திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

திரைப்படங்கள்

சூர்யாவின் மிக உயரமான என்.ஜி.கே. கட் அவுட் அனுமதி இல்லாததால் அகற்ற உத்தரவு

சூர்யாவின் மிக உயரமான என்.ஜி.கே. கட் அவுட் அனுமதி இல்லாததால் அகற்ற உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யாவின் மிக உயரமான என்.ஜி.கே. கட் அவுட் அனுமதி இல்லாததால் அகற்ற உத்தரவு   இந்தியாவிலேயே மிக உயரமான கட் அவுட் நடிகர் சூர்யாவுக்கு "என்.ஜி.கே." படத்திற்காக வைத்தார்கள். திருவள்ளூர் மாவட்ட சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் திருத்தணியில் இந்த கட் அவுட் வைத்தார்கள். 220 அடி உயரமாக வைக்கப்பட்ட இந்த கட் அவுட் நேற்று முழுக்க டிரண்டிங்கில் வைரலாகியது. இந்த நிலையில் படம் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த கட் அவுட் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி அந்த கட் அவுட்டை அகற்ற உத்தரவிட்டார்கள். இதையடுத்து சூர்யா ரசிகர்கள் சோகமடைந்தார்கள்....
ஹிர்த்திக் ரோஷன் படத்தில் நடிக்க  தீவிரவாதிகள் போல் வேடமிட்டிருந்த துணை நடிகர்கள் கைது

ஹிர்த்திக் ரோஷன் படத்தில் நடிக்க தீவிரவாதிகள் போல் வேடமிட்டிருந்த துணை நடிகர்கள் கைது

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மும்பை நகரின் வசாய் பகுதியில் சாலையில் உள்ள ஒரு கடையில் சிகரெட் வாங்கிக்கொண்டு போன இருவரை தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், வசாய் பகுதியின் அருகில் பாலிவுட் நடிகர்கள் ஹிர்த்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ரோப் ஆகியோர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்ததும், கைதாகி இருப்பவர்கள் இருவரும் அந்த திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்காக தீவிரவாதிகள் போல் வேடமிட்டிருந்த துணை நடிகர்கள் என்பதும் தெரிய வந்தது. ஆனால் அதற்குள் மும்பையில் தீவிரவாதிகள் இருவர் கைது என செய்திகள் பரவி பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது. காரணம் இரண்டாம் முறையாக மோடி இன்று பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில் மும்பையில் தீவிரவாதிகள் கைது என்றால் பதட்டம் இருக்காதா என்ன... விசாரணை செய்த பின் அவர்கள் இருவரும் தீவிரவா...
சஸ்பெண்ட் ஆன போலீசாக சசிக்குமார்..!

சஸ்பெண்ட் ஆன போலீசாக சசிக்குமார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை மலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜி.என்.கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில், குருசோமசுந்தரம், இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமரன், சுஜாதா, வித்யா ப்ரதீப், ரோஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜெபக் மூவிஸ் சார்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இந்த படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் உருவாகிறது. படத்தில் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸாக நடிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....
விஜய்யிடம் அட்லி கேட்ட தேதிகள்… பட்ஜெட் எகிறுதா விஜய்63..?!

விஜய்யிடம் அட்லி கேட்ட தேதிகள்… பட்ஜெட் எகிறுதா விஜய்63..?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய்யிடம் அட்லி கேட்ட தேதிகள்... பட்ஜெட் எகிறுதா விஜய்63..?!   ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் மெகா பட்ஜெட்டில் விஜய் 63 உருவாகி வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து... டெக்னீஷியன் படுகாயம்... கதை திருட்டு ... ஷூட்டிங் படங்கள் ரிலீஸ் என பல பரபரப்பை எதிர் கொண்டாலும் எதையும் எடுத்து கொள்ளாமல் விஜய்63 ஷூட்டிங் திட்டமிட்டபடி நடந்து வருகிறது. இந்த நிலையில் பிரமாண்டமான இயக்குனர் ஷங்கரின் படங்களை விட அவரது உதவியாளர் இயக்கும் படம் மிக பிரமாண்டமான முறையில் வருகிறது என்றால் அது அட்லி படம் தான் என்ற பேரை பெற்றிருக்கிறார் அட்லி. இதை உறுதி படுத்தும் விதமாக விஜய்63 பட வியாபாரம் இதுவரை இல்லாத அளவுக்கு விற்பனை ஆகி இருக்கிறது.   இதெல்லாம் இருக்கட்டும்... விஜய் இந்த படத்தில் நடிக்க கொடுத்த கால்ஷீட் தேதிகளோடு சேர்த்து மீண்டும் 40 நாட்கள் கூடுதலாக வேண்டும் என அட்லி கேட்டிர...
தனுஷ் இன்று வெளியிடும் டாப்சியின் கேம் ஓவர் டிரைலர்..!

தனுஷ் இன்று வெளியிடும் டாப்சியின் கேம் ஓவர் டிரைலர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஆடுகளம் மூலமாக தமிழில் அறிமுகம் ஆன டாப்சி நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழில் வருகிறார். அவர் இப்போது "கேம் ஓவர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இதனை இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸும், ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் நிலையில், இதன் டிரைலர் இன்று 1 மணிக்கு வெளியாகிறது. தமிழ் டிரைலரை நடிகர் தனுஷும், தெலுங்கு டிரைலரை தெலுங்கு நடிகர் ராணாவும் வெளியிடுகிறார்கள். இந்தி டிரைலரை டாப்சியே ரிலீஸ் செய்கிறாராம். தமிழில் ஆடுகளம் படத்தில் ஜோடியாக நடித்த டாப்சியின் பட டிரைலரை தனுஷ் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
மலேசியாவில் தொடங்கும் சிம்புவின் மாநாடு..!

மலேசியாவில் தொடங்கும் சிம்புவின் மாநாடு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் சிம்பு வந்தா ராஜாவாதான் வருவேன் படத்துக்கு பின் உடல் எடை குறைக்க அமெரிக்கா சென்றார். அங்கு கடும் பயிற்சிகள் செய்து ஸ்லிம் ஆகி தம்பி குறளரசன் திருமண நேரத்தில் சென்னை திரும்பினார். இப்போது மாஜி காதலி ஹன்சிகாவின் 50வது படமான மஹாவில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. மஹா படத்தை முடித்து கொடுத்ததும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படமான மாநாடு பட ஷூட்டிங்கில் சிம்பு கலந்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற உள்ளது. இதற்காக படக்குழுவுக்கு விசாவுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். முன்னதாக இயக்குகிறார் வெங்கட் பிரபு உள்ளிட்ட டெக்னீஷியன்கள் மலேசியா சென்று படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்கிறார்கள். மலேசியாவில் முதல் கட்ட படப்பிடி...
தாதா87 பட இயக்குனரோடு சேர்ந்து “பீட்ரு” விடப் போகும் அம்சவர்தன்..!

தாதா87 பட இயக்குனரோடு சேர்ந்து “பீட்ரு” விடப் போகும் அம்சவர்தன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தாதா87 பட இயக்குனரோடு இணைந்து "பீட்ரு" விட தயாராகி வருகிறார் நடிகர் அம்சவர்தன். ஓவரா பேசுகிறவர்களைப் பார்த்து என்னமா "பீட்ரு" உட்றான் பார்றா என்று சொல்வார்கள். அந்த பீட்ரு வார்த்தையை படத் தலைப்பாக வைத்திருக்கிறார் இயக்குனர் விஜய்ஸ்ரீ. சமீபத்தில் ரிலீஸ் ஆகி பரவலாக பேசப்பட்ட படம் தாதா 87. கதாநாயகியை திருநங்கையாக காட்டியிருப்பார். சாருஹாசன் தாதாவாக நடித்திருப்பார். இந்த படத்தின் கதையும், திரைக்கதையும் பலராலும் பாராட்டப்பட்டது. இந்த பட்த்தையும் அதன் மேக்கிங்கையும் பார்த்து விட்டு இயக்குனர் விஜய்ஸ்ரீயை அழைத்து பேசியிருக்கிறார் நடிகர் அம்சவர்தன். இப்போது இந்த கூட்டணி இணைந்து பீட்ரு படத்தை உருவாக்கி வருகிறது. முழு நீள நகைச்சுவை படமாக உருவாகி வரும் இந்த பீட்ருவில் காமெடி நடிகர்கள் பட்டாளம் அதகளப்படுத்தப் போகிறதாம். சத்தமில்லாமல் 15நாட்கள் படப்பிடிப்பு நடத...
விஜய், அஜீத்தை பின்னுக்கு தள்ளி உச்சத்துக்கு போன சூர்யா என்.ஜி.கே. கட் அவுட்..!

