சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

பிரபல தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் வழக்கு!

பிரபல தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் வழக்கு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கிவுள்ள டான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது அயலான் படத்தில் நடித்து வருகிறார். சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் கடந்த 2019-ம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை இயக்கினார். படம் கலவையான விமர்சனம் பெற்று வசூல் ரீதியாக சரிவை சந்தித்தது. இப்படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயனுக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ரூ.11 கோடியை மட்டுமே கொடுத்ததாகவும் அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனக்கு தரவேண்டிய சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்யத் தடை தேவை எனவும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான திய...
தொழிற்சங்கங்கள் 2-வது நாளாக  வேலைநிறுத்தம்:  பஸ் தொழிலாளர்கள் பெரும்பாலானவர்கள் பணிக்கு திரும்பியதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை!

தொழிற்சங்கங்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: பஸ் தொழிலாளர்கள் பெரும்பாலானவர்கள் பணிக்கு திரும்பியதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கருதி 2 நாள் பொது வேலைநிறுத்தம் நடத்துவதற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. அதனை ஏற்று நாடு முழுவதும் நேற்று பொது வேலைநிறுத்தம் தொடங்கியது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை, ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், 18 மாத அகவிலைப்படியினை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றது. தமிழகத்தில் ஐ.என்.டி. யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. தொழிலாளர்கள், ஊழியர்கள் வேலைக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் தீவிரமாக பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் நேற்று பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்...
5 நாள் அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு துபாயிலிருந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

5 நாள் அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு துபாயிலிருந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசுமுறை பயணமாக கடந்த 24-ம் தேதி மாலை துபாய் சென்றார். அங்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகத்துக்கு சென்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின், அங்கு நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியில் தமிழகத்திற்கான அரங்கை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, துபாயில் உள்ள ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவரது முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டன. துபாயில் இருந்து அபுதாபி புறப்பட்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்து உரையாடினார். அவரது முன்னிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மாலையில் அபுதாபியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு ...
பணத்தை கொண்டு வரவில்லை, மக்களின் மனத்தையே எடுத்து வந்திருக்கிறேன்- அபுதாபியில் முதல்வர் ஸ்டாலின்

பணத்தை கொண்டு வரவில்லை, மக்களின் மனத்தையே எடுத்து வந்திருக்கிறேன்- அபுதாபியில் முதல்வர் ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள், தமிழக அரசியல்
  அபுதாபியில் உள்ள இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில், இந்திய சமூக மற்றும் கலாச்சார மையம் மற்றும் அபுதாபி வாழ் தமிழ் சமூகம் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-   நான்கு நாட்களாக துபாயிலும், இந்த அபுதாபி பகுதியிலும் நான் ஒரு சுற்றுப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். தமிழகத்திலே தான் சுற்றுப் பயணம் நடத்துவது எனக்கு வழக்கம். அவர்கள் அழைத்த இடங்களுக்கு எல்லாம் நான் போவது  உண்டு. அப்படி அழைக்கப்பெறும் இடங்களிலெல்லாம் எனக்கு வரவேற்புக்களை மகிழ்ச்சியோடு, உற்சாகத்தோடு, ஊக்கத்தோடு அவர்கள் என்னை வரவேற்பது உண்டு. அதற்குக் கொஞ்சம் கூட குறைவில்லாமல், கொஞ்சம் கூட இல்லை, ஒரு இன்ச் கூட குறைவில்லாமல், இந்த நான்கு நாட்களாக நான் திக்குமுக்காடிப் போயிருக்கிறேன். தமிழ்நாட்டை நோக்கி பல தொழில் நிறுவனங்களை ஈர்ப்ப...
தமிழ்நாட்டில் முதல் திருநங்கை தமிழ்செல்விக்கு அரசுப்பணி!

