வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

வருமானவரித்துறை விழாவுக்கு வராவிட்டால் ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து பிடிப்போம் – ரெய்டு மிரட்டலால் பயந்தாரா நயன்தாரா!?

வருமானவரித்துறை விழாவுக்கு வராவிட்டால் ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து பிடிப்போம் – ரெய்டு மிரட்டலால் பயந்தாரா நயன்தாரா!?

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    வருமான வரி துறை நிகழ்ச்சிக்கு நயன்தாரா போனதற்கு "ரெய்டு" பயமா?! தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்தோடு வலம் வருபவர் நயன்தாரா. ஆண்டுக்கு ஆண்டு வயசு கூடினாலும் தனது மார்க்கெட்டையும், சம்பளத்தையும் உயர்த்திக் கொண்டே போகும் நயன்தாராவுக்கு பொது நிகழ்ச்சிகள் என்றால் மட்டும் அலர்ஜி. பலகோடி சம்பளம் கொடுத்து தன்னை வைத்து படம் தயாரிக்கும் பட விழாக்களுக்கு கூட வர மாட்டார் நயன்தாரா என்பது பல ஆண்டுகளாக அவர் மீதான் குற்றச்சாட்டு. ஆனாலும் ரசிகர்கள் விருப்பத்தால் வேறு வழியின்றி நயன்தாரா பின்னால் ஓட வேண்டிய நிலைக்கு தமிழ் சினிமா தள்ளப்பட்டுள்ளது. பணம் மொத்தமாக வருகிறது சம்பளம் கேட்டது கிடைக்கிறது என்பதற்காக தனது நெற்றிக்கண் படத் தயாரிப்பையே நிறுத்தி விட்டு ஐசரி கணேஷ் தயாரிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்க போனார் நயன்தாரா. இந்த படத்தில் நயனுக்கு...
வாடிகனில் கொரானா பீதி பிரார்த்தனையை தனிமையில் நடத்திய போப்!

வாடிகனில் கொரானா பீதி பிரார்த்தனையை தனிமையில் நடத்திய போப்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உலகையே பயங்கர பீதிக்குள்ளாக்கியுள்ள கொரானா வைரஸ் சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடான இத்தாலிதான் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு இந்த கொடிய வைரசுக்கு இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 7,375 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற சுதந்திர நாடான வாடிகன் நகரிலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். வைரஸ் பரவாமல் தடுக்க இத்தாலி அரசு மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கைகளை வாடிகன் நகரமும் பின்பற்றி வருகிறது. 108 ஏக்கர் பரப்பளவு கொண்ட வாடிகன் நகரில் அருங்காட்சியகங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மேலும் அங்குள்ள தேவாலயங்களில் நடத்தப்படும் பிரார்த்தனை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வாடிகன் நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. ...
அரசு வழங்கும் மானிய விலை ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிக்கும் வயது வரம்பு திடீர் உயர்வு!

அரசு வழங்கும் மானிய விலை ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிக்கும் வயது வரம்பு திடீர் உயர்வு!

HOME SLIDER, NEWS, politics
    மானிய விலையில் வழங்கப்படும் இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு உயர்வு..! மானிய விலையில் அரசு வழங்கும், இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். கோவை குளத்துப்பாளையம் பகுதியில், மகளிர் தின விழாவில், நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கி பேசிய அவர், மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு கடன் உதவிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும், பெண்களுக்கு மதிப்பு அளித்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும், தமிழக அரசு மகளிருக்கு மானிய விலையில் வழங்கி வரும், இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, 40-லிருந்து 45 ஆக உயர்த்தபட்டுள்ளதாகவும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்....
வால்டர் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் – சிபிராஜ்

வால்டர் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் – சிபிராஜ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்க சிபிராஜ் நடிக்கும் “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். சத்யராஜின் திரைவாழ்வில் புகழ்மிக்க படம் “வால்டர் வெற்றிவேல்”. தற்போது அதே “வால்டர்”தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக கலக்கியுள்ளார். திரில்லர் பாணியில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படம் வெளியாகும் முன்பே படத்தின் சாட்டிலைட் உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டை முன்னிட்டு படக்குழு இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் பேசியது... இந்தப்படத்தை பற்றி நிறைய பேசலாம். முன்பே இசை விழாவில் இப்படம் குறித்து பேசியுள்ளோம். படத்தில் முக்கியமான சமூககருத்தை பற்றி கூறியிருக்கிறோம். நீங்கள் அனைவரும் மக்களுக்கு அதனை எடுத்து...
தமிழகத்தில் இருந்து மேல்சபை எம்பிக்களாக திமுக, அதிமுக சார்பில் 6 பேர் தேர்வு!

தமிழகத்தில் இருந்து மேல்சபை எம்பிக்களாக திமுக, அதிமுக சார்பில் 6 பேர் தேர்வு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் இருந்து மேல்சபை எம்பிக்களாக திமுக, அதிமுக சார்பில் 6 பேர் தேர்வு! தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற மேல்சபை எம்பிக்கள் 6 பேரின் பதவிகாலம் முடிவடைந்ததால் தற்போது உள்ள உறுப்பினர்கள் அடிப்படையில் திமுக, அதிமுக சார்பில் தலா 3 பேரை தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டது. திமுக சார்பில் திருச்சி சிவா, இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் அறிவிக்கபட்டனர். அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை இவர்களோடு ஜி.கே.வாசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜி.கே.வாசன், தம்பிதுரை இருவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்....
பொன்னியின் செல்வன் படத்தில் வில்லனா விக்ரம்பிரபு!?

பொன்னியின் செல்வன் படத்தில் வில்லனா விக்ரம்பிரபு!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    பிரபல எழுத்தாளர் கல்கியின் மிகப் பிரபலமான "பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதற்கு முன் எம்.ஜி.ஆர்.உட்பட பலர் இந்த நாவலை படமாக்க முயற்சித்து முடியாமல் போனது. மணிரத்னம் இயக்கும் இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக ரூ.800 கோடி செலவில் இந்த படத்தை 2 பாகங்களாக உருவாக்குகிறார்கள். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்க...
CAA, NBR சட்டங்களால் உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயர் குறைந்து வருகிறது – தெலங்கானா முதல்வர் ஆதங்கம்!

CAA, NBR சட்டங்களால் உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயர் குறைந்து வருகிறது – தெலங்கானா முதல்வர் ஆதங்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  CAA, NBR சட்டங்களால் உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயர் குறைந்து வருகிறது - தெலங்கானா முதல்வர் ஆதங்கம்! தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) மற்றும் மக்கள் தொகை பதிவேடு (என்.பி. ஆர்) குறித்து நடந்த விவாதத்தில் முதல்-மந்திரி சந்திரசேகரராவ் பேசியதாவது:- மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக வலிமையான தீர்மானம் கொண்டுவந்து நாட்டுக்கு செய்தி சொல்ல வேண்டும். என்னிடம் கூட பிறப்புச் சான்றிதல் கிடையாது. அப்படி இருக்கும் போது நான் எப்படி என் தந்தையின் பிறந்த இடம், பிறந்த தேதியை நான் எப்படி நிரூபிக்க முடியும். எனக்கு கூட என்.பி.ஆரை நினைத்து கவலையாக இருக்கிறது. நான் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள என்னுடைய வீட்டில் பிறந்தேன். அப்போது ஆஸ்பத்திரிகள் கி...
புதிதாக கட்டப்பட்ட கால்வாய் இடிந்து விழுந்ததால் அமைச்சர் நிகழ்ச்சியில் வாய்க்காலில் விழுந்த மதுரை அதிமுகவினர்!

புதிதாக கட்டப்பட்ட கால்வாய் இடிந்து விழுந்ததால் அமைச்சர் நிகழ்ச்சியில் வாய்க்காலில் விழுந்த மதுரை அதிமுகவினர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
    புதிதாக கட்டப்பட்ட கால்வாய் இடிந்து விழுந்ததால் அமைச்சர் நிகழ்ச்சியில் வாய்க்காலில் விழுந்த மதுரை அதிமுகவினர்! மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்ட நிகழ்ச்சியின் போது புதிதாக கட்டப்பட்டுள்ள கால்வாய் இடிந்து விழுந்ததில் அதிமுக கட்சியினர் வாய்க்காலில் விழுந்தனர். மதுரை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகர் முழுவதும் ஆங்காங்கே ரவுண்டானா அமைக்கப்பட்டு அங்கு மதுரையின் தொன்மையையும் வீரத்தையும் காட்டக்கூடிய சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை செல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் கபடி வீரர்களின் விளையாட்டு சிலைகள் வைக்கப்பட உள்ளது . இதன் தொடக்க விழா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ...
காவல்துறைக்கு புதிய வாகனங்கள் – முதல்வர் வழங்கினார்

காவல்துறைக்கு புதிய வாகனங்கள் – முதல்வர் வழங்கினார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ரூ.95.58 கோடி மதிப்பிலான 2,271 புதிய வாகனங்களை காவல்துறையின் பயன்பாட்டிற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் புதிய வாகனங்களின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.....
சந்தீப் கிசன் – ரெஜினா கசான்ட்ரா நடிக்கும்  ” அசுரவம்சம் “

சந்தீப் கிசன் – ரெஜினா கசான்ட்ரா நடிக்கும்  ” அசுரவம்சம் “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
    சந்தீப் கிசன்  - ரெஜினா கசான்ட்ரா நடிக்கும்  " அசுரவம்சம் " லட்சுமி வாசந்தி புரொடக்ஷன் சார்பாக A.வெங்கட்ராவ் மற்றும் S பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பாக  சேலம் B.சேகர் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் " அசுரவம்சம் " 2018 ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற " நட்சத்திரம்  " படத்தின் தமிழாக்கமே இந்த " அசுரவம்சம் " இந்த படத்தில் சந்தீப் கிசன் கதாநாயகனாக நடித்துள்ளார், கதாநாயகியாக ரெஜினா கசான்ட்ரா நடித்துள்ளார். மற்றும் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா சாய் தருண் தேஜ், பிரகயா ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு  - ஸ்ரீகாந்த் நரோஜ் இசை - பிம்ஸ் சிசிரோலேயோ பாடல்கள்  -  முருகானந்தம், வலங்கைமான் நூர்தீன், ஆவடி சே.வரலட்சுமி, சங்கர் நீதிமாணிக்கம், பழமொழி பாலன், எழிலன்பன் எடிட்டிங்  - சிவா Y பிரசாத் நடனம்  - ஸ்ரீதர் இயக்கம் - கிருஷ்ண வம்சி வசனம் - A.R.K.ரா...