சனிக்கிழமை, ஜூலை 18
Shadow

Author: Kodanki

மு.க.ஸ்டாலினின் உடல் நலம் குறித்து தொலைபேசியில் நலம் விசாரித்த பிரதமர் மோடி

மு.க.ஸ்டாலினின் உடல் நலம் குறித்து தொலைபேசியில் நலம் விசாரித்த பிரதமர் மோடி

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த செவாய்க்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டார் இந்த நிலையில் 2 நாட்கள் தனிமைபடுத்தி கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொடர்பான அறிகுறிகள் குறித்து மு.க ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது என காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று அவர் வீடு திரும்புவார் என திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலினின் உடல் நலம் குறித்து தொலைபேசியில் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். இதுகுறித்து பிரதமருக்கு நன்றிய கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் நன்கு குணமடைந்து வருவதாக தெரிவித்தார். மேலும் சென்னையில் வரும் ஜூலை 28ஆம் தேதி துவங...
தேஜாவு ட்ரைலரை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்!!!

தேஜாவு ட்ரைலரை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்!!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தேஜாவு ட்ரைலரை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்!!! அருள்நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் தேஜாவு படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலரை வெளியிட்டார் உதயநிதி ஸ்டாலின். அதன் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அறிமுக அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘தேஜாவு’. மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன், 'மைம்' கோபி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம், வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலரை இன்று நடிகரும், தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இந்த படத்தின் நாயகன் அருள்நிதி, தயாரிப்பாளர் விஜய் பாண்டி, இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன், ரெட் ஜ...
கொடநாடு வழக்கு- ஜெயலலிதா கார் ஓட்டுநரிடம் தனிப்படை விசாரணை!

கொடநாடு வழக்கு- ஜெயலலிதா கார் ஓட்டுநரிடம் தனிப்படை விசாரணை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறுவிசாரணை நடந்து வருகிறது. இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் பழனிசாமி, புதுச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரான நவீன் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் 3-வது நாளாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து, நேற்று மதுரையை சேர்ந்த டெக்ஸ்டைல் அதிபரான லாஜி வோரோவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் தனிப்படை இன்று விசாரணை நடத்தி வருகிறது. மன்னார்குடி சேரம்குளத்தை சேர்ந்த குணசேகரனை கோவையில் தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். கனகராஜ் குறித்து ஜெயலலிதாவிடம் சிறிது காலம் கார் ஓட்டுநராக இருந்...
அருள்நிதி படத்தின் புதிய அப்டேட்!

அருள்நிதி படத்தின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி, நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இந்த படத்தில் ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிஸ்டரி திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் அருள்நிதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் தேஜாவு திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வருகிற ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதனுடன் ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகி...
மனிதர்களை விட பிசாசு உன்னதமானது.. சீனு ராமசாமி பதிவு!

மனிதர்களை விட பிசாசு உன்னதமானது.. சீனு ராமசாமி பதிவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், 'பிசாசு.' அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களை கவர்ந்து வைரலானது. பிசாசு 2 திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மனிதர்களை விட மிஸ்கி...
இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யா தான் பொறுப்பு- உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!

இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யா தான் பொறுப்பு- உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய முக்கிய தந்திரத்தில் ஒன்று பொருளாதார நெருக்கடி உருவாக்குவதாகும். விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறு காரணமாக உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை அனுபவிக்கும் பல நாடுகள் ரஷியாவின் நிகழ்ச்சி நிரலை அனுபவித்துள்ளனர் என்று ஜெலென்ஸ்கி கூறினார். சியோலில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் அண்மையில் உரையாற்றியபோது, ​​இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எடுத்துரைத்த அவர், "அதிர்ச்சியூட்டும் உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஒரு சமூக பிளவுக்கு வழிவகுத்தது. அது எப்படி முடிவடையும் என்பது இப்போது யாருக்கும் தெரியாது" என்றார்....
“மஹா” திரைப்பட இசை  வெளியீடு !

“மஹா” திரைப்பட இசை வெளியீடு !

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
Etcetera Entertainment சார்பில் திரு மதியழகன் மற்றும் Malik Streams Corporations (Production & Distribution) சார்பில் தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் ஆகியோர் தயாரிப்பில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அவரது 50 வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் “மஹா”. இயக்குநர் U.R. ஜமீல் இயக்கத்தில் நடிகர் STR சிம்பு மிக முக்கியமான கேமியோ பாத்திரத்தில் நடிக்க, நடிகர் ஶ்ரீகாந்த் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பரபர திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் K ராஜன் பேசியதாவது.., மஹா திரைப்படம் ஒரு மகளுக்கும், தாய்க்கும் ...
சிஎன்இராமமூர்த்தி எழுதிய “வன்னிய இனத்துக்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்” என்ற வரலாற்று ஆவண புத்தகத்தை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டார்!

சிஎன்இராமமூர்த்தி எழுதிய “வன்னிய இனத்துக்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்” என்ற வரலாற்று ஆவண புத்தகத்தை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டார்!

HOME SLIDER, NEWS, Photos, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
  #வன்னியஇனத்திற்கானசமூகநீதியும்திராவிடமுன்னேற்றக்கழகமும்" #வன்னியர்  கூட்டமைப்பு மற்றும் #அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவன தலைவர் #சிஎன்இராமமூர்த்தி அவர்கள் எழுதிய "வன்னிய இனத்துக்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்" என்ற வரலாற்று ஆவண புத்தகத்தை மாண்புமிகு தமிழ்நாடு #முதல்வர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டார். தமிழகத்தில் மிகப் பெரும்பான்மையான மக்களை கொண்ட சமூகமான வன்னிய மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்னென்ன நன்மைகள் செய்துள்ளது, எப்போதெல்லாம் செய்துள்ளது என்பதையும், அதற்கு வன்னியர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி என்னவெல்லாம் முயற்சிகள் எடுத்தார் என்பதையும் ஆதாரப்பூர்வமாக ஆவணங்களுடன் "வன்னிய இனத்திற்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்" என்ற தலைப்பில் ஒரு வரலாற்று ஆவண நூலை சி.என்.இராமமூர்த்தி எழுதி இரு...
உறியடி விஜய் குமார் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு!

உறியடி விஜய் குமார் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சேத்துமான் திரைப்படம் வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் அடுத்து இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் உறியடி, உறியடி 2 படங்களை எழுதி, இயக்கி, நடித்தவரும், சூரரை போற்று படத்திற்கு வசனம் எழுதியவருமான விஜய் குமார் நடிக்கிறார். இதன் கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். மேலும் திலீபன், பாவெல் நவகீதன், மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் விஜய் குமார் இணைந்துள்ளார். இப்படம் கிராமப்புற பின்னணியில் அரசியல், ஆக்‌ஷன், காதல், கலந்த குடும்ப பாங்கான திரைப்படமாக உருவாகிறது. இந்த படத்திற்கு எழுத்த...
சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ பட பாடல்கள் வெளியீடு!

சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ பட பாடல்கள் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ்சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்யேக அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித் குமார், இயக்குநர் அஜய் ஞானமுத்து, படத்தின் நாயகன் சீயான் விக்ரம், அவரது வாரிசும், நடிகருமான துருவ் விக்ரம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், பாடலாசிரியர் தாமரை ஆகியோருடன் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 'கோப்ரா' படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும், ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் ம...