தமிழ்நாட்டில் முதல் திருநங்கை தமிழ்செல்விக்கு அரசுப்பணி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழ்நாட்டில் திருநங்கையாக பதிவு செய்து படித்து முடித்த முதல் திருநங்கை தமிழ்செல்விக்கு அரசுப் பணி கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் திருநங்கையாக பதிவு செய்து படித்து முடித்த முதல் திருநங்கை தமிழ்செல்வி ஆவார். இவருக்கு தற்போது தேசிய மருத்துவ திட்டத்தின் கீழ் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் உதவியாளர் பணி ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் புளியங்கணணு கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி. எல்லா திருநங்கைகளையும் போலவே தனது குழந்தைப் பருவத்தில் வீட்டிலும் பள்ளியிலும் துன்புறுத்தல்கள் சந்தித்துள்ளார். ஆனால் படிப்பு தான் தனக்கு கை கொடுக்கும் என உணர்ந்த அவர் பல இன்னல்களை தாண்டி பள்ளிப்படிப்பை முடித்தார். அதன் பின் செவிலியர் படிப்புக்கு விண்ணப்பித்த போது திருநங்கைகள் விண்ணப்பிக்க முடியாது என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அவரது விண்ணப்பத்...
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை துபாயில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை துபாயில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  துபாய் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.     இந்த சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் துபாய் எக்ஸ்போ 2022 பார்வையிடச் சென்ற என்னை நண்பர் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ஸ்டூடியோவுக்கு அழைத்து, தான் தயாரித்துள்ள 'மூப்பில்லா தமிழே தாயே' ஆல்பத்தை காண்பித்தார். தமிழுக்கும் இசைக்கும் உலகில் எல்லை இல்லை!" என மாண்புமிகு முதலமைச்சர் பாராட்டியுள்ளார். அதோடு ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டியோவில் இருக்கும் படங்களையும் வெளியிட்டிருக்கிறார். அவருடன் உதய் நிதி எம்.எல்.ஏ., துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதய் நிதி ஆகியோரும் உடனிருந்ததனர்....
சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் 2 நாட்கள் ஆட்டோக்கள் ஓடாது- தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் 2 நாட்கள் ஆட்டோக்கள் ஓடாது- தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மத்திய தொழிற்சங்கங்கள் வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள தி.மு.க. உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க. உள்ளிட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொள்வதால் பொது போக்குவரத்து பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பெரும்பாலும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதால் பஸ்கள் முழுமையாக இயக்க முடியாத நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. ஆனாலும் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில் வேலை நிறுத்தம் நடக்க கூடிய 28, 29 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஆட்டோக்களும் ஓடாது என்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து அதன்...
மனைவிய கட்டாயப்படுத்தி “அது” வைச்சிக்கிட்டா கம்பி எண்ண வேண்டியதுதான்! கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி!!

மனைவிய கட்டாயப்படுத்தி “அது” வைச்சிக்கிட்டா கம்பி எண்ண வேண்டியதுதான்! கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி!!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  மனைவியின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி அவருடன் உடலுறவு கொள்வதும் ஒரு வகையான பாலியல் வன்கொடுமை தான் என கூறி கணவர் மீதான வழக்குப் பதிவை நீக்குவதற்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. விருப்பமில்லாத மனைவியுடன் பாலியல் வல்லுறவு கொண்டதாக மனைவி அளித்த புகாரின் பேரில் கணவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அவர் தனது மகளையும் கட்டாயப்படுத்தி அவரை பாலியல் வல்லுறவு செய்ததாக புகார் அளித்ததால், அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது மனைவி கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரை நீக்க வேண்டும் என்பதற்காக கணவர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.நாகபிரசன்னா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனைவியின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி அவருடன் ...
”முடிவு எடுத்தால் 2026 முதல்வர்” தமிழக அரசியல் கட்சிகளை சீண்டிய விஜய் ரசிகர்கள்!

”முடிவு எடுத்தால் 2026 முதல்வர்” தமிழக அரசியல் கட்சிகளை சீண்டிய விஜய் ரசிகர்கள்!

HOME SLIDER, NEWS, politics, தமிழக அரசியல், நடிகர்கள்
”முடிவு எடுத்தால் 2026 முதல்வர்” அரசியல் கட்சிகளை சீண்டிய விஜய் ரசிகர்கள்! விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பீஸ்ட்’. இப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய் படம் வெளியாகும் போது அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடுவார்கள். அதுபோல் அரசியலுக்கு அழைக்கும் விதமாக சுவாரஸ்யமான சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தவும் செய்வார்கள். அந்த வகையில், தற்போது நடிகர் விஜய்யை மீண்டும் அரசியலுக்கு இழுக்கும் விதமாக மதுரை ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில் முடிவு எடுத்தால் முதல்வர் தான், 2021-ல் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிடும் வகையில் தளபதி என்றும், 2026-ல் நடிகர் விஜய் எனக்குறிப்பிடும் வகையில் தளபதி என குறிப்பிட்டு உள்ளதோடு, 2026-ல் தளபதி மக்கள் இயக்க முதல்வர் வேட்பாளர் என நடிகர் விஜய் படத்தையும், 2026-ல் தளபதி மக்கள...
பாஜகவிலிருந்து திடீரென ராஜினாமா செய்த நடிகை குட்டிபத்மினி!

பாஜகவிலிருந்து திடீரென ராஜினாமா செய்த நடிகை குட்டிபத்மினி!

HOME SLIDER, NEWS, politics, தமிழக அரசியல், நடிகைகள்
  தமிழ் சினிமாவில் நடிகையாகவும், சின்னத்திரையில் தயாரிப்பாளருமாகவும் வலம் வருபவர் குட்டி பத்மினி. இவர் சினிமாவை தாண்டி, அரசியலில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக பிஜேபி கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக குட்டி பத்மினி அறிவித்திருக்கிறார் இதுகுறித்து குட்டி பத்மினி வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் கடந்த 11 வருடமாக பிஜேபி கட்சியில் உறுப்பினராக இருந்து பணியாற்றி வருகிறேன். தற்போது பிஜேபி கட்சியில் இருந்து விலகுகிறேன். என்னுடைய தனிப்பட்ட வேலைகள் மும்பையில் அதிகம் இருப்பதால், அரசியலில் ஈடுபட தேவையான நேரம் கிடைக்கவில்லை’ என்று கூறியிருக்கிறார்....