள்… அடுத்ததாகத் திரைப்படத் தயாரிப்பு! திரைத்துறையில் புதிய பயணத்தைத் தொடங்கும் ஹன்சா என்டர்டெயின்மென்ட்!
விஜயதசமி நன்னாளான அக்டோபர் 20, 2026 அன்று, ஹன்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது புதிய படைப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், ஆறு மாதங்களுக்குள் பொழுதுபோக்குத் துறையில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் முக்கிய OTT தளங்களுடன் இணைந்து சீரிஸ்கள் மற்றும் குறுந்தொடர்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
தரமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைச் சிறந்த படைப்புகளாகப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்கான தயாரிப்புப் பணிகளை அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடங்கத் திட்டமிட்டுள்ளதுடன், ஒரே நேரத்தில் பல படைப்புகளை உருவாக்கும்...









