புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

ரியோ ராஜ் – ரம்யா நம்பீசன் ஜோடியின் ஆட்டம்..!

ரியோ ராஜ் – ரம்யா நம்பீசன் ஜோடியின் ஆட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    திரையின் மீது காதலும் அணுகும் வேலையின் மீது நேர்மையும் கொண்ட படக்குழுவிற்கு  உதாரணமாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் திரைப்படத்தின் படக்குழுவை சொல்லலாம். படம் அறிவிக்கப்பட்ட வெகு குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்து ஆச்சர்யம் தந்துள்ளது படக்குழு. மிக குறுகிய காலத்தில் படம் மிக அழகாக உருவாகி வந்திருக்கும் மகிழ்ச்சியில்  இருக்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது... இப்படத்தின் படப்பிடிப்பு மறக்க முடியாத பெரிய அனுபவம். ஒருவருக்கொருவர் தட்டிக்கொடுத்து முழு ஈடுபாட்டுடன் உழைத்த மொத்த படக்குழுவும் தான் இன்று படம் இவ்வளவு அழகாக உருவாகி நிற்க காரணம். பல அற்புதமான இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். சென்னை மட்டுமல்லாமல் கேரளாவில் இடுக்கி, வேகமன் மற்றும் சைனாவில் கேங்டாக், குபுப் ஆகிய...
“தமிழரசன் ”  படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு..!

“தமிழரசன் ”  படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    " தமிழரசன் "  படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு. பின்னணி இசையின் முன்னணி நாயகர் இன்று வரையிலும் இளையராஜா மட்டும் தான். SNS மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரிப்பில் ,பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன்  நடித்துள்ள தமிழரசன் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. ஏற்கெனவே பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை இளையராஜா ஒரு இசை அமைப்பாளர் ஹீரோவாக நடித்த படத்திற்கு இசை அமைத்ததில்லை. விஜய் ஆண்டனிக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. இது ஒரு முக்கியச் செய்தி என்றால் இதைவிட மிக முக்கியச் செய்தியாக இருப்பது தமிழரசன் படத்திற்காக  இசைஞானி இளையராஜா முதன்முதலாக பின்னணி இசையை தன் வீட்டில் வைத்து செய்து வருகிறார். அவர் இத்தனை ஆண்டுகால இசைப் பயணத்தில் பின்னணி இசையை தன் வீட்ட...
கவர்னர் பன்வாரிலால் உரையுடன் 2020ம் ஆண்டின் சட்டசபை முதல் கூட்டத்தொடர் தொடங்கியது

கவர்னர் பன்வாரிலால் உரையுடன் 2020ம் ஆண்டின் சட்டசபை முதல் கூட்டத்தொடர் தொடங்கியது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    2020ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் பேரவைக் கூட்டம் தொடங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாள் காலை 10 மணிக்கு, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அவரது ஆங்கில உரையை, சட்டப்பேரவைத் தலைவா் ப.தனபால் தமிழில் மொழிபெயா்த்தார். ஆளுநா் உரையில் இடம்பெற்ற சில முக்கிய அறிவிப்புகள்: கடந்த 3 ஆண்டுகளில் குழந்தைப் பிறப்பு பாலின விகிதம் 1000க்கு 917 என்பதில் இருந்து 943 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் விகிதம் 43.9% ஆக உயர்ந்துள்ளது. இது மற்ற மாநிலங்களை விடஅ திகம். 2019 - 20ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.12,500 கோடி கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.2000 கோடியில் சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டம் விரைவில் அறி...
கலைப்புலி தாணு பிரமாண்ட தயாரிப்பாக தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் தொடங்கியது..!

கலைப்புலி தாணு பிரமாண்ட தயாரிப்பாக தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் தொடங்கியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கலைப்புலி தாணு பிரமாண்ட தயாரிப்பாக தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் தொடங்கியது..! பரியேறும் பெருமாள் படத்தின் மெகா ஹிட் மூலம் தமிழ் சினிமாவில் திடீர் கவனம் பெற்றவர் இயக்குனர் மாரி செல்வராஜ். தமிழ் சினிமாவில் பிரமாண்டமான படைப்புகளை தயாரிக்கும் பிரபல தயாரிப்பாளர் தாணுவின் அடுத்த தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். ஏற்கனவே கடந்த ஆண்டின் கடைசியில் ரிலீஸ் ஆகி ஹிட் அடித்த தனுஷின் அசுரன் படத்தையும் தாணுதான் தயாரித்திருந்தார். https://twitter.com/theVcreations/status/1213804941585682434?s=19 இப்போது இயக்குனர் மாரி செல்வராஜ், தனுஷ், தயாரிப்பாளர் தாணு மூவரும் இணைந்து கர்ணன் படம் உருவாகும் என அறிவித்திருந்தார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது தொடங்கி இருக்கிறது. இது குறித்து தயாரிப்பாளர் தாணு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டு...
பால்தாக்ரே வாழ்க்கை வரலாற்று படத்தில் சாருஹாசன்… மீண்டும் சர்ச்சையில் சிக்கும் தாதா87 இயக்குனர்..!

பால்தாக்ரே வாழ்க்கை வரலாற்று படத்தில் சாருஹாசன்… மீண்டும் சர்ச்சையில் சிக்கும் தாதா87 இயக்குனர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    பால்தாக்ரே வாழ்க்கை வரலாற்று படத்தில் சாருஹாசன்... மீண்டும் சர்ச்சையில் சிக்கும் தாதா87 இயக்குனர்..! உலக நாயகன் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் கடந்த ஆண்டு தாதா87 படத்தில் தாதா கெட்டப்பில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு உலக அளவில் அதிக வயதான நடிகர் என்ற பெறுமையையும் சமீபத்தில் வாழ் நாள் சாதனையாளர் விருதையும் சாருஹாசன் பெற்றார். இந்த நிலையில் நடிகர் சாருஹாசனுக்கு இன்றுடன் 90 வயது முடிந்து 91 வயது தொடங்குகிறது. 91 வயதிலும் பல படங்களில் சாருஹாசன் நடித்து வருகிறார். இந்நிலையில் தாதா87 இயக்குனர் விஜய்ஸ்ரீஜி தனது டிவிட்டர் பக்கத்தில் சாருஹாசனை வாழ்த்தி ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில் சாருஹாசன் அச்சு அசலாக மராட்டிய பிரபல அரசியல் தலைவர் பால்தாக்ரே போன்ற தோற்றத்தில் சாருஹாசன் மிரட்டலாக அமர்ந்திருக்கிறார். அதோடு நெற்றியில் நீள வகிடு குங்குமமும், ...
போண்டா சாப்பிட்டதில் உருளைகிழங்கு தொண்டையில் சிக்கி  பெண் பலி..!

போண்டா சாப்பிட்டதில் உருளைகிழங்கு தொண்டையில் சிக்கி பெண் பலி..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    சென்னை சூளைமேடு காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கங்காதரன் என்பவரின் மனைவி பத்மாவதி என்பவர் தனது கணவருடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது தாயார் போண்டா வாங்கி மகளுக்கு ஆசையாக கொடுத்துள்ளார். அந்த போண்டாவை பத்மாவதி சாப்பிட்டபோது திடீரென போண்டா அவரது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டது இதனையடுத்து உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பத்மாவதியை அவரது தாயார் மற்றும் கணவர் கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே பத்மாவதி இறந்துவிட்டதாக தெரிவித்ததால் இருவரும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது பத்மாவதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது விசாரணையில் உருளைக்கிழங்கு போண்டாவை பத்மாவதி, பேசிக் கொண்டே சாப்பிட்டுள்ளார். அதனால்தான் மூச்சுகுழாய்க்குள் உருளைக...
பெற்றோர் குழந்தைகளுடன் பார்க்கவேண்டிய பிழை – கோடங்கி விமர்சனம்

பெற்றோர் குழந்தைகளுடன் பார்க்கவேண்டிய பிழை – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
    படிக்காமல் கல் உடைக்கும் தொழிலுக்கு வந்து விட்ட பெற்றோர் தங்களின் பிள்ளைகளாவது நன்றாக படித்து பெரியாளாக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால் பிள்ளைகளிடத்தில் கண்டிப்போடு நடக்கிறார்கள். ஆனால் பெற்றோரின் கண்டிப்பை விரும்பாத 3 சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடுகிறார்கள். கடைசியில் அவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதை மிக யதார்த்தமாக சொல்லி இருக்கும் படம் தான் பிழை. டர்னிங் பாயிண்ட் தாமோதரன் தயாரித்து நடித்திருக்கிற படம். ராஜவேல் கிருஷ்ணா என்ற இயக்குனர் அறிமுக படமாக பிழை வந்திருக்கிறது. மைம் கோபி, சார்லி, ஜார்ஜ் இவர்களின் யதார்த்தமான நடிப்பு படத்துக்கு பலம் சேர்ப்பதோடு பல இடங்களில் கண்ணீர் வரவழைக்கிறது. காக்கா முட்டை ரமேஷ், நஷித் கோபால், நாகவேந்திரா சிரஞ்சீவி, தர்ஷினி குழந்தை நட்சத்திரங்களின் பங்கு பலம் பெறுகிறது. பெற்றோர் சொல்லை மீறி போனால் என்ன விளைவுகள் எல்லாம் ...
சென்னை to ஐதராபாத் விமானத்தில் தர்பார் விளம்பரங்கள்… பட்டையை கிளப்பும் லைகா..!

சென்னை to ஐதராபாத் விமானத்தில் தர்பார் விளம்பரங்கள்… பட்டையை கிளப்பும் லைகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சென்னை to ஐதராபாத் விமானத்தில் தர்பார் விளம்பங்கள்... பட்டையை கிளப்பும் லைகா..! ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கியுள்ள படம் தர்பார். இந்த படம் பொங்கல் கொண்டாட்டமாக வரும் 9ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆகிறது. பட ரிலீசுக்கு லைகா நிறுவனம் பல கோடிகள் செலவழித்து பிரமாண்ட விளம்பரங்களை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை டூ ஐதராபாத் செல்லும் தனியார் விமானங்களில் தர்பார் பட விளம்பரங்கள் பெரிய அளவில் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கலைப்புலி தாணு தயாரித்த கபாலி பட விளம்பரங்கள் மலேசிய விமானங்களில் செய்யப்பட்டிருந்தது. அந்த பாணியை தர்பார் தயாரிப்பான லைகா கையில் எடுத்துள்ளது....
உண்மை சம்பவத்தை சினிமாவாக்கிய தொட்டுவிடு தூரம்..!

உண்மை சம்பவத்தை சினிமாவாக்கிய தொட்டுவிடு தூரம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    தொட்டு விடும் தூரம்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் விவேக்ராஜ் கதாநாயகனாகவும், மோனிகா சின்னகோட்லா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். லிவிங்ஸ்டன், சீதா, சிங்கம்புலி, பாலசரவணன், ஜீவாரவி, ராஜசிம்மன், கிரேன் மனோகர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி வி.பி.நாகேஸ்வரன் டைரக்டு செய்துள்ளார். பி.ராமநாதன், ஆர்.சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். படத்தை பற்றி இயக்குனர் வி.பி.நாகேஸ்வரன் கூறியதாவது:- “எனது நண்பன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, ‘தொட்டு விடும் தூரம்’ படம் தயாராகி உள்ளது. சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து மாணவர்கள் என்.எஸ்.எஸ். முகாமுக்காக ஒரு கிராமத்துக்கு செல்கிறார்கள். அங்கு சமூக சேவை செய்யும் அழகு சுரேஷ் என்ற இளைஞனை, பிரியா என்ற மாணவி சந்திக்கிறாள். இருவருக...
மருத்துவ கழிவுகளின் பயங்கரம்… அம்பலப்படுத்தும் “கல்தா”

மருத்துவ கழிவுகளின் பயங்கரம்… அம்பலப்படுத்தும் “கல்தா”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    தமிழகத்தில் சில வருடங்களாக தொடரும் அவளை, வெளி மாநில மருத்துவ கழிவுகளை கிராமப்புறங்களில் கொட்டி வருவது தான்! வெளி மாநிலங்களின் மருத்துவ கழிவு எண்பத்தி விட நம் சொந்த மாநிலத்தின் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகளை கிராமப்புறங்களில் கொட்டி வருவது வழக்கமாகிவிட்டது. இந்த மருத்துவ கழிவுகளினால், பல வகையான நோய்கள் பரவி வருகின்றன. அத்தகைய நோய்களினால் பெரும்பாலான சிறுவர்கள், கர்பிணி பெண்கள் மாற்று மோது மக்கள் நோய்வாய்ப்பட்டு பாதிப்புக்குள் ஆகியுள்ளார். இதை பற்றி மையமாக வைத்தது ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ‘கல்தா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இத்திரைப்படம் மருத்துவ கழிவுகளினால் ஏற்படும் பாதிப்புகளை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆண்டனி(மேற்கு தொடர்ச்சி மலை) கதாநாயகனாகவும், அய்ரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சிவ நிஷாந்த் மற...