செவ்வாய்க்கிழமை, ஜூலை 14
Shadow

Author: Kodanki

இலங்கையில் புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச உத்தரவு!

இலங்கையில் புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச உத்தரவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் அமல்படுத்தப்பட்ட 36 மணி நேர ஊரடங்கு இன்று காலை முடிவுக்கு வந்தது. இதற்கிடையே, இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இலங்கை அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நேற்று பதவி விலகினர். இதையடுத்து, இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்தார். அமைச்சர் பதவிகளை ஏற்று பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவ வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். இதில்,  நிதி அமைச்சராக அலி சப்ரியும், கல்வி அமைச்சரா...
இலங்கையின்  நெருக்கடியை தீர்க்க அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் அழைப்பு!

இலங்கையின் நெருக்கடியை தீர்க்க அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் அழைப்பு!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் அமல்படுத்தப்பட்ட 36 மணி நேர ஊரடங்கு இன்று காலை முடிவுக்கு வந்தது. இதற்கிடையே, இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இலங்கை அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நேற்று பதவி விலகினர். இந்நிலையில், இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். அமைச்சர் பதவிகளை ஏற்று பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவ வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
வைரலாகும் சபரி படத்தின் போஸ்டர் !

வைரலாகும் சபரி படத்தின் போஸ்டர் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், தற்போது சபரி என்ற புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். அனில்காட்ஸ் இயக்கும் இப்படத்தை மஹா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் திரு.மகேந்திர நாத் கோண்ட்லா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் வரலட்சுமி சரத்குமார் கலந்துக் கொண்டுள்ளார். காதல் மற்றும் கிரைம் கலந்த  திரைப்படமாக சபரி படம் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், சஷாங்க் சித்தம்ஷெட்டி, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கோபி சுந்தரின் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக நானி சமிடிசெட்டியும், கலை இயக்குனராக ஆசிஷ் தேஜா புலாலாவும், படத்தொகுப்பாளராக தர்மேந்திரா காக்கர்லால் ஆகியோரும் பணியாற்றுகின்றனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு உகாதி தினத...
ரஜினிக்கு மகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன்!

ரஜினிக்கு மகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், தலைவர் 169 என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் ஆசையை இயக்குனர் நெல்சன் இப்படத்தின் மூலம் பூர்த்தி செய்யவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
கீவ் புறநகரில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட உடல்கள்!

கீவ் புறநகரில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட உடல்கள்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ரஷியா தனது தாக்குதலை தொடங்கியது. வான்வெளி, தரைவழி கடல்வழி என பலமுனைகளில் தனது தாக்குதலை உக்கிரமாக நடத்தி வருகிறது. இந்த போர் ஆரம்பித்து 6 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல நகரங்களை கைப்பற்ற ரஷியா கடுமையாக போராடி வருகிறது. ஆனால் உக்ரைன் படை வீரர்களும் அவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என எதிர்த்து சண்டையிடுகின்றனர். இதனால் ரஷியா படைகளும் திணறி வருகிறது. கீவ் புறநகர் பகுதியான புச்சா நகரை ரஷியா படைகள் கைப்பற்றினார்கள். இந்த நிலையில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதியில் ஆதிக்கம் செலுத்த ரஷியா முழு கவனம் செலுத்தி வருகிறது. போர் உச்சகட்டதை எட்டி உள்ள நிலையில் புச்சா நகரை மீண்டும் உக்ரைன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த நகரை விட்டு ரஷியா...
இலவச திட்டங்களால் இலங்கை போல் இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்!

இலவச திட்டங்களால் இலங்கை போல் இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள்
மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா, அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, பெரிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க புதிய கண்ணோட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பிரதமர் வலியுறுத்தினார். இந்நிலையில், சட்டசபை தேர்தல் நடந்துமுடிந்த மாநிலம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள இலவச திட்டங்கள் பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாதவை. இத்திட்டங்கள் மூலம் இலங்கையில் ஏற்பட்டதை போல் பொருளாதார நெருக்கடி நம் நாட்டிலும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்....
ஆண்ட்ரியாவின் “நோ எண்ட்ரி” புதுரகமாம்!

ஆண்ட்ரியாவின் “நோ எண்ட்ரி” புதுரகமாம்!

