கொரானாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்
கொரானாவை வெல்ல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகளுக்கு வலு சேர்ப்போம். துணை நிற்போம் என பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
இக்கட்டான ஒரு சூழலில் முதல்வரானார்.
உட்கட்சிப் பூசல், எதிராக நின்ற அத்தனை கட்சிகள்...
இடம் வாய்த்ததென சிஸ்டத்தை சரிசெய்ய புதிதாக முளைத்தவர்கள், மத்திய அழுத்தம் என அப்படியொன்றும் இதமான கிரீடமாக இல்லை அவர் ஏற்ற முதல்வர் பதவி...
எல்லா அழுத்தத்தையும் தாங்கிக்கொண்டு முதலில் கட்சியை பலப்படுத்தியதோடு இல்லாமல் மாநிலத்தின்மீது தீவிரக் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
சொல் குறைவு... செயல் அதிகம் என இறங்கினார்.
மழை அதிகமாக வந்தால் எப்படி சமாளிப்பது என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததிலாகட்டும்... கன்மாய்களை புதுப்பித்தது.. விவசாயத்தை நோக்கி கவனம் வைத்தது.. படிப்படியாக தமிழகத்தை கைய...









