வெள்ளிக்கிழமை, அக்டோபர் 2
Shadow

செய்திகள்

வாய்க் கொழுப்பில் பேசி சர்ச்சையில் சிக்கி நீதிமன்றம் காலில் விழுந்து பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆடிட்டர் குருமூர்த்தி!

வாய்க் கொழுப்பில் பேசி சர்ச்சையில் சிக்கி நீதிமன்றம் காலில் விழுந்து பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆடிட்டர் குருமூர்த்தி!

HOME SLIDER, kodanki headlines news, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  வாய்க் கொழுப்பில் பேசி சர்ச்சையில் சிக்கி நீதிமன்றம் காலில் விழுந்து பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆடிட்டர் குருமூர்த்தி! நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததால் கிரிமினல் அவதூறு வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.   கடந்த 2018ல் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அப்போதைய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் தலைமையிலான அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. அப்போது பாஜக ஆதரவாளரான ஆடிட்டர் குருமூர்த்தி பதிவிட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.   குருமூர்த்தியின் இந்த ட்வீட்டுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கத்தினர் டெல்லி உயர் நீதிமன்றத்...
கவிஞர் வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருதை கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் பெற்றார்!

கவிஞர் வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருதை கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் பெற்றார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை வெற்றித் தமிழர் பேரவை ஆண்டுதோறும் கவிஞர்கள் திருநாளாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் ஜூலை 13 வியாழக்கிழமை காலை 9 மணிக்குச் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள பொன்மணி மாளிகை திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கம்பம் பெ.செல்வேந்திரன் இருவரும் வாழ்த்துரை வழங்கினார்கள். வெற்றித் தமிழர் பேரவை ஒவ்வோராண்டும் கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கவிஞரைத் தேர்வு செய்து கவிஞர்கள் திருநாள் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு கவிஞர்கள் திருநாள் விருதை கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் பெற்றார். அவருக்குக் கவிஞர் வைரமுத்து விருது வழங்கினார். கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளை வழங்கும் இந்த விருது ரூ.25,000 ரொக்கம், பாராட்டுப் பட்டயம் மற்றும்...
தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா!

தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா!

CINI NEWS, helth tips, HOME SLIDER, kodanki darbar, kodanki headlines news, kodanki voice, NEWS, உடல் நலம், சினி நிகழ்வுகள், செய்திகள்
  தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பாக சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா  சென்னையில் இனிதே நடