சூர்யாவின் மிக உயரமான என்.ஜி.கே. கட் அவுட் அனுமதி இல்லாததால் அகற்ற உத்தரவு
சூர்யாவின் மிக உயரமான என்.ஜி.கே. கட் அவுட் அனுமதி இல்லாததால் அகற்ற உத்தரவு
இந்தியாவிலேயே மிக உயரமான கட் அவுட் நடிகர் சூர்யாவுக்கு "என்.ஜி.கே." படத்திற்காக வைத்தார்கள்.
திருவள்ளூர் மாவட்ட சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் திருத்தணியில் இந்த கட் அவுட் வைத்தார்கள். 220 அடி உயரமாக வைக்கப்பட்ட இந்த கட் அவுட் நேற்று முழுக்க டிரண்டிங்கில் வைரலாகியது.
இந்த நிலையில் படம் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த கட் அவுட் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி அந்த கட் அவுட்டை அகற்ற உத்தரவிட்டார்கள்.
இதையடுத்து சூர்யா ரசிகர்கள் சோகமடைந்தார்கள்....