Uncategorized
  நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், “நோ எண்ட்ரி” ஒரு புது அனுபவத்திற்கு தயாராகுங்கள் ! இயக்குநர் அழகு கார்த்திக் இயக்கத்தில் ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடிக்க, புதுமையான திரில்லராக, இந்தியாவில் முதன்முதலாக, முழுக்க முழுக்க சிரபுஞ்சியில் படமாக்கப்பட்ட படம் “நோ எண்ட்ரி”. சுற்றுலாவிற்காக மேகாலயாவின் சிரபுஞ்சி செல்லும் ஒரு ஜோடி அங்கு தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது மனிதர்களை வேட்டையாடும் நாய்க்கூட்டத்திடம் மாட்டிக்கொள்ளும் அந்த ஜோடி அங்கிருந்து எப்படி தப்பிகிறது, என்பதை பரபர திரைக்கதையில் திரில் பயணமாக சொல்லும் படம் தான் “நோ எண்ட்ரி”. மேகலயாவில் உள்ள சிரபுஞ்சி எனும் சுற்றுலா தளம் இந்தியாவின் சிறப்புமிகு இடங்களில் ஒன்று அதன் காடுகளையும், மலைகளையும், மலைகளுக்கு நடுவே புதைந்து கிடக்கும் குகைகளையும் இந்த படமெங்கும் நீங்கள் பார்க்கலாம். காட்டுக்கு நடுவே கட்டப்பட்ட மூங...
வில்லனின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் புதிய படம்!

வில்லனின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் புதிய படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சரண்ராஜ் இயக்கத்தில், தேவ் சரண்ராஜ் அறிமுகமாகும் புதிய படம். Soni Sri Production வழங்கும், “Production No 1“. தென்னிந்திய திரைத்துறையின் பிரபல நடிகர் சரண்ராஜ் இரண்டாவது மகன், தேவ் சரண்ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார். பெயர் சூட்டப்படாத இந்த புதிய திரைப்படம் “Production No 1” என தயாராகிறது. Soni Sri Production நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி உட்பட பல 9 மொழிகளில் 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சரண்ராஜ், நாயாகன், குணசித்திரம், வில்லன் என எந்த கதா பத்திரத்திலும் தனி முத்திரை பதித்து, தனக்கென மக்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர். ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் இப்படம் மூலம் இயக்குநராக கால் பதிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் அவரே எழுதுகிறார். பைலட்டாக இருந்து, கோவிட் காலத்தில் பணியினை விட்டு, நடிப்பு கல்லூரியில...
கடும் எதிர்ப்பால் சமூக வலைதளங்களுக்கு தடை நீக்கம்… தொடரும் முழு ஊரடங்கு… பதட்டத்தில் இலங்கை!

கடும் எதிர்ப்பால் சமூக வலைதளங்களுக்கு தடை நீக்கம்… தொடரும் முழு ஊரடங்கு… பதட்டத்தில் இலங்கை!

HOME SLIDER, World News, உலக செய்திகள்
கடும் எதிர்ப்பால் சமூக வலைதளங்களுக்கு தடை நீக்கம்... தொடரும் முழு ஊரடங்கு... பதட்டத்தில் இலங்கை! இலங்கையில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டதோடு, சமூகவலைதளங்களுக்கும் தடை விதிக்கப்பட்டதால் அமைச்சர் நமல் ராஜபக்சே உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சமூகவலைதளங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் தவித்து வரும் பொதுமக்கள், அரசின் அவசர நிலை பிரகடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, நாடு முழுவதும் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், கொழும்பு வீதியில் படுத்து உறங்கி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்ற போராட்டங்கள் நாடு முழுவதும் பரவும் என்ற அச்சமடைந்துள...
மயங்கி விழுந்த சீமான்… உடல் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

மயங்கி விழுந்த சீமான்… உடல் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளுக்காக ரயில்வே துறைக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்துவதற்கு ரயில்வே துறையினர் அப்பகுதியில் உள்ள வீடுகளை அகற்றுவதற்காக ஜேசிபி எந்திரங்களை கொண்டு வந்தனர் பொதுமக்கள் வீடுகளை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி ஜேசிபி எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இடிக்கப்படும் வீடுகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென்றும் அல்லது தமிழக அரசால் மாற்று இடம் வழங்குவதற்கு உறுதி அளித்தால் மட்டுமே தற்போது உள்ள வீடுகளை அகற்றுவதற்கு அனுமதி அளிப்போம் என்று கூறி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பகுதி மக்களை சந்தித்து பேசி வந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, மய...