சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

குஜராத்தில் குடி தண்ணீர் கேட்ட பெண்ணை அடித்து உதைத்த பாஜக எம்.எல்.ஏ.வின் காட்டுமிராண்டிதனம்..!

குஜராத்தில் குடி தண்ணீர் கேட்ட பெண்ணை அடித்து உதைத்த பாஜக எம்.எல்.ஏ.வின் காட்டுமிராண்டிதனம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாக்லெட் பாய் மாதவன் எரிமலையாக பொங்கி இருக்கிறார்... அவர் படத்துக்காகவா இல்லீங்க... நாடே தவிக்கும் தண்ணீர் பிரச்சினைக்கு... பாஜக.ஆளும் மாநிலம் குஜராத். அதிலும் சமீபத்திய மெகா வெற்றிக்கு சொந்தக்கார பிரதமர் மோடியின் நிர்வாகத்தில் இருந்த மாநிலம். நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவது போல அங்கேயும் தண்ணீர் பஞ்சம். பலராம் தவானி என்ற பிஜேபி எம்.எல்.ஏ.வின் கட்சி ஆபீசுக்கு ஒரு பெண் சென்று குடிதண்ணீர் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவுடன் போய் பேச... அந்த நேரம் எம்.எல்.ஏ. அங்கே இருந்திருக்கிறார். இந்த பெண் பேசியதை கேட்க மறுத்து அந்த பெண்ணை அலுவலகத்தில் இருந்த ஒருவரை விட்டு அடித்து வெளியில் தள்ளியிருக்கிறார் எம்.எல்.ஏ. அப்போதும் ஆத்திரம் அடங்காத எம்.எல்.ஏ. தான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதை மறந்து தெருக்குழாயடி சண்டை போல ஆபீஸ் அறையில் இருந...
தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி கருணாநிதி – பிறந்த நாளில் ஸ்டாலின் புகழாரம்

தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி கருணாநிதி – பிறந்த நாளில் ஸ்டாலின் புகழாரம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் வந்த முதல் பிறந்த நாள் என்பதால் தொண்டர்கள் பல இடங்களிலும் வழக்கத்தை விட உற்சாகமாக கருணாநிதி பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி; இன்று நிரந்தர உயிர்ப்புச் சக்தி! தலைவரே! உங்கள் பிறந்தநாள், இன்பத் தமிழினத்தின் பிறந்தநாள். நீங்கள் இருந்து சாதி...
பிரமாண்டமான சொகுசு கப்பல் தறிகெட்டு ஓடி விபத்து – வெனீஸ் பரபரப்பு

பிரமாண்டமான சொகுசு கப்பல் தறிகெட்டு ஓடி விபத்து – வெனீஸ் பரபரப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இத்தாலியில் பயணிகள் படகு மீது பெரிய சொகுசு கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். இத்தாலியின் வெனிஸ் நகரித்தின் கியுடெக்கா (Giudecca) கால்வாயை நோக்கி 2 ஆயிரத்து 679 பயணிகளுடன் 275 மீட்டர் நீளமும், 54 மீட்டர் உயரமும் கொண்ட பிரமாண்டமான பெரிய சொகுசு கப்பல் ஒன்று சென்றுள்ளது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாடை இழந்த அந்த கப்பல் அந்த பகுதியில் இருந்த பயணிகள் படகில் மோதி பின் கப்பல் நிறுத்தும் இடத்தின் தடுப்பில் மோதியது. இந்த விபத்தின் போது அங்கே இருந்தவர்கள் எடுத்த வீடியோவில் பிரமாண்டமான சொகுசு கப்பல் கட்டுபாட்டை இழந்து தடுப்பை நோக்கி வருவதும், எதிரே இருந்த சின்னசிறிய படகை இடித்து தள்ளியதையும் பார்த்து பலர் பயந்து ஓடும் காட்சிகள் பதிவாகி உள்ளன. எதிர்பாராமல் நடைபெற்ற இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்ததாகவும் இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவு...
ஜூன் 6ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்குமாம்..!

ஜூன் 6ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்குமாம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி, கேரளாவில் மே மாதம் இறுதி வரை தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இந்நிலையில் லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியது. இதன் மூலம் இன்னும் 4 நாட்களில் பருவ மழை தொடங்குமாம். இவர்களின் தகவல் படி வருகிற 6-ந்தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் பருவமழை தொடங்கிய சில தினங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பொழியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவ மழை குறித்த காலத்தில் தொடங்குவதும் இல்லை. மழையும் குறைவான அளவில் தான் பெய்கிறது. இந்த ஆண்டாவது மழை சரியான நேரத்தில் தொடங்கி தண்ணீர் பஞ்சத்தை போக்குமா என்பதே தமிழ்நாட்டின் இப்போதை...
தமிழை அழிக்க மும்மொழி திட்டம்… மெல்ல வெளிவரும் பாஜக உண்மைமுகம் – பா.சி. காட்டம்

தமிழை அழிக்க மும்மொழி திட்டம்… மெல்ல வெளிவரும் பாஜக உண்மைமுகம் – பா.சி. காட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழை அழிக்க மும்மொழி திட்டம்... மெல்ல வெளிவரும் பாஜக உண்மைமுகம் - பா.சி. காட்டம் புதிய கல்வி கொள்கையின்படி மூன்று மொழி கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த மும்மொழி கொள்கைக்கு முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பது: ஜ.க. அரசின் உண்மையான முகம் தெரிய தொடங்கிவிட்டது. புதிய கல்வி கொள்கையில் பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்தே மும்மொழித் திட்டம் என்று அறிவித்து இருக்கிறார்கள். பள்ளிகளில் மும்மொழி திட்டம் என்றால் என்ன அர்த்தம்? இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்குவார்கள் என்று பொருள். இந்தி மொழி கட்டாய பாடம் என்றால் இந்தி திணிப்பு என்று பொருள். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையிலேயே இந்தி திணிப்புக்கு கொடி அசைத்திருந்தார்கள் என்பதை நான் தேர்தலின் போதே ச...
அழகி பட்டம் சர்ச்சையா… அழகி போட்டியில் தொழில் போட்டி  சிக்கலா… அடப்பாவமே ஆன சூர்யா பட நாயகி..!

அழகி பட்டம் சர்ச்சையா… அழகி போட்டியில் தொழில் போட்டி சிக்கலா… அடப்பாவமே ஆன சூர்யா பட நாயகி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  அழகி போட்டியால் சிக்கலா... அழகி பட்டத்தால் சர்ச்சையா - சிக்கலில் சூர்யா பட நாயகி வெற்றி நடிப்பில் ஹிட்டான 8 தோட்டாக்கள், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மீராமிதுன். பெங்களூரைச் சேர்ந்த இவரது உண்மையான பெயர் தமிழ்ச்செல்வி. இவர் நடிக்க வருவதற்கு முன் மாடலிங்கில் இருந்துள்ளார் அதோடு மிஸ் குயின் ஆஃப் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா ஆகிய போட்டிகளில் அழகிப்பட்டம் வென்றுள்ளார். தற்போது மிஸ் தமிழ்நாடு திவா எனும் பெயரில் தமிழ்ப்பெண்களுக்கென பிரத்யேகமாக அழகி போட்டி நடத்த முற்பட்டுள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியை தான் நடத்தக் கூடாது என்பதற்காக மிரட்டல் விடுப்பதாகக் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரில் அஜித் ரவி, ஜோ மைக்கேல் என்பவருடன் இணைந்து தன்னை மிரட்டுகிறார்கள் என்றும்,அதோடு தனது சமூக வலைதளங்களை ம...
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுடன் கிரண்பேடி திடீர் சந்திப்பு… புதுவை காங்கிரஸ் அரசு கலைப்பா..?

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுடன் கிரண்பேடி திடீர் சந்திப்பு… புதுவை காங்கிரஸ் அரசு கலைப்பா..?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுடன் கிரண்பேடி திடீர் சந்திப்பு... புதுவை காங்கிரஸ் அரசு கலைப்பா..? புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடி டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவையும் சந்தித்து பேசினார். புதுச்சேரியில் ஏற்கனவே முதல்வர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் அடிக்கடி அதிகார சர்ச்சை இருந்து கொண்டே வருகிறது. சமீபத்தில் ஆட்சி அதிகாரத்தில் கிரண்பேடி தேவை இல்லாமல் ஆதீக்கம் செலுத்த கூடாது என கோர்ட் உத்தவிட்டது. அதே நேரம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலே அங்கு நடைபெறாமல் இருக்கிறது. இத்தனை பரபரப்பு இருக்கும் போது கிரண்பேடி திடீரென டில்லி சென்று பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமீத்ஷாவையும் சந்தித்து பேசியது பாண்டிச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற...
ஆந்திராவில் படிப்படியாக பூரண மதுவிலக்கு – முதல்வர் ஜெகன் அதிரடி ஆரம்பம்

ஆந்திராவில் படிப்படியாக பூரண மதுவிலக்கு – முதல்வர் ஜெகன் அதிரடி ஆரம்பம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஆந்திராவில் படிப்படியாக பூரண மதுவிலக்கு - முதல்வர் ஜெகன் அதிரடி ஆரம்பம் ஆந்திராவில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த புதிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்திய தேர்தலில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை படுதோல்வி அடையச்செய்து ஜெகன் மோகன் ரெட்டி இமாலய வெற்றி பெற்றார். 30ம் தேதி ஆந்திர முதல்வராக பதவி ஏற்றார். இன்னும் சில தினங்களில் தனது மந்திரிசபையை விரிவு படுத்த இருக்கிறார். இந்த சூழலில் ஆந்திர மாநில முதல்-மந்திரி ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி தடேபள்ளியில் உள்ள தனது இல்லத்தில் நிதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்து நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவர், மாநிலத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மது குடிக்கும் பழக்கத்தை...
மீண்டும் 8 வழிச்சாலை… படு தோல்வியை கொடுத்த தமிழகத்தை பதவியேற்ற மறு நாளே வஞ்சிக்க தொடங்கிய மோடி சர்கார்..!

மீண்டும் 8 வழிச்சாலை… படு தோல்வியை கொடுத்த தமிழகத்தை பதவியேற்ற மறு நாளே வஞ்சிக்க தொடங்கிய மோடி சர்கார்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மீண்டும் 8 வழிச்சாலை... படு தோல்வியை கொடுத்த தமிழகத்தை பதவியேற்ற மறு நாளே வஞ்சிக்க தொடங்கிய மோடி சர்கார்..! மத்திய அரசின், ‘பாரத்மாலா’ திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்காக வனப்பகுதியில் மட்டும் 120 ஹெக்டோ் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும், அந்த நிலங்களில் உள்ள 10 ஆயிரம் பாசன கிணறுகள், 100 குளங்கள், பல லட்ச மரங்கள் அழிக்கப்படும் என்றும், அதுவும் 1.20 லட்சம் மரங்கள் வெட்டப்பட உள்ளதாகவும் குற்றம் சாட்...
மீண்டும் சி.எம்.ஆக ஆந்திர முதல்வர்  ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை படத்தில் நடிக்கிறார் சூர்யா..!

மீண்டும் சி.எம்.ஆக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை படத்தில் நடிக்கிறார் சூர்யா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை படத்தில் சூர்யா..! YS ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாற்றை யாத்ரா என்ற பெயரில் படமாக்கிய மதி வி.ராகவ் மீண்டும் படம் எடுக்க முடிவு செய்துள்ளார் ஏற்கனவே எடுத்த யாத்ரா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்க அந்த படக்குழு முடிவு செய்து உள்ளது. எடுக்க திட்டமிட்ட இரண்டாம் பாகத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பயணம் ... வளர்ச்சி... தற்போதைய தேர்தலில் பெற்ற மெகா வெற்றி... முதல்வரானது பற்றி பல தகவல்களை வெளிப்படையாக காட்ட திட்டமிட்டிருக்கிறார்கள். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படத்தை எடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள். இந்த இரு மொழிகளிலும் ரசிகர்களை அதிகம் ஈர்க்கும் சூர்யாவை ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் வாழ்க்கை படத்தில் நடிக்க அழைத்தால் சம்மதம் தெரிவிப்பீர்களா...