ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு வழக்கில் முதல்வர் கடிதத்தால் திடீர் திருப்பம்!

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு வழக்கில் முதல்வர் கடிதத்தால் திடீர் திருப்பம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு வழக்கில் முதல்வர் கடிதத்தால் திடீர் திருப்பம்! தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ந்தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது, தற்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது. அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு  சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நிலையில், தி.மு.க. சார்பில்...
அரசிடம் உதவி பெற்று நன்றி மறந்த விளம்பர வெறி பிடித்த செல்வமணி உடனடியாக பெப்சிக்கு வந்த நிதிக்கு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் – இயக்குனர் அன்பழகன் காட்டம்

அரசிடம் உதவி பெற்று நன்றி மறந்த விளம்பர வெறி பிடித்த செல்வமணி உடனடியாக பெப்சிக்கு வந்த நிதிக்கு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் – இயக்குனர் அன்பழகன் காட்டம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அரசிடம் உதவி பெற்று நன்றி மறந்து விளம்பர வெறி பிடித்த செல்வமணி உடனடியாக பெப்சிக்கு வந்த நிதிக்கு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் - இயக்குனர் அன்பழகன் காட்டம்   இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:     மனிதநேய அரசை விமர்சனம் செய்யும் நன்றி மறந்த ஆர்.கே.செல்வமணி - நாஞ்சில் பி.சி.அன்பழகன் கண்டனம் ஊரடங்கிலும், RK செல்வமணிக்கு நாவடங்கவில்லை. திரைத்துறை சார்ந்த அரசு நிகழ்வுகளில், செல்வமணியை மாப்பிள்ளை அந்தஸ் சோடு முதல்வர் நேரில் கௌரவிக்கிறார் .. அவரோ நன்றி மறந்து விளம்பர வெறி பிடித்து, பாதி நாள் ஆந்திராவில் இருந்து கொண்டு அந்தர் பல்டி அட்டைக் கத்தி அவதூறு பேட்டி கொடுக்கிறார். எல்லா துறைகளுக்கும் அரசு கவனிக்கிறது, திரைத்துறைக்கு அரசு எதுவும் செய்யவில்லை என்கிறார் பிணி வார்த்தைகள் கொண்ட மணி. அச்சாணி இல்லாத தேர், முச்சாணியும் ஓடாது. அரிதார துறைக்கு சங்கங்...
அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பின வாலிபரை சுட்டுக்கொன்ற வெள்ளைக்கார போலீஸ்… வெடித்த வன்முறை!

அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பின வாலிபரை சுட்டுக்கொன்ற வெள்ளைக்கார போலீஸ்… வெடித்த வன்முறை!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பின வாலிபரை போலீஸ் சுட்டுக் கொன்றதால் பதற்றம் அதிகரிப்பு. பல இடங்களில் வன்முறை தொடங்கியது. அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், கடந்த 25-ந் தேதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார். இதில், ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இதையடுத்து, போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நிறம் மற்றும் இனவெறிக்கு எதிராகவும் , அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்களின் போது பெருமளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தற்போதும் அமெரிக்காவின் பல நகரங்களில் நிறம் மற்றும் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த சூழலில் மேலும் ஒரு கருப்பின வாலிபரை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்தால் அமெரிக்...
மிக எளிமையாக நடந்த முதல்வர் மகள் திருமணம்!

மிக எளிமையாக நடந்த முதல்வர் மகள் திருமணம்!

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
  மிக எளிமையாக நடந்த முதல்வர் மகள் திருமணம்! கேரளா முதல்வர் பினராயி விஜயனின் மகளும், தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோருமான வீணாவுக்கு இன்று திருமணம் நடந்தது. அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசிய தலைவர் முகமது ரியாஸை கரம் பிடித்துள்ளார். இவர்களது திருமணம் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வரின் இல்லத்தில் எளிய முறையில் நடந்தது. கொரானா ஊரடங்கு விதிமுறைகளின்படி, குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர் மட்டுமே திருமண விழாவில் பங்கேற்றனர். குடும்ப உறுப்பினர்கள், தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் நாயர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் சஜீஷ் உள்ளிட்டோர் விழாவில் கலந்கொண்டனர். மணமகன் முகமது ரியாஸ் கடந்த எம்பி தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் நின்று வெற்றிவாய்ப்பை இழந்தவர்....
வைரஸ் பரவலை தடுக்க தளர்வுகளை கடுமையாக்க மருத்துவ குழு முதல்வருக்கு பரிந்துரை!

வைரஸ் பரவலை தடுக்க தளர்வுகளை கடுமையாக்க மருத்துவ குழு முதல்வருக்கு பரிந்துரை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    வைரஸ் பரவலை தடுக்க தளர்வுகளை கடுமையாக்க மருத்துவ குழு முதல்வருக்கு பரிந்துரை! சென்னையில் கொரானா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் மருத்துவ நிபுணர்கள் குழு சார்பில் குகானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரானா பாதிப்பு தொடர்பாக முதலமைச்சரிடம் 5-வது முறையாக ஆலோசனை நடத்தியுள்ளோம். கொரானா பாதிப்பு உச்சம் தொட்டு குறையும் என கூறியிருந்தோம். அதுபோல் நடக்க உள்ளது. தமிழகத்தில் கொரானா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. உச்சத்தை அடைந்துள்ள கொரானா பாதிப்பு மெல்ல குறைய தொடங்கும். பரிசோதனைகள் அதிகமாக செய்ய செய்ய பாதிப்பை கண்டறிந்து உயிரிழப்பை தடுக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து கொரானா பரிசோத...
கொரானா தடுப்பு நடவடிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி தோற்றுப் போய்விட்டார் – ஸ்டாலின் குற்றச்சாட்டு

கொரானா தடுப்பு நடவடிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி தோற்றுப் போய்விட்டார் – ஸ்டாலின் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் கொரானா சமூக பரவலாக மாறியதை மறைக்கும் எடப்பாடிபழனிச்சாமி வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தோல்வி அடைந்துவிட்டார் - ஸ்டாலின் குற்றச்சாட்டு. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரானாவால் 2 மாதங்களாக தமிழகம் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் கொரானா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அரசின் அலட்சியத்தால் கொரானா பரவல் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே கொரானா தொற்று பரவல் அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரானா சமூகப் பரவலாக மாறியதற்கு ஆதாரம் இருக்கிறது. கொரானா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூற வேண்டும். சென்னையில் கொரானாவால் இறந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டது கவலை அளிக்கிறது. அரசு உயர் அதி...
தேர்தலில் மீண்டும் பதவியை பிடிக்க டிரம்ப் மோசடி செய்வார் – குற்றம் சாட்டும் ஜனநாயக கட்சி

தேர்தலில் மீண்டும் பதவியை பிடிக்க டிரம்ப் மோசடி செய்வார் – குற்றம் சாட்டும் ஜனநாயக கட்சி

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    தேர்தலில் மீண்டும் பதவியை பிடிக்க டிரம்ப் மோசடி செய்வார் - குற்றம் சாட்டும் ஜனநாயக கட்சி கொரானா பீதி, வைரஸ் பரவல் , உலக அளவில் தொற்று தாக்கத்திலும், பலி எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருந்தாலும் இந்த பதட்டத்திலும் அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அண்மையில் டிரம்ப் பற்றி பேசிய ஜோ பிடன், “வரும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோற்றால் அதை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார், வெள்ளை மாளிகையிலிருந்து வெளியே வரமாட்டார். அவரால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தேர்தலில் முறைகேடு செய்ய முயற்சி செய்வார்” எனக் குற்றம் சாட்டினார். இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்க...
கொரானா உதவி செய்கிறவர்களுக்கு 2ம் நம்பர் பிசினஸ் உள்ளதா?! – நடிகர் கருணாஸ் MLA சர்ச்சை பேச்சு

கொரானா உதவி செய்கிறவர்களுக்கு 2ம் நம்பர் பிசினஸ் உள்ளதா?! – நடிகர் கருணாஸ் MLA சர்ச்சை பேச்சு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கொரானா நிவாரண உதவி செய்ய எனக்கு 2ம் நம்பர் பிசினஸ் இல்லை என்ற கருணாஸ் பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது. மணல் குவாரியோ, பெட்ரோல் பம்ப்போ அல்லது 2ம் நம்பர் பிசினஸ் எதுவும் இல்லாத நான் ஒரு கூத்தாடி. லீகலாக எனக்கு எந்த பிசினசும் இல்லாததால் திருவாடாணை தொகுயில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவி வழங்க முடியவில்லை என்று நடிகர் கருணாஸ் பேசியது இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொரானா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்கள் பலரும் உதவி செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக இன்னும் ஓராண்டில் தேர்தல் வரப்போவதால் ஒவ்வொரு எம்.எல்.ஏவும் கொரானா பரவலை மீறி தொகுதிகளில் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். காமெடி நடிகர் கருணாஸ் திருவாடாணை தொகுதியின் எம்.எல்.ஏ. அந்த தொகுதியில் சுமார் 2 லட்சம் பேருக்கு மேல் இருக்கிறார்கள். தொகுதியில் நடைபெற்ற அரசின் நல திட்ட பணிகளை ப...
ஊரடங்கில் தோற்றுப் போன மோடி அரசு – ராகுல் காந்தி கடும் தாக்கு

ஊரடங்கில் தோற்றுப் போன மோடி அரசு – ராகுல் காந்தி கடும் தாக்கு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஊரடங்கில் தோற்றுப் போன மோடி அரசு - ராகுல் காந்தி கடும் தாக்கு நாடு முழுவதும் கொரானா நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதால் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் பலகட்ட ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த ஊரடங்கு நடவடிக்கையால் எந்த பயனும் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அந்தவகையில் மீண்டும் அவர் மத்திய அரசை கடுமையாக குறை கூறியுள்ளார்.மத்திய அரசின் 4-ம் கட்ட ஊரடங்கிலும் நோய்த் தொற்று அதிகரித்து இருப்பதாக வரைபடம் ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ள அவர், ‘ மீண்டும் மீண்டும் ஒரே செயலை செய்துவிட்டு வெவ்வேறு முடிவுகளை எதிர்பார்க்கிறது’ என்ற மேற்கோள் ஒன்றையும் அதில் குறிப்பிட்டு உள்ளார். அதே போல, உலக அரங்கில் கொரனாவை விரட்ட நடக்கும் ஓட்டத்தில் இந்தியா ...
“ராஜ மாதா” புகழ் ரம்யா கிருஷ்ணன் சொகுசுகாரில் பெட்டி பெட்டியாக மதுபுட்டிகள் கடத்தல்!

“ராஜ மாதா” புகழ் ரம்யா கிருஷ்ணன் சொகுசுகாரில் பெட்டி பெட்டியாக மதுபுட்டிகள் கடத்தல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    "ராஜ மாதா" புகழ் ரம்யா கிருஷ்ணன் சொகுசுகாரில் பெட்டி பெட்டியாக மதுபுட்டிகள் கடத்தல்! சிக்கிய டிரைவரை சொந்த ஜாமீனில் மீட்ட நடிகை. கொரானா ஊரடங்கால் பொது மக்கள் வீடுகளில் முடங்கி பல மாதங்களுக்கு பின் இப்போது தான் சில தளர்வுகள் அளிக்கப்படுகிறது. இருந்த போதும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரானா தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இந்த சூழலில் இந்த 4 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் மதுக்கடைகளை அரசு திறந்துள்ளது. பக்கத்து மாநிலமான பாண்டியிலும் மதுக்கடைகளை திறந்து இருக்கிறார்கள். நேற்று முந்தினம் கானத்தூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாண்டியில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசுகாரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது போலீசாருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரில் பெட்டியாக...