குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை – மத்திய அரசு சட்ட திருத்தம்
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை - மத்திய மந்திரி சபை ஒப்புதல்
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு சட்ட மசோதா மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன் விவரம்:
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தின் 4, 5 மற்றும் 6-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இதேபோல், குழந்தைகளை ஆபாச படங்களில் பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கும் வகையில் இந்த சட்டத்தின் 14 மற்றும் 15-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.
கடுமையான தண்டனை வழங்குவது குழந்...









