செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

போலீசை தாக்க முயன்ற முன்னாள் எம்பிக்கு 20 ஆயிரம் அபராதம்!

போலீசை தாக்க முயன்ற முன்னாள் எம்பிக்கு 20 ஆயிரம் அபராதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சேலத்தில் சுங்க சாவடி அருகில் வாகன சோதனை செய்யும் போது முன்னாள் எம்பி அர்ஜுனன் வாகனத்தை சோதனை செய்யும்போது போலீசுக்கும் முன்னாள் எம்பிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாத வீடியோ பெரும் வைரல் ஆனது. சேலத்தில் வாகன சோதனை செய்த போலீசை தரக்குறைவாக பேசி தாக்க முயன்ற வழக்கில் அதிமுக முன்னாள் எம்பி அர்ஜுனனுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம். அபராத தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க நீதிபதி உத்தரவு....
கொரானாவைத் தொடர்ந்து பிளேக் சீனாவில் அடுத்தடுத்து உருவாகும் வைரஸ்கள்… அதிர்ச்சியில் உலக நாடுகள்!

கொரானாவைத் தொடர்ந்து பிளேக் சீனாவில் அடுத்தடுத்து உருவாகும் வைரஸ்கள்… அதிர்ச்சியில் உலக நாடுகள்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  கொரானாவைத் தொடர்ந்து பிளேக் சீனாவில் அடுத்தடுத்து உருவாகும் வைரஸ்கள்... அதிர்ச்சியில் உலக நாடுகள்! சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் உருவான கொரானா வைரஸ் காரணமாக உலகம் முழுதும் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போனது. கடந்த 7 மாதங்களாக பல லட்சம் மக்களை உயிர்பலி வாங்கிக் கொண்டிருக்கிறது கொரானா. இதை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த வைரசின் முதல் அலையில் இருந்து சில மாதங்களுக்கு முன் மீண்ட சீனாவில் மீண்டும் கொரானாவின் இரண்டாம் அலைத் தாக்குதல் நடத்த தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக பல மாகாணங்கள் ஊரடங்கில் உள்ளன. இந்த சூழலில் அங்கு மீண்டும் ஒரு  மற்றொரு அதிர்ச்சியாக கொடூர பிளேக் நோயும் பரவத் தொடங்கி உள்ளது தெரிய வந்துள்ளது சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்க...
புதிய சட்டத்தால் குவைத்தில் இருந்து 8 லட்சம் இந்தியர்களுக்கு வேலை காலி!

புதிய சட்டத்தால் குவைத்தில் இருந்து 8 லட்சம் இந்தியர்களுக்கு வேலை காலி!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
கொரானாவால் இழந்த பொருளாதாரத்தை சீராக்கும் புதிய சட்டத்தால் குவைத்தில் இருந்து சுமார் 8 லட்சம் இந்தியர்களுக்கு வேலை பறிபோகும்! கொரானா தாக்கத்தால் பிற நாடுகளை போலவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நாடு குவைத். அதனால், சொந்த நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. குவைத்தின் தேசிய சட்டமன்றத்தின் சட்ட மற்றும் சட்டமன்றக்குழு வரைவு இந்த வெளிநாட்டு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. குவைத் முழுதும் உள்ள மக்கள் தொகை 43 லட்சம். அதில் வெளிநாட்டினர் 30 லட்சம் பேர் உள்ளனர். இதில் இந்தியர்கள்தான் அதிகம். குவைத் அரசின் இந்த புதிய சட்டம் இந்தியர்களின் எண்ணிக்கையை 15 சதவீதமாக குறைக்க வகை செய்கிறது. அதன்படி 14 லட்சமாக இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆறு முதல் 7 லட்சமாக குறைக்கப்படும் போது, மீதமுள்ள 7 மு...
டில்லியில் பிரியங்கா பங்களாவை காலி செய்ய கெடு!

டில்லியில் பிரியங்கா பங்களாவை காலி செய்ய கெடு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டில்லியில் பிரியங்கா பங்களாவை காலி செய்ய கெடு! டெல்லியில் பிரியங்கா காந்தி வசிக்கும் அரசு பங்களா இப்போது பாஜக எம்.பியும், பாஜக ஊடக ஊடக செய்தி தொடர்பாளருமான அனில் பலூனிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரியங்கா காந்திக்கு ஒதுக்கப்பட்டிருந்த இந்த பங்களாவை, ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதிக்குள், காலி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதோடு, கடந்த ஒன்றாம் தேதியுடன், பிரியங்கா காந்திக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசின் உத்தரவையும் மத்திய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, அந்த பங்களாவை அனில் பலூனிக்கு ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்து இதுவரை பிரியங்கா எந்த பதிலும் சொல்லவில்லை....
எம்.எல்.ஏ. செருப்பை தூக்கிச் சென்ற தலித் நிர்வாகி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக!

எம்.எல்.ஏ. செருப்பை தூக்கிச் சென்ற தலித் நிர்வாகி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுக எம்.எல்.ஏ. செருப்பை தூக்கிச் சென்ற தலித் நிர்வாகி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கட்சி! திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. விஸ்வநாதன், பொன்னப்பள்ளி கிராமத்தில் தடுப்பணை பணிகளை பார்வையிட சென்றார். அந்த பகுதியில் பெய்த கடும் மழையால் எல்லா பக்கமும் சேறும் சகதியுமாக இருந்துள்ளது. இதயடுத்து எம்.எல்.ஏ.விஸ்வநாதன் தான் காலில் போட்டிருந்த செருப்பை அங்கேயே கழற்றி வைத்து விட்டு வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வெறும் காலில் நடந்து சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற திமுகவைச் சேர்ந்த வெங்கடசமுத்திரம் ஊராட்சி செயலாளர் சங்கர் கைகளில் எம்எல்ஏவின் செருப்பு இருந்தது. ஒரு கையில் செருப்பைத் தூக்கிக் கொண்டு அவர் நடந்து சென்ற புகைப்படங்கள் வெளியானதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஏற்கனவே திமுகவில் உள்ள ஆர்.எஸ். பாரதி தலித் சமூகத்தினர் மீது தேவையற்ற ...
பாலியல் வழக்கை மறைக்க 35 லட்சம் பேசி 20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் SI கைது!

பாலியல் வழக்கை மறைக்க 35 லட்சம் பேசி 20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் SI கைது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பாலியல் வழக்கை மறைக்க 35 லட்சம் லஞ்சம் பேசி 20 லட்சம் வாங்கிய பெண் SI கைது! குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விவசாய நிறுவனம் நடத்தி வருபவர் கேனல் ஷா. இதில் வேலை பார்த்த 2 பெண்களை கேனல் ஷா பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 2 பெண்களும் மேற்கு அகமதாபாத் பகுதியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அனால் அந்த மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.ஆக இருந்தவர் சுவேதா ஜடேஜா. இந்த புகாரில் பாதிக்கப்பட்ட பெண்கள் பணிபுரிந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கேனல் ஷாவை கைது செய்யாமல், புகாரில் சொல்லப்பட்ட பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் சாதாரண வழக்காக பதிவு செய்துள்ளார் சுவேதா. இதற்காக ஷாவிடம் 35 லட்சம் லஞ்சம் பேசி அதில் முதற்கட்டமாக கேனல் ஷாவின் சகோதரரின் மூலம் ரூ.20 லட்சம் லஞ்சமாக பெற்றுள்ளார். மீ...
வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்கும்!

வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்கும்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்கும்! கொரானா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் இணையம் மூலமாக மனு தாக்கல் செய்தல், காணொலி மூலமாக முறையீடு, பட்டியலிடுதல் மற்றும் விசாரணை தொடர்பாக அனைத்து அமல்படுத்த வேண்டிய புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் திங்கட்கிழமையான இன்று முதல் வழக்கு விசாரணைகள் காணொலி அமர்வில் தொடர்ந்து நடைபெறும். ஏற்கனவே பட்டியலிட முடியாமல் நிலுவையில் உள்ள மனுக்கள் இன்று முதல் காணொலி அமர்வுகளில் பட்டியலிடப்படும். வருகிற 13-ந் தேதியில் இருந்து தேவையின் அடிப்படையில் சார்பு மனுக்கள் மற்றும் இடைக்கால மனுக்கள் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும், மற்ற நாட்களில் இறுதி விசாரணைக்கான மனுக்களும், ஏற்கனவே விசாரணையில் உள்ள மனுக்களும் பட்டியலிடப்படும். தற்போதைக்கு தேசிய தகவல் மையத்தின்...
வைரஸ் பாதிப்பில் உலக அரங்கில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3வது இடத்துக்கு போனது!

வைரஸ் பாதிப்பில் உலக அரங்கில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3வது இடத்துக்கு போனது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வைரஸ் பாதிப்பில் உலக அரங்கில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3வது இடத்துக்கு போனது! உலக அளவில் கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்ட டாப் 10 நாடுகளில் இந்தியா கடந்த மே மாதம் 11வது இடத்தில் இருந்தது. நாடுமுழுதும் வைரஸ் பரவலின் வேகம் அதிகமாக இருந்ததால் 11வது இடத்தில் இருந்த இந்தியா நேற்றுமுன்தினம்வரை 4ம் இடத்திற்கு முன்னேறியது. இந்த சூழலில், நேற்று வைரஸ் பரவலின் வேகம் வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்ததாலும் 3ம் இடத்தில் இருந்த ரஷ்யாவில் வைரஸ் பரவல் மெல்ல கட்டுக்குள் வருவதாலும் இந்தியா 3வது இடத்திற்கு சென்றது. பிரேசில் 2ம் இடத்திலும், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும் நீடிக்கிறது. ரஷ்யாவில் 681251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21492 பேர் புதிதாக கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 413 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இ...
ஒரு கோடிக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு செக்!

ஒரு கோடிக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு செக்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  வருமான வரி செலுத்துபவர்களிடம் இருந்து மேலும் விரிவான தகவல்களை பெறுவதற்காக, டி.டி.எஸ் படிவங்களில் வருமான வரித்துறை மாற்றங்களைக் கொண்டு வருகிறது. மத்திய நேரடி வரிகள் வருவாய் ஆணையமானது இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இனி வரி பிடித்தம் செய்பவர்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக வருவாய் மூலத்தில் வரி பிடித்தம் செய்யவில்லை என்றால், அதற்கான காரணத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும். அதேபோல் வங்கிகள் இனி தங்கள் கிளைகளில் இருந்து ரூ.1 கோடிக்கும் அதிகமான பணம் எடுக்கப்பட்டால், அதற்கான வருவாய் மூல வரி பிடித்தம் குறித்து தெரியப்படுத்த வேண்டும். வருமான வரி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, இ-காமர்ஸ் வர்த்தகம் செய்வோர், பரஸ்பர சகாய நிதி மற்றும் தொழில் அறக்கட்டளைகள் மூலம் அளிக்கப்படும் ஈவுத் தொகை, வங்கிகளில் இருந்து பெரிய அளவில் பணம் எடுத்தல் ஆகியவை டி.டி...
பென்னிக்ஸின் நண்பர்கள் 5 பேர் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜர்!

பென்னிக்ஸின் நண்பர்கள் 5 பேர் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பென்னிக்ஸின் நண்பர்கள் 5 பேர் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜர்! சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக உயிரிழந்த ஜெயராஜ் வீடு, கடைகளில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்காக உயிரிழந்த பென்னிக்ஸின் நண்பர்கள் 5 பேர் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜராகினர். அவர்களிடம் ஜூன் 19-ந்தேதி என்ன நடந்தது என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....