நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், கடந்த வாரம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர், 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடு இருக்கும் எனவும் தங்கள் கட்சி கொள்கை மற்றும் கோட்பாடுகள் முறையாக முதல் அரசியல் மாநாட்டில் அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், முதல் அரசியல் மாநாட்டை மதுரை, திருச்சி, ஈரோடு அல்லது சேலம் ஆகிய மாநகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கு அனுமதி வழங்க காவல்துறையிடம் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அங்கு நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படாத காரணத்தால், விழுப்புரம் மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை பகுதியில் மாநாடு நடத்துவதற்கு கடந்த வாரம் தமிழக...
2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம், தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பில் மாற்றமில்லை.
தங்கம், வெள்ளி, பிளாட்டினத்திற்கு இறக்குமதி வரி குறைப்பு, வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, 80 கோடி மக்கள் பயன் பெறும் கரீப் அன்னயோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு என பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே பீகார், ஆந்திராவை ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சிகள் தங்கள் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தன.
அந்த கோரிக்கைக்கு ஏற்ப ஆந்திரா, பீகாருக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு அ...
“தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்”.. வணிகர் நல வாரிய கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!
தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
40,944 புதிய உறுப்பினர்கள் வணிகர் நல வாரியத்தில் இணைந்துள்ளதாக தமிழ்நாடு வணிகர் நல வாரிய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "கலைஞர் கருணாநிதியால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு வணிகர் நல வாரியம் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வணிகர்களை ஊக்குவிக்கவும், அவர்களது இன்னல்களை குறைக்கவும் 1989ல் நல வாரியம் உருவானது.
கருணாநிதி இந்த வாரியத்தை தொடங்கிய போது முதலில் அலுவலர் உறுப்பினர்களாக 20 பேர் இருந்தார்கள்.
...
தமிழகத்தில் முதன்முறையாக ஆன்லைனில் கட்டட அனுமதி பெறும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
www.onlineppa.tn.gov.in அனுமதியை பெறலாம். 2,500 சதுர அடி வரை உள்ள மனையில் 3,500 சதுர அடியில் கட்டப்பட உள்ள வீடுகளுக்கு திட்டம் பொருந்தும்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.541.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.382.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1459 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
"வீடு கட்ட வேண்டும் என நினைக்கும் அனைவருக்கும் இத்திட்டம் பயன்படும்" -ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி பெ...
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் வழக்கறிஞரான டாக்டர். பி. ஆனந்தன்
யார் இந்த ஆனந்தன்?
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் வழக்கறிஞரான டாக்டர். பி. ஆனந்தன். இவரது தந்தை பெயர் பஞ்சாட்சரம், தாயார் பெயர் சரஸ்வதி. 1974 ஆம் ஆண்டு பட்டாபிராமில் பிறந்தவர் ஆனந்தன். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் 1992 முதல் 1997 வரை சட்டம் படித்தவர்.
அப்போது, கல்லூரியின் நூற்றாண்டு விழா சேர்மனாக இருந்து அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் விழாவினை சிறப்பாக நடத்தினார். அதன் பின்னர் மூத்த வழக்கறிஞர் ராஜா இளங்கோ அவர்களிடம் ஜூனியர் வழக்கறிஞராக ஆறு மாதம் காலம் பணியாற்றி பின்னர், தனி வழக்கறிஞர் அலுவலகம் தொடங்கி தற்போது 100க்கும் மேற்பட்ட ஜூனியர் வழக்கறிஞர்கள் கொண்டு வழக்கறிஞர் தொழில் புரிந்து வருகிறார்...
தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் மறைவால், அடுத்த தலைவராக அவரது மனைவியை நியமிக்கலாம் என அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், பதவியை ஏற்க ஆம்ஸ்ட்ராங் மனைவி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் புதிய தலைவரை நியமிக்க தேசிய தலைமை மும்முரமாக ஆலோசித்தது. அதன்படி, உச்சநீதிமன்ற வழக்கறிஞராக இருக்கும் பி.ஆனந்தன் என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்....
"வழக்கறிஞரா? குற்றவாளியா?" என கேள்வி எழுப்பி பிரசாரத்தை தொடங்கினார் கமலா ஹாரிஸ்
பைடனின் பிரசார செயலகம், கமலா பிரசார செயலகம் என பெயர் மாற்றம்
"நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்பா? வழக்கறிஞர் கமலா ஹாரிஸா? " என்ற முழக்கத்துடன் பிரசாரத்தை தொடங்கியது கமலா அணி
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார் ஜோ பைடன்
அதிபர் வேட்பாளராக பெறப்பட்ட பல மில்லியன் டாலர் பிரசார நிதியை கமலா ஹாரிஸ் பிரசாரத்துக்கு மாற்றிக் கொடுக்கும் வேலைகளில் இறங்கினார் பைடன்...
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஹரிதரன் என்பவர் உட்பட மேலும் 5 பேரைப் பிடித்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பேரூராட்சியின் அதிமுக கவுன்சிலராக உள்ளார் ஹரிதரன். இவரிடமிருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் மற்றும் ஹரிஹரனின் நெருங்கிய நண்பர் ஹரிதரன் என போலீஸ் தகவல் வெளியிட்டு உள்ளனர்.
இன்னொரு பக்கம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் விடிய விடிய விசாரணை நடந்தது. தற்போது விசாரணை முடிந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்கை கொல்வது தொடர்பாக பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை 4 இடங்களில் சதி ஆலோசனை கூட்டங்கள் நடத்தியதாக தகவல் வெளியாகி உ...