ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

கெட்டுப்போன ஆவின் பாலும்… SV.சேகரின் கொரானா அரசியலும்… – கோடங்கி

கெட்டுப்போன ஆவின் பாலும்… SV.சேகரின் கொரானா அரசியலும்… – கோடங்கி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    கெட்டுப்போன ஆவின் பாலும்... SV.சேகரின் கொரானா அரசியலும்... - கோடங்கி எஸ்.வி.சேகரின் வீட்டில் கெட்டுப்போன பால் பாக்கெட்டுகள்... 3மணி நேரத்தில் மாற்றப்பட்ட மர்மம்! மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. S.V.சேகர் அடிக்கடி சமூக வலைதளங்கங்களில் எதையாவது பதிவு செய்துவிட்டு ஏகப்பட்ட எதிர் விமர்சனங்களை பெறுவது வழக்கமான ஒன்று. அதே போல ஒரு முறை பெண் பத்திரிகையாளர்கள் பற்றி ஏடாகூடமாக பேசிவைக்க அது பெரும் சிக்கலாக தலைமறைவாக ஆனார். ஆனால் அந்த தலைமறைவு காலத்திலும் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரானா ஊரடங்கு காரணமாக உலக அளவில் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கிறார்கள். தமிழகத்திலும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு காலத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் பொது மக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளுக்கு தமிழக முதல்வர் எடப்ப...
விளம்பர பரபரப்பு இல்லாமல் கொரானா நிவாரண உதவி செய்யும் பாடகி சின்மயி!

விளம்பர பரபரப்பு இல்லாமல் கொரானா நிவாரண உதவி செய்யும் பாடகி சின்மயி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
    பாதிக்கப்பட்ட மக்களுக்கு விளம்பர பரபரப்பு இல்லாமல் நிவாரண உதவி செய்யும் பிரபல பாடகி சின்மயி! கொரானா கொடூர உயிர்க்கொல்லி வைரஸ் காரணமாக உலகமே முடங்கிப் போய் இயல்பு வாழ்க்கை முற்றிலும் அழிந்துள்ளது. இந்தியாவிலும் ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இழந்து தினக்கூலிகள், வீடுகளில் வேலை செய்யும் ஹவுஸ் கீப்பிங் பணியாளர்கள் என பல தரப்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரபலங்கள் பலரும் நிதி உதவி பொருள் உதவி அளித்து வருகிறார்கள். பிரபல டப்பிங் கலைஞரும், பாடகியுமான சின்மயி சத்தமில்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அளித்து வருகிறார். இதற்கான நிதியை, பொருட்களை திரட்டுவதற்காக தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதன்படி நிதி உதவி, நிவாரண பொருட்களை வழங்குகிறவர்களுக்கு ஸ்பெஷல் பாடலை பாடி ...
டிஜிட்டல் ரிலீஸ் சர்ச்சை… பேசி தீர்க்கலாம்  வாங்க களம் இறங்கிய அரசு!

டிஜிட்டல் ரிலீஸ் சர்ச்சை… பேசி தீர்க்கலாம் வாங்க களம் இறங்கிய அரசு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    சூர்யா தயாரித்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை டிஜிட்டலில் வெளியிட செய்த முடிவுக்கு தியேட்டர்கள் அதிபர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு அடுத்ததாக வரும் சூர்யா, கார்த்தி,ஜோதிகா படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப்படி தியேட்டர் அதிபர்களின் எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஏராளமான தயாரிப்பாளர்கள் சூர்யாவின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளதால் திரையுலகில் பரபரப்பு ஏற்படுகிறது. இப்போது இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு சமரசம் செய்து வைக்க முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது "இது திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கான பிரச்னை.  ...
கவிஞர் கண்ணதாசன் பேரனின் முடிவுக்கு தடை போட்ட அஜீத்!

கவிஞர் கண்ணதாசன் பேரனின் முடிவுக்கு தடை போட்ட அஜீத்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    தமிழ் நடிகர்களில் தனி இடத்தில் இருப்பவர் அஜித். இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்தாலும் மன்றங்கள் எதுவும் வேண்டாம் என சொல்லிவிட்டார். ஆனாலும், அஜீத் படங்கள் ரிலீஸ் ஆகும் போதும், பட அறிவிப்பின் போதும் அவரது பிறந்த நாளின் போதும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. இந்த சூழலில் மே 1ம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள். இந்த கொரானா இடர் நேரத்திலும் அஜீத் பிறந்த நாளை கொண்டாட ரசிகர்கள் தயாரானார்கள். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறும் பொது டிபி ஒன்றை திரைப்பிரபலங்கள் மூலம் வெளியிட முடிவு செய்திருந்தார்கள். அந்த பொது டிபியை வெளியிட இருந்த பிரபலங்களில் நடிகர் ஆதவ் கண்ணதாசனும் ஒருவர். ஏற்கனவே இது தொடர்பாக தனது டிவிட்டர் பதிவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் அஜீத் பிறந்த நாளுக்கு வெளியிடுவதாக இர...
சமூக இடைவெளிக்கு “இது” அவசியம் ” கேரள அரசு புதுமுயற்சி

சமூக இடைவெளிக்கு “இது” அவசியம் ” கேரள அரசு புதுமுயற்சி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சமூக இடைவெளிக்கு "இது" அவசியம் " கேரள அரசு புதுமுயற்சி கொரானா வைரஸ் தொற்று இந்தியாவில் முதன்முதலாக கேரளா மாநிலத்தில்தான் கண்டறியப்பட்டது. அதேபோல் தொடக்கக்காலத்தில் கேரளாவில்தான் கொரானா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஊரடங்கு உத்தரவை சரியாக கடைபிடித்தல், பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பை கண்டறிதல், பரிசோதனையை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்டு கொரானாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் நோயாளிகளை குணப்படுத்தி டிஸ்சார்ஜ் செய்வதிலும் முதன்மை மாநிலமாக கேரளா செயல்படுகிறது. கொரானா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் முற்றிலுமாக ஒழிக்க நீண்ட காலம் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் மக்கள் வெளியில் சென்றால் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்த சூழலில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள தண்ணீர்ம...
மீண்டும் ஊரடங்கு நீடிப்பு!? முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை!!

மீண்டும் ஊரடங்கு நீடிப்பு!? முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      மீண்டும் ஊரடங்கு நீடிப்பு! முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை!! கொரானா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மாதம் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் மே 3ம் தேதி முடிவுக்கு வர இருக்கிறது. ஆனால் கொரானா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த படியே செல்வதால் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் கொரானா பாதிப்பை முற்றிலும் கட்டுப்படுத்த பல மாநில அரசுகள் ஊரடங்கை நீடிக்க முடிவு செய்து உள்ளது. பிரதமர் மோடி மீண்டும் அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனைக்கு பின் ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீடிக்கும் முடிவை அறிவிப்பார் என தெரிகிறது....
டிஜிட்டல் ரிலீஸ்… சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு!

டிஜிட்டல் ரிலீஸ்… சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜோதிகா படம் டிஜிட்டல் ரிலீஸ்... சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு! ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தை கடந்த மார்ச் 28ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. இந்த சூழலில் கொரானா என்ற கொடூர வைரஸ் தாக்கத்தால் உலகமே ஊரடங்கால் முடங்கிப் போனது. திரையுலகமும் ஒட்டுமொத்த பணிகளை நிறுத்தி முடங்கி இருக்கிறது. இந்த சூழலில் அனைவரும் வீடுகளில் முடங்கி இருக்கிறார்கள். எல்லா பணிகளும் முடங்கி இருந்தாலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மட்டுமே இப்போது தனது வேலையை முன்பைவிட மிக அதிகமாக பரபரப்பாக இயங்கி வருகிறது. தியேட்டர்கள் மூடப்பட்டாலும் வீடுகளில் முடங்கி உள்ள மக்கள் டிஜிட்டல் மூலமாக திரைப்படங்களை வீடுகளிளேயே பார்த்து வருகிறார்கள். இந்த சூழலில் கொரானா சிக்கல் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாமல் இருக்கிறது. இதன் காரணமாக ஜோதிகாவின் ப...
ஜோதிகா படம் டிஜிட்டலில் ரிலீஸ் நடிகர் சூர்யா எடுத்த முடிவு சரியா!? – கோடங்கி பார்வை

ஜோதிகா படம் டிஜிட்டலில் ரிலீஸ் நடிகர் சூர்யா எடுத்த முடிவு சரியா!? – கோடங்கி பார்வை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் தியேட்டருக்கே வராமல் நேரடியாக டிஜிட்டலில் ரிலீஸ் ஆக இருக்கும் தகவல் வெளியானதும் திரையுலகில் பெரும் பரபரப்பு. "அப்பாடா... பூனைக்கு ஒரு வழியாக மணி கட்டி விட்டார்கள்" என்று ஒருசாராருக்கு மகிழ்ச்சி. அதே நேரம் இதுநாள் வரை எத்தனை கோடி முதல் போட்டு அல்லது கடன் வாங்கி படமெடுத்தாலும் இத்தனை ஷோ தான் தருவோம் என்றும், அப்படியே கையில் காலில் விழுந்து ஷோ வாங்கினாலும் 60-40, 70-30 என பர்சண்டேஜ் போட்டு, அப்படி ஓடிய படத்துக்கான ஷேர் தொகையையும் அத்தனை சீக்கிரம் தராமல் மாத கணக்கில் இழுத்தடித்து தயாரிப்பாளர்களை அலையவிட்டு தனி ராஜ்ஜியம் நடத்தி வந்த தியேட்டர் முதலாளிகளுக்கு இந்த டிஜிட்டல் ரிலீஸ் முடிவு பயங்கர ஷாக் ஆக்கி இருக்கிறது. எந்த ஒரு தொழிலிலும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் புதுசு புதுசாக வரும்போது அதற்கு தக்க தொழிலில் தங்களை மாற்றிக் கொ...
குணமடைவோர் எண்ணிக்கை உயர்வதால் கொரானாவுக்கு விரைவில் குட்பை சொல்லுமா தமிழகம்!

குணமடைவோர் எண்ணிக்கை உயர்வதால் கொரானாவுக்கு விரைவில் குட்பை சொல்லுமா தமிழகம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியாவிலேயே வைரஸ் தொற்றில் மீண்டவர்கள் அதிகம் தமிழகத்தில் தான்! உலகம் முழுதும் பெரும் பீதியை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரானா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பாதிப்பை கட்டுப்படுத்த முடிகிறது. இப்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 24 ஆயிரத்து 942 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் நாடு முழுதும் இதுவரை 779 பேர் உயிரிழந்துள்ளனர். இருந்த போதும் மருத்துவத் துறையினரின் தன்னலமற்ற சேவை, நோயாளரின் மன உறுதி காரணமாக கொடூர வைரஸ் பாதிப்பில் இருந்து தினமும் பலர் குணமடைந்து வருகின்றனர். நாடு முழுவதும் கொரானா பரவியவர்களில் 5 ஆயிரத்து 210 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் வை...
2ம் கட்டமாக ரேஷன்கார்டுக்கு ரூ.ஆயிரம் வழங்க தமிழக அரசு ஆலோசனை

2ம் கட்டமாக ரேஷன்கார்டுக்கு ரூ.ஆயிரம் வழங்க தமிழக அரசு ஆலோசனை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ரேஷன் கார்டுக்கு 2ம் கட்டமாக தலா ரூ.ஆயிரம் வழங்க முதல்வர் ஆலோசனை - அமைச்சர் தகவல்! அமைச்சர் கருப்பண்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: தமிழகத்தில் கொரானா தொற்று பரவலை தடுக்க அரசு சார்பில் முழு வீச்சில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக நிலைமை இப்போது கட்டுக்குள் உள்ளது. அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக ஏழை மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக மாத தொடக்கத்தில் தலா ரூ. 1000 நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதுவரை 97.5 சதவீதம் மக்களுக்கு இந்த நிவாரண உதவித் தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட...