காதல் திருமணம் செய்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மகள் கர்நாடக போலீசிடம் தஞ்சம்!
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள், காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், தனது தந்தையிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு பெங்களூரு போலீஸ் கமிஷனரை அணுகியுள்ளார். அவர் போலீஸ் கமிஷனர் கமல் பந்த்திடம் பாதுகாப்பு கோரி மனு கொடுத்தார்.
கமிஷனர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபுவின் மகள், “நான் ஜெயக்கல்யாணி அமைச்சர் சேகர்பாபுவின் மகள்.
இவர் சதீஷ் நாங்கள் இருவரும் 6 வருடங்களாக காதலித்து வருகிறோம். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
நாங்கள் இருவரும் விருப்பப்பட்டு தான் திருமணம் செய்துகொண்டோம். 2021 ஆகஸ்ட் மாதம் நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினோம். மூன்று நாள்களுக்கு பிறகு எங்களை புனேவில் வைத்து பிடித்தனர். பின்னர் அங்கிருந்து இங்கு அழைத்து வந்தனர்.
திருவள்ளூரில் 2 மாதம் அவரை சட்டத்துக்கு புறம்பாக போலீஸ...









