செவ்வாய்க்கிழமை, ஜூலை 14
Shadow

Author: Kodanki

Ukraine war சமாதான தூதுவராக இந்தியா செயல்படலாம் – ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் கருத்து

Ukraine war சமாதான தூதுவராக இந்தியா செயல்படலாம் – ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் கருத்து

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே தீவிரமாக போர் நடைபெற்று வரும் சூழலில், இந்த விவகாரத்தில்  சமாதான தூதுவராக இந்தியா செயல்படலாம் என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரோ கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி தாக்குதல் நடத்த தொடங்கியது. போரை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று உலகநாடுகள் வலியுறுத்திய போதிலும், ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே, சமாதானத்தை ஏற்படுத்த பெலாரஸ் நாடு முயற்சி மேற்கொண்ட நிலையில், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போரை நடத்துகிறது. இவ்வாறு உக்ரைன் சேரும்பட்சத்தில் அது தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று ரஷ்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது இந்த இரு நாடுகளுக்கும் இந்த...
எஸ்சி/எஸ்டி பிரிவினரை இந்து பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் – திருமாவளவன் MP கோரிக்கை

எஸ்சி/எஸ்டி பிரிவினரை இந்து பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் – திருமாவளவன் MP கோரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
எஸ்சி/ எஸ்டி பிரிவு மக்களை இந்து பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்களை பூர்வ பௌத்தர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நாடாளுமன்றத்தில் இன்று கோரிக்கை வைத்தார். உத்தரப் பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த பழங்குடியின மக்களை எஸ்டி பட்டியலில் சேர்ப்பது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில்  இன்று தாக்கல் செய்யப்பட்டது. அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர்) ஆணைகள் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2022 (Constitution (Scheduled Castes and Scheduled Tribes) Orders (Second Amendment) Bill, 2022) என அழைக்கப்படும்  மசோதா மீது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன், எஸ்சி/ எஸ்டி மக்கள் மதமில்லா மண்ணின் மைந்தர்கள். இவர்களுக்கு மதமும் இல்லை சாதியும் இல்லை. ஆனால் இந்துக்கள்...
ஆர்.ஆர்.ஆர். படைக்கும் தொடர் சாதனை!

ஆர்.ஆர்.ஆர். படைக்கும் தொடர் சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், ஆர்.ஆர்.ஆர். புதிய வசூல் சாதனை படைத்துள்ளது. அதன்படி, ஆர்.ஆர்.ஆர். வெளியான ஒரு வாரத்தில் ரூ.710 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்....
’மன்மத லீலை’ படதிற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வெங்கட் பிரபு!

’மன்மத லீலை’ படதிற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வெங்கட் பிரபு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மன்மத லீலை’. வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படமான இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் உள்ளிட் நடிகைகள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மணிவண்ணன் எழுதியுள்ளார். இந்த படத்தின் கதை ஒரு இளைஞனின் வாழ்க்கையில் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் இரண்டு முக்கிய சம்பவங்களைப் பற்றியது என்றும் இயக்குனர் பாக்கியராஜின் 'சின்ன வீடு' திரைப்பட பாணியில் இருக்கும் என்றும் படத்தின் கதை குறித்து வெங்கட் பிரபு கூறியிருந்தார். பிரேம் ஜி இசையமைத்துள்ள இப்படத்தை ராக்ஃபோர்ட் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது....
’நமக்கு லவ் எல்லாம் செட் ஆகாது ,இது செட்டில் ஆகும் நேரம்’-யாஷிகாவின் திருமண பதிவு!

’நமக்கு லவ் எல்லாம் செட் ஆகாது ,இது செட்டில் ஆகும் நேரம்’-யாஷிகாவின் திருமண பதிவு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
2016-ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டு படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர், பல மாதங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறார். தற்போது, ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அவ்வப்போது ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி வருகிறார். இந்நிலையில், அவருடைய திருமணம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நான் திருமணம் செய்து கொள்வதை அறிவிப...
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆலியா பட்!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆலியா பட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட் பலர் நடித்து வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 25ஆம் தேதி வெளியானது. இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்ததால் இப்படம் அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது. விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இதில் ராம்சரணுக்கு ஜோடியாக சீதா என்கிற கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடித்திருந்தார். ஆலியா பட்டின் கதாப்பாத்திரம் பெரும் அளவிற்கு பேசப்படும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர், ஆனால் ஆர்.ஆர்.ஆர். படத்தில் ஆலியா பட்டுடைய கதாப்பாத்திரம் சில இடங்களில் மட்டுமே இடம்பெற்றதது. இதனால் அதிருப்தியடைந்த ஆலியா பட், தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். படம் தொடர்பான பகிர்ந்திருந்த அனைத்து ப...
விஷாலின் 34- பட  தகவல் வெளியாகி உள்ளது!

விஷாலின் 34- பட தகவல் வெளியாகி உள்ளது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஷால் நடித்த வீரமே வாகை சூடும் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. தற்போது லத்தி, துப்பறிவாளன்-2, மார்க் ஆண்டனி ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. லத்தி படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடக்கிறது. இது போலீஸ் கதை, துப்பறிவாளன் படத்தை இயக்கிய மிஷ்கின் விலகியதால் விஷாலே அந்த படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தொடர்ந்து நடிக்க உள்ள ‘மார்க் ஆண்டனி’ விஷாலுக்கு 33-வது படம். இந்நிலையில், விஷால் நடிக்க உள்ள 34-வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை முத்தையா டைரக்டு செய்ய இருப்பதாகவும், கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஷால் நடித்து 2016-ல் வெளியான மருது படத்தை முத்தையா இயக்கி இருந்தார். 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைகிறார்கள். இது அதிரடி சண்டை படமாக உருவாக இருப்பத...
ஆதிபுருஷ் படத்தின் இரண்டாம் பாகம்!

ஆதிபுருஷ் படத்தின் இரண்டாம் பாகம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபாசின் பாகுபலி படம் இரண்டு பாகங்களாக வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்துக்கு பிறகு பிரபாஸ் மார்க்கெட் எகிறியது. சம்பளமும் ரூ.100 கோடியாக உயர்ந்துள்ளது. பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷியாம் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது, எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ஈட்டவில்லை. தற்போது ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார். ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து இந்த படம் தயராகிறது. இதில் பிரபாஸ் ராமராகவும், சயீப் அலிகான் ராவணனாகவும், கிருத்தி சனோன் சீதையாகவும் நடிக்கின்றனர். ஓம் ராவத் இயக்குகிறார். தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியிட உள்ளனர். இந்த நிலையில் ஆதிபுருஷ் படம் திரைக்கு வந்ததும் அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபாசுடன் இயக்குனர் ஓம் ராவத் இதுகுறித்து பேசியதாகவும்,...
‘குடிபட்வா’ பண்டிகை கொண்டாட கொரோனா கட்டுப்பாடுகளை 100 சதவீதம் விலக்கிய  மாநிலம்!

‘குடிபட்வா’ பண்டிகை கொண்டாட கொரோனா கட்டுப்பாடுகளை 100 சதவீதம் விலக்கிய மாநிலம்!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள்
2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தன. கொரோனா பரவலின் போது மகாராஷ்டிரா அதிக அளவில் பாதிக்கப்பட்டது. அங்கு தொற்று பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. இந்நிலையில், பொது இடங்களில் நாளை (ஏப்.2) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. மகாராஷ்டிரா மாநில புத்தாண்டான ‘குடிபட்வா’ பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை முதல் பொது இடங்களில் பொது மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று முதல்வர் தாக்கரே தெரிவித்துள்ளார். “குடி பட்வா என்பது புத்தாண்டின் ஆரம்பம். புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கான நாள் இது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொடிய கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்த்துப...