புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: ஸ்டாலின்

பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு திமுகவுக்கு அழைப்பு இல்லை – டி.ஆர்.பாலு பகீர்

பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு திமுகவுக்கு அழைப்பு இல்லை – டி.ஆர்.பாலு பகீர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி திமுகவுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தலில் 303 இடங்களை பிடித்து நரேந்திர மோடி தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழா வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவரை தொடர்ந்து பல்வேறு மந்திரிகளும் பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க 8 நாடுகளின் தலைவர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு வந்தத...
சனிக்கிழமை மாலை அறிவாலயத்தில் வெற்றி பெற்ற எம்.பி க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில்…

சனிக்கிழமை மாலை அறிவாலயத்தில் வெற்றி பெற்ற எம்.பி க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில்…

Uncategorized
  சனிக்கிழமை மாலை அறிவாலயத்தில் வெற்றி பெற்ற எம்.பி க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில்... தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில் 38 பாராளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. பதிவான வாக்குகளில் 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 481 பதிவான வாக்குகளில் 51.5 சதவீத வாக்குகளை திமுக கூட்டணி பெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நாளை சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் என திமுக வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கனிமொழி எம்.பி.உட்பட வெற்றி பெற்ற சில எம்.பி.க்கள் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்....
முதல் முறையாக போட்டியிட்ட எல்லா தொகுதியிலும் திமுக வெற்றி..!

முதல் முறையாக போட்டியிட்ட எல்லா தொகுதியிலும் திமுக வெற்றி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முதல் முறையாக போட்டியிட்ட எல்லா தொகுதியிலும் திமுக வெற்றி..! தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. அதிலும் தி.மு.க. போட்டியிட்ட 19 இடங்களிலும் அக்கட்சி வேட்பாளர்களே வெற்றி வாகை சூடினார்கள். அதேபோல், தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளில் 8-ல் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தோல்வி அடைந்தார். புதுச்சேரியை காங்கிரஸ் கைப்பற்றியது. அதேபோல், தி.மு.க. கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை போட்டியிட்ட தலா 2 இடங்களிலும் வெற்றி வாகை சூடியது. அதேபோல், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை போட்டியிட்ட தலா ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ...
தலை வணக்கம் தமிழகமே! – ஸ்டாலின் நன்றி

தலை வணக்கம் தமிழகமே! – ஸ்டாலின் நன்றி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தலை வணக்கம் தமிழகமே! - ஸ்டாலின் நன்றி நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம் என்று குறுஞ்செய்தி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களில் மகத்தான வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணி தமிழகத்தில் மகத்தான வெற்றி பெற்றதற்கு வாழ்த்து சொல்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக தலைவர் வைகோ சந்தித்தார். அப்போது ஸ்டாலினை கட்டி அணைத்து வாழ்த்தினார் வைகோ....
காவிரி நீரைப் பெறுவதில் அ.தி.மு.க அரசு முற்றிலும் கோட்டை விட்டு- மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறது – மு.க.ஸ்டாலின் ஆவேசம்

காவிரி நீரைப் பெறுவதில் அ.தி.மு.க அரசு முற்றிலும் கோட்டை விட்டு- மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறது – மு.க.ஸ்டாலின் ஆவேசம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அ.தி.மு.க அரசு விவசாயிகளை எட்டு ஆண்டுகளாக வஞ்சித்து வருவதை தொடராமல், தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் திமுக் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்குத் தேவையான நீர்ப்பாசனத்திற்கு மேட்டூர் அணையை திறந்துவிட நிர்ணயிக்கப்பட்டுள்ள ஜூன் 12 ஆம் தேதி திறப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு காலம் கழிப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளிலும் உரிய காலத்தில் குறுவைப் பாசனத்திற்கு நீர் திறந்து விட வழிகாணாமல் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து- அவர்களின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு சூறையாடி அழித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்ப...
கருத்து கணிப்புகளில் கூடாரம் காலியாகும் அதிமுக… நாற்காலி பிடிக்கும் திமுக..!

கருத்து கணிப்புகளில் கூடாரம் காலியாகும் அதிமுக… நாற்காலி பிடிக்கும் திமுக..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தது. குறிப்பாக தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி இருவரின் மறைவுக்கு பின் நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் என்பதால் அதிகம் கவனம் பெற்றது. திமுக ஸ்டாலின் தலைமையில் ஒரு கூட்டணியையும், அதிமுக பாஜகவுடன் ஒரு கூட்டணியும், தினகரனின் அமமுக தனியாகவும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் தனியாகவும், நாம் தமிழர் சீமான் தனியாகவும் களத்தில் நின்றன. தேர்தல் வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி நடை பெற உள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை நிலவுவதால் மாநில கட்சிகள் அதிக அளவில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அதோடு மக்கள் விரோத நடவடிக்கைகள் காரணமாக மத்தியில் இருந்த மோடி அரசுக்கு இணக்கமாக செயல்பட்டதோடு, மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்...
மோடிக்கு எதிராக அணி திரளும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு கடிதம் அனுப்பிய சோனியா காந்தி..!

மோடிக்கு எதிராக அணி திரளும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு கடிதம் அனுப்பிய சோனியா காந்தி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் அனுப்பி வைத்தார் வரும் 23ஆம் தேதி மாலை டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து சோனியா காந்தி கடிதம் எழுதி இருக்கிறார். காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் வரும் 23ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.. காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்கும் 23ம் தேதி தான் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பாஜ அரசின் மீது நாடுமுழுக்க கடும் அதிருப்தி நிலவி வந்தது. இந்த தேர்தலிலும் மோடி அரசு படு தோல்வி அடையும் என கூறப்படும் நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது....
மோடியுடன் நான் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் – தமிழிசைக்கு சவால் விட்ட ஸ்டாலின்

மோடியுடன் நான் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் – தமிழிசைக்கு சவால் விட்ட ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மோடியுடன் நான் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - தமிழிசைக்கு சவால் விட்ட ஸ்டாலின் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பா.ஜ.க.வுடன் பேசியதாக தமிழிசை சவுந்தரராஜன் நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்கு ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடியுடன் நான் பேசியதாக பச்சைப் பொய் கூறிய தமிழிசைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை இந்த அளவு தரம் தாழ்த்திக் கொண்டது வேதனை அளிக்கிறது. ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதில் இரட்டிப்பு உறுதியாக உள்ளேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்....
பாஜகவுடன் மு.க.ஸ்டாலின் பேசிவருவது உண்மைதான் – தமிழிசை சவுந்தரராஜன்

பாஜகவுடன் மு.க.ஸ்டாலின் பேசிவருவது உண்மைதான் – தமிழிசை சவுந்தரராஜன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பாஜகவுடன் மு.க.ஸ்டாலின் பேசிவருவது உண்மைதான் - தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் பேசியதாவது: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தி, சந்திரசேகர் ராவிடம் பேசியதை போல் மறுபுறம் பிரதமர் மோடியுடனும் பேசி வருகிறார் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதை அறிந்துள்ளதாலும், பதவி, பசி காரணத்தாலும் பா.ஜ.க.வுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்....
சட்டசபையில் மீண்டும் பரபரப்பு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சட்ட பேரவை செயலாளரிடம் திமுக மனு

சட்டசபையில் மீண்டும் பரபரப்பு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சட்ட பேரவை செயலாளரிடம் திமுக மனு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அ.தி.மு.க.வில் உள்ள 114 எம்.எல்.ஏ.க்களில் விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்தனர். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்ட 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து புகார் மனு கொடுத்தார். கொறடா ராஜேந்திரன் அளித்துள்ள புகார் குறித்து விளக்கம் கேட்டு தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசனிடம் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி மனு அளித்தார். ஏற்கனவே, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நோட்டீஸ் கொடுத்தால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என ...