நாடாளுமன்றத்தில் மு.க.ஸ்டாலின்... உற்சாகமாக செல்பி எடுத்துக்கொண்ட எம்.பி.க்கள்..
தமிழக முதலமைச்சர் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தை சுற்றிப் பார்த்தார். அப்போது எம்.பி.க்கள் அவருடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துகொண்டனர்.
இதை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்திற்குள் வந்த மு.க.ஸ்டாலின் உடன் தமிழக எம்.பி.க்களான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோனு ஆகியோர் புகைப்படம் எடுத்துகொண்டனர்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா மு.க.ஸ்டாலின் உடன் புகைப்படம் எடுத்துகொண்டார்.
Tamil Nadu CM MK Stalin in his meeting with PM Modi today discussed the economic condition in Sri Lanka. He proposed to send relief materials including food and medicines from Tamil Nadu ...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசுமுறை பயணமாக கடந்த 24-ம் தேதி மாலை துபாய் சென்றார்.
அங்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகத்துக்கு சென்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பின், அங்கு நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியில் தமிழகத்திற்கான அரங்கை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து, துபாயில் உள்ள ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அவரது முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டன.
துபாயில் இருந்து அபுதாபி புறப்பட்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்து உரையாடினார். அவரது முன்னிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மாலையில் அபுதாபியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு ...
நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் மசோதா நிறைவேற்றும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. சுயேட்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
மாநில காங்கிரஸ் தலைவராக தாம் தொடர்ந்தால், எந்த எம்எல்ஏக்களின் வாரிசுகளும் துறைத் தலைவர்களாக முடியாது என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் நெஞ்சுவலி காரணமாக அருப்புகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 மாத பரோலில் வெளிவந்த ரவிச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டம் சூரப்ப நாயக்கன்பட்டியில் இருந்தார்.
அரசு பேருந்து ஓட்டுனர்கள் பணியின் போது செல்போன் வைத்திருக்கக் கூடாது என்று நாகப்ப...
நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி ஊர்வலம், பேரணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 11-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி, சென்னை மாநகராட்சி மன்றக் கூடம் புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் அமலான பின்பு கடந்த 7 நாட்களில் சென்னையில் மட்டும் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் 699 மூத்த அதிகாரிகள் வட்டார பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நேற்று ஒரே நாளில் 27,365 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை ...
அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு இந்தியா முழுவதுமுள்ள 37 அரசியல் கட்சி தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேல்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும், அமமுகவுக்கு குக்கர் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
மருத்துவப் படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், முதற்கட்டமாக ஆயிரத்து 429 மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் பகுதியில் இன்று இரண்டு ஆடுகளை கொன்று சிறுத்தை அட்டகாசம் செய்துள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நம்பியூர் காந்தி நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெ...
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டியையொடி,நேற்று ஒரே நாளில் ரூ. 317.08 கோடி அளவிற்கு டாஸ்மாக் மது பானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மாட்டு பொங்கல் விழாவும், திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
அடுத்த 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைக விடுமுறைள் இயங்காது என்பதால், மது பிரியர்கள் பெட்டிப்பெட்டியாக மதுபானங்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று ஒரே நாளில் ரூ.317 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக மதுரையில் ரூ68.76 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் மண்டல வாரியாக சென்னையில் ரூ.59.28 கோடிக்கும், ...
முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பெயரில், மதுரையில் சர்வதேச தரத்தில் நூலகம் அமைக்கப்படும் என கடந்த சட்டப் பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
மதுரையில் கலைஞர் நினைவு நூலகத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டதற்கு, வேதனை தெரிவித்து அவரது ரசிகர்கள் கோவையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து இன்று முதல் வியாழக்கிழமை வரை நான்காயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது
பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தயாராகி வரும் நிலையில், 300 மாடுபிடி வீரர்கள், 150 பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட...
கொரோனா பரவலைத் தடுக்க பொங்கலுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தேர்தல் நடக்கவுள்ள உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம் நீக்கம்.
முன்களப் பணியாளர்கள் மற்றும் முதியோருக்கு இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சென்னையில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ராமேசுவரம் கோவிலில் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையால் போலீஸ் குவிப்பு.
ஊரடங்கு நீட்டிப்பா? - கூடுதல் கட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.
சென்னையில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சென்னையில் சனிக்கிழமை 5 ஆயிரத்து 98 பே...
* தமிழகம் முழுவதும் நேற்று இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இன்று முதல் 3 நாட்களுக்கு வழிபாட்டு தலங்கள் மூடல்.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் சுமார் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 117 பேரும் குணமடைந்துள்ளனர்.
சென்னை குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் கொரோனா தொற்று பாதித்த 81 மாணவர்களில் 66 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்த மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக சனிக்கிழமை அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக இருப்பதா...