நாடாளுமன்றத்தில் மு.க.ஸ்டாலின்... உற்சாகமாக செல்பி எடுத்துக்கொண்ட எம்.பி.க்கள்..
தமிழக முதலமைச்சர் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தை சுற்றிப் பார்த்தார். அப்போது எம்.பி.க்கள் அவருடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துகொண்டனர்.
இதை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்திற்குள் வந்த மு.க.ஸ்டாலின் உடன் தமிழக எம்.பி.க்களான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோனு ஆகியோர் புகைப்படம் எடுத்துகொண்டனர்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா மு.க.ஸ்டாலின் உடன் புகைப்படம் எடுத்துகொண்டார்.
Tamil Nadu CM MK Stalin in his meeting with PM Modi today discussed the economic condition in Sri Lanka. He proposed to send relief materials including food and medicines from Tamil Nadu ...
கர்நாடக சட்டசபையில் நேற்று தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான சிறப்பு விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-
தேர்தல் முறை மாற வேண்டும் என்பதில் இருவேறு கருத்து இல்லை.
இதில் சீர்திருத்தம் ஏற்படாவிட்டால் ஜனநாயகம் பலவீனமாகிவிடும். ஜனநாயகம் பலவீனம் அடைந்தால் நாடு பலவீனமாகிவிடும்.
தேர்தல் நடைமுறை ஒவ்வொரு முறையும் பலம் அடைய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக இது பலவீனம் அடைந்து வருகிறது. ஆட்சி அதிகாரம் பணக்காரர்களிடம் மட்டுமே இருக்கக்கூடாது என்று அம்பேத்கர் சொன்னார்.
ஆனால் இன்று அரசியல் கட்சிகள் மற்றும் பெரு நிறுவனங்கள் இடையே கூட்டணி தொடங்கியுள்ளது. இதன்மூலம் அந்த பெரு நிறுவனங்கள் அரசை கட்டுப்படுத்துகின்றன.
மது நாட்டில் உள்ள 142 பெரு நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.54 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த 2013-ம் ஆண்டில் ரூ.23 லட்சம் கோடியாக இருந்தது. நாட்டில் 19 ...
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'விக்ரம்'.
கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படத்தின் புதிய அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ராஜ்கமல் பிலிம்...
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பிற்கு எதிரானது என கூறி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, பா.ம.க. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.எல்.கவாய் அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அப்போது, உள் ஒதுக்கீடு செல்லாது என்ற என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை...
பிரசாந்த் வர்மா, கல்யாண் தாசரி இணையும் பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் “அதிரா” படத்தின் முதல் காட்டுத்துணுக்கை, ராஜமௌலி, என்டிஆர், ராம் சரண் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
கிரியேட்டிவ் மேதையாக வலம் வரும் படைப்பாளி பிரசாந்த் வர்மா நட்சத்திர நடிகர்களை வைத்து படம் எடுக்காமல், சூப்பர் கதாநாயகர்களைத் தானே உருவாக்கி வருகிறார். ஜாம்பி கான்செப்ட்டை முதல் முறையாக டோலிவுட்டில் அறிமுகப்படுத்திய பிறகு, பிரசாந்த் வர்மா இந்தியாவின் முதல் அசல் சூப்பர் ஹீரோ படமான ஹனு-மேன் படத்தை , நடிகர் தேசா சர்ஜா நடிப்பில் உருவாக்கி வருகிறார். இந்நிலையில் மற்றொரு நாயகனை வைத்து இன்னொரு சூப்பர் ஹீரோ படத்தினையும் உருவாக்கவுள்ளார். பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் அதிரா என்ற படத்தின் மூலம் சூப்பர் ஹீரோவாக நாயகன் கல்யாண் தாசரி அறிமுகமாகிறார்.
இந்தியப் புராணக் கதாபாத்திரங்கள...
ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் 'பாட்னர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'பாட்னர்'. இதில் நடிகர் ஆதி நடிக்க அவருடன் இணைந்து நடிகை ஹன்சிகா மொத்வானி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை பாலக் லால்வானி, யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சபீர் அஹமத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
‘கோமாளி’ படப்புகழ் பிரதீப் ராகவ் படதொகுப்பு செய்திருக்கும் இப்படத்தின் சண்டைக்காட்சிகளை ‘பில்லா’ ஜெகன் அமைத்திருக்கிறார்.
ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரா...
இலங்கையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இரு நாட்களுக்கு டீசல் வாங்க யாரும் வர வேண்டாம் என சிலோன் பெட்ரோலிய நிறுவனம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மருந்துகள் இல்லை.. நாள் ஒன்றுக்கு 10 மணிநேரம் மின்வெட்டு என கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியில் இலங்கை மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர் .
எரிபொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதால், மின் உற்பத்தி மையங்களில், மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தினமும் 10 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, மருத்துவமனைகளுக்கு மட்டுமே மின்சாரம் வழங்கும் சூழல் நிலவுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் மின்சாரத்தை சேமிக்க அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நடைமுறைப்படுத்துமாறு ...
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலகெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், தற்போது மார்ச்.31, 2023 வரை கால அவகாசம் வழங்கி நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அதற்கு பல்வேறு நிபந்தனைகளும் விதித்துள்ளது.
பான் கார்டு என்பது அனைவரும் வாங்கியிருக்க வேண்டும் என்றாலும், வருமான வரி செலுத்துபவர்களுக்கு பான் கார்டு என்பது கட்டாயமான ஒன்றாகும்.
ஒருவர் கட்டும் வருமான வரி கணக்கிடப்படுவது பான் எண் அடிப்படையில்தான்.
அதேபோல், ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, நம்முடைய அனைத்து பயன்பாட்டிலும் அது தொடர்புடைய ஒன்றாக இருந்து வருகிறது.
வங்கி எண்ணுடன் ஆதார் இணைப்பு, நம்முடைய மொபைல் எண்ணுடன் ஆதார் இணைப்பு என்று பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியமாக இருந்து வருகிறது
அந்த வகையில், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய வருமான வரித்துறை...