செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

இடைத்தேர்தலில் உதயநிதி  போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்- திருநாவுக்கரசர்

இடைத்தேர்தலில் உதயநிதி போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்- திருநாவுக்கரசர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இடைத்தேர்தலில் உதயநிதி போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்- திருநாவுக்கரசர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி தொகுதி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும் என கே.என்.நேரு பேசியது அவருடைய சொந்த கருத்து. கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான இடங்கள் பங்கீடு குறித்து கட்சிகளின் தலைமைகள் தான் பேசி முடிவு செய்யும். உள்ளாட்சி, சட்டப் பேரவை தேர்தல்களிலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும். ஆனால் தோற்றுவிடுவோம் என்ற பயம் இருப்பதால் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்துமா? என்பது சந்தேகமே. பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றேன் என்று நான் எங்கும் கூறவில்லை. என்னுடைய வெற்றிக்கு தி.மு.க- ...
நடிகர் சங்கத்தில் அரசியல் வருத்தப்பட்ட நெப்போலியன்..!

நடிகர் சங்கத்தில் அரசியல் வருத்தப்பட்ட நெப்போலியன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் சங்கத்தில் அரசியல் வருத்தப்பட்ட நெப்போலியன்..! நடிகர் சங்க தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்தது, மீடியாக்கள் முக்கியத்துவம் அளித்தது போன்றவை கடும் விமர்சனத்துக்குள்ளாகியது. இந்நிலையில், இது தொடர்பாக நடிகரும், அரசியல்வாதியுமான நெப்போலியன் கூறியதாவது:- நான் நடிகர் சங்கத்தில் துணைத்தலைவராக இருந்திருக்கிறேன். அப்போது விஜயகாந்த் தலைவராகவும், சரத்குமார் பொதுச்செயலாளராகவும் இருந்தனர். அப்போது நாங்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தோம். இருப்பினும் நடிகர் சங்கம் என வந்துவிட்டால் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம். ஆனால் இப்போது நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள், அரசியல் பற்றி ஒன்றும் தெரியாமல், அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது" என அவர் கூறினார்....
ரசிகனை வசப்படுத்தும் வித்தைக்காரன் ஜிவி – கோடங்கி விமர்சனம்

ரசிகனை வசப்படுத்தும் வித்தைக்காரன் ஜிவி – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படி படம் வரும். இதுவரை சொல்லப்படாத கதை... என்று சொல்லிக் கொள்ள தகுதி உடைய படம்தான் ஜிவி. 8 தோட்டாக்கள் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த வெற்றி மீண்டும் ஜிவி படம் மூலமாக தான் ஒரு அழுத்தமான வெற்றி கதையின் நாயகன் என்று நிரூபித்து காட்டியுள்ளார். தமிழ் எழுத்தில் அறிமுக இயக்குனர் கோபிநாத் ஒவ்வொரு காட்சிகளையும் நேர்த்தியாக நகர்த்தி உள்ளார். கதைப்படி ரோஹிணி வீட்டில் வெற்றியும், கருணாகரனும் வாடகைக்கு குடியிருக்கிறார்கள். முடக்குவாத கணவன், கண் தெரியாத மகளுடன் இருக்கும் ரோஹிணி வீட்டில் இருந்த நகைகளை வெற்றி திருடிக் கொள்கிறார். அதற்கு கருணாகரன் உதவி செய்கிறார். பார்வையில்லாத மகளின் திருமணத்திற்கு சேர்த்து வைத்த நகைகள் திருடு போனதால் கல்யாணம் நடந்ததா இல்லையா , நகை திருட்டு செய்த வெற்றி மாட்டிக் கொண்டாரா, இல்லையா என்பதை ஒரு கைதேர்ந்த சிற்பி ப...
பீர் குடித்ததால் பறி போன வாய்ப்பு – ராதிகா ஆப்தே பகீர்

பீர் குடித்ததால் பறி போன வாய்ப்பு – ராதிகா ஆப்தே பகீர்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் ராதிகா ஆப்தேவுக்கு ரஜினி ஜோடியாக கபாலி படத்தில் நடித்ததுதான் பெரிய பேரை வாங்கி தந்தது. அரை நிர்வாணமாகவும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர் இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனட்டிக் டெய்லரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் தனது சினிமா அனுபவங்களை சொல்லும் போது , அதிக பீர் குடித்ததற்காக ஒரு படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- “ஆயுஷ்மன் இயக்கத்தில் இந்தியில் வெளியான ‘விக்கி டோனர்’ படத்துக்கு முதலில் என்னைத்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்னால் ஒரு மாத விடுமுறையில் நான் வெளிநாடு சென்று இருந்தேன். அப்போது அதிகமாக பீர் குடித்தேன். நிறைய உணவுகளையும் சாப்பிட்டேன...
டாக்டரை மணக்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய்..!

டாக்டரை மணக்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  டாக்டரை மணக்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய்..! பிரபல தயாரிப்பாளர் அழகப்பன் மகனும் பிரபல இயக்குனருமான ஏ.எல்.விஜய் தன்னுடைய படத்தில் நடிக்க வந்த ஹீரோயின் அமலாபாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் திருமணம் கொஞ்ச நாளில் கசந்து போய் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இனி சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லை என்ற நிலையால் இருவரின் சம்மதத்துடன் விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில் இரண்டாவது திருமணம் குறித்து இருவருமே எதுவும் சொல்லாமல் அவரவர் பணிகளில் பிசியாக இருந்தனர். இந்த சூழலில் ஏ.எல் விஜய்க்கு குடும்பத்தார் பெண் பார்த்து வந்தனர். ஐஸ்வர்யா என்ற டாக்டர் ஒருவரை விஜய் திருமணம் செய்ய முடிவாகி இருக்கிறது. இந்த திருமணம் வருகிற ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்....
முன்னாள் காதலர் பிரபுதேவா படம் பிளாப் ஆனதால் ஷாக் ஆன நயன்தாரா..!

முன்னாள் காதலர் பிரபுதேவா படம் பிளாப் ஆனதால் ஷாக் ஆன நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  முன்னாள் காதலர் பிரபுதேவா படம் பிளாப் ஆனதால் ஷாக் ஆன நயன்தாரா..! இந்தியில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் கடந்த வெள்ளியன்று ரிலீஸான ‘காமோஷி’ படம் படுதோல்வி அடைந்துள்ளதால் நடிகை நயன்தாரா உள்ளிட்ட ‘கொலையுதிர்காலம்’படக்குழுவினருக்கு பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. முன்னாள் காதலர் பிரபுதேவா படம் இந்தியில் பிளாப் ஆனால் நயன்தாரா ஏன் கவலை அடைய வேண்டும்... என்று யோசிக்கிறீர்களா... இந்தியில் பிரபுதேவா நடிச்ச காமோஷி படம் தான் தமிழில் நயன்தாரா நடிப்பில் கொலையுதிர் காலம் படமாக எடுக்கப்பட்டு உள்ளது. அதே இயக்குனர் சக்ரி தான் இரு மொழிகளிலும் இயக்கி இருக்கிறார். அப்ப பதட்டம் இருக்காதா... ஏற்கனவே படத்தை ரிலீஸ் பண்ணக் கூடாதுன்னு கோர்ட் தடை விதித்தது. அந்த தடையை சில தினங்களுக்கு முன்பு தான் கோர்ட் நீக்கியது. அப்பாடா சிக்கல் தீந்துடுச்சி... படத்தை ரிலீஸ் பண்ணிடலாம்னு யோசிக்கும்போ...
காவி கலருக்கு மாறிய இந்திய கிரிக்கெட் அணி..!

காவி கலருக்கு மாறிய இந்திய கிரிக்கெட் அணி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  காவி கலருக்கு மாறிய இந்திய கிரிக்கெட் அணி..! ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. முன்புறம் கருநீலமும், பின்புறம் ஆரஞ்ச் நிறமும் கொண்ட இப்புதிய ஜெர்சியை, இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை ஜூன் 30ம் தேதி நடைபெறவுள்ள, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் அணிந்து விளையாட உள்ளனர். புதிய ஜெர்சியில் ஆரஞ்ச் நிறம் இருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்த நிலையில் இந்த காவி கலர் உடை அறிமுகபடுத்தப்பட்டு உள்ளது....
தண்ணீர் பஞ்சத்தை போக்க போர்க்கால அடிப்படையில் ஏரி,குளங்களை தூர் வார வேண்டும் – ரஜினி

தண்ணீர் பஞ்சத்தை போக்க போர்க்கால அடிப்படையில் ஏரி,குளங்களை தூர் வார வேண்டும் – ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தர்பார் ஷூட்டிங் முடிந்து மும்பையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் சென்னை திரும்பி வந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:- குடிநீர் பிரச்சினையில் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ள ரசிகர்களை மனமார்ந்து பாராட்டுகிறேன். அவர்களை வாழ்த்துகிறேன். ரசிகர்கள் செய்வது மிகவும் நல்ல விசயம். இதுபோன்ற நல்ல வேலைகளை முதலில் இருந்து செய்து வருகிறோம். இப்போதுதான் வெளியே தெரிய தொடங்கி உள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டும். இதற்காக உடனடியாக ஏரி, குளங்கள் உள்பட நீர்நிலைகளை தூர்வாரவேண்டும். மழை வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் சரிசெய்து வைத்து மழைநீரை சேமிக்கவேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் செய்யப்படவேண்டும். பாரதீய ஜனதா அரசு இப்போதுதான் பொறுப்பேற்று உள்ளது. நதிநீர் இணைப்புகளை...
“வால்டர்” சிபிராஜ் படத்தில் இணைந்த இயக்குனர்கள்…

“வால்டர்” சிபிராஜ் படத்தில் இணைந்த இயக்குனர்கள்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  "வால்டர்" சிபிராஜ் படத்தில் இணைந்த இயக்குனர்கள்... நடிகர் சத்யராஜ் நடித்த 'வால்டர் வெற்றிவேல்' திரைப்படம், கடந்த 1993-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டானது. இப்போது சத்யராஜ் மகன் சிபிராஜ் 'வால்டர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அன்பு என்ற புதுமுக இயக்குனர் இயக்கி வருகிறார். ஏற்கனவே வால்டர் படக்கதையும் , தலைப்பும் எனக்குதான் சொந்தம் என தயாரிப்பாளர் சிங்காரவேலன் சர்ச்சை ஏற்படுத்த பரபரப்பானது. பேச்சு வார்த்தைக்கு பின் வால்டர் சிக்கல் தீர்ந்தது. இப்படத்தில் சிபிராஜ் ஜோடியாக ஷிரின் கான்ச்வாலா நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் சிபிராஜுடன் இயக்குனர் கவுதம் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் சமுத்திரக்கனியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்...
தினகரனின் அமமுகவில் இருந்து விலகி ஸ்டாலினுக்கு மஞ்சள் சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்..!

தினகரனின் அமமுகவில் இருந்து விலகி ஸ்டாலினுக்கு மஞ்சள் சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தினகரனுடன் மோதல் ஏற்பட்டதால் அமமுகவில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தார். தினகரனின் வலது கரமாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் திடீரென தினகரனை விமர்சிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் இந்த முட்டல் மோதல் உச்சகட்டத்தை அடைந்ததால் தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவில் இருந்து நீக்கப்படுவார் என தினகரன் அறிவித்தார். இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைய திட்டமிட்டுள்ளார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அதற்கு பச்சைக்கொடி காட்டி விட்டதாகவும், ஓ.பி.எஸ் தரப்பில் எதிர்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திடீரென திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இதற்கு முன்பே தங்க தமிழ்செல்வனை அமமுகவில் இருந்து நீக்கிவிட்டதாக தினகரன் அறிவித்திருந்தார். இதற்கிடையில் அமமுகவில் இருந்து வெளியேறிய செந...