விஜய், அஜீத்தை பின்னுக்கு தள்ளி உச்சத்துக்கு போன சூர்யா என்.ஜி.கே. கட் அவுட்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சூர்யாவுக்கு இந்தியாவிலேயே மிக உயரமான  215 அடி ‘என்.ஜி.கே’  கட்-அவுட் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘என்.ஜி.கே’ படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. செல்வராகவன் இயக்கத்தில் முதன்முதலாக சூர்யா நடிக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகள் நிலவியுள்ளது. இந்தப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், பொன்வண்ணன், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்துக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்துக்காக சூர்யா ரசிகர்கள் இந்தியாவிலேயே மிக உயரமான கட்-அவுட் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து திருவள்ளூர் சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக இந்த மாதம் 17-ஆம் தேதி பூஜை போடப்பட்டு முழூவீச்சில் வேலைகள் நடந்தன. இதற்கு முன் விஜய் சர்கார் படத்துக்காக கேரளாவில் விஜய்க்கு 175 அடியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டும், அதனைத் தொடர்ந்து ...
நெல் ஜெயராமனின் வாழ்க்கையை படமாக்கும் சசிகுமார்..!

நெல் ஜெயராமனின் வாழ்க்கையை படமாக்கும் சசிகுமார்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நெல் ஜெயராமனின் வாழ்க்கையை படமாக்கும் சசிகுமார்..! திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் நெல் ஜெயராமன். அரிய வகை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் உயிரிழந்தார். நெல் ரகங்களைத் தேடிக் காத்த நெல் ஜெயராமன் குறித்த செய்தியை இந்த வருட 12ம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் பாடமாக தமிழக அரசு வைத்திருக்கிறது இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான சசிகுமார், இவருடைய வாழ்க்கை படமாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் ‘இன்று பாடமாக வந்திருக்கும் உங்கள் உழைப்பும் அர்ப்பணிப்பும் விரைவில் படமாக வரும்... அதற்கான பணிகளில் நாங்கள் இருக்கிறோம்’ என்று பதிவு செய்திருக்கிறார்....
போலீஸ் அதிகாரியாக இருந்து சமூக அவலங்களை பேசும் படமாக அஜீத் 60 இருக்குமாம்..!

போலீஸ் அதிகாரியாக இருந்து சமூக அவலங்களை பேசும் படமாக அஜீத் 60 இருக்குமாம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்தையும் எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். அஜித்திடம், வினோத் அரசியல் கலந்த திரில்லர் கதை மற்றும் ஆக்‌ஷன் கதை ஒன்றையும் கூறினாராம். அரசியல் கதைக்கு நோ சொன்ன அஜித், ஆக்‌ஷன் கலந்த திரில்லர் கதைக்கு சம்மதம் சொல்லி இருக்கிறார். இந்த கதையில் போலீஸ் அதிகாரியாக வந்தாலும் சமூக பிரச்சினைகள் குறித்து பேசுவாராம். சமீபத்தில் ஆந்திர தேர்தலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நின்ற எம்பி ஆன இன்ஸ்பெக்டர் நிஜக்கதை மிக வைரல் ஆனது. ஒரு அரசியல்வாதியை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நின்று அந்த இன்ஸ்பெக்டர் எம்.பி.ஆக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்....