ரசிகர்கள் முன்னிலையில் அரசியல் திட்டத்தை அறிவிக்கிறார் ரஜினிகாந்த்!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் உள்ளவர் ரஜினிகாந்த். இவருக்கு வயது வித்தியாசமின்றி பட்டிதொட்டியெங்கும், ரசிகர்கள் உள்ளனர். பெரியவர் முதல் குழந்தைகள் வரை இவரது நடிப்பு மற்றும் ஸ்டைலுக்கு ரசிகர்கள். திரைப்படங்களில் மட்டுமின்றி அவ்வப்போது பொது வெளியிலும் அரசியல் கருத்துக்களை கூறியவர் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்தின் இந்த நடவடிக்கைகளால் அவர் அரசியலில் ஈடுபட போகிறார் என்ற பேச்சு 1990கள் முதலே இருந்தது. ஆனால் ரஜினிகாந்த் இதுவரையில் அந்த விஷயத்தில் பிடிகொடுக்கவேயில்லை. நடிப்பு மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டையும் மட்டும் இரு கண்களாக பாவித்து வருகிறார் ரஜினிகாந்த்
இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிப்பு துறையில் இருந்து ஓரளவுக்கு விலகி, அரசியலில் இறங்க உள்ளதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில், கடந்த 5 நாட்களாக ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த். டிசம்பர் 31ம் த...









