“கபடி வீரன்” ஆடியோ விழாவில் நமீதா மச்சானைப் பார்த்து ஷாக் ஆன பாக்யராஜ்..!
"கபடி வீரன்" பாடல்கள் வெளியீட்டு விழா சுவாரஸ்யம்!
ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா ஆசிர்வாதத்துடன் "அம்மை அப்பன் புரடக்ஷன்ஸ்" பெருமையுடன் வழங்க ஆக்ஷன் ஸ்டார் அதிரடி அரசு கதை , திரைக்கதை, வசனம் , பாடல்கள் எழுதி ஒளிப்பதிவு செய்து , இசையமைத்து இயக்கித் தயாரித்தும் இருக்கும் படம் "கபடி வீரன்". இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா., சென்னை , சாலிகிராமம் பிரசாத் லேப் ப்ரிவியூ திரையரங்கில், ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா , தொழிலதிபர் தமிழ்செல்வன் , நடிகர் பானுச்சந்தர் ,அறிமுக நாயகி காயத்ரி …உள்ளிட்ட இப்படக் குழுவினருடன் திரையுலக வி.ஐ.பிகள் கே.பாக்யராஜ் , ராதாரவி, ஜாகுவார் தங்கம் , நமீதா , 'பவர் ஸ்டார்' சீனிவாசன் , விஜயமுரளி , பெரு துளசி பழனிவேல் … உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய திரைக்கதை மன்னன் இயக்குநர் - நடிகர் கே.பாக்யராஜ் ,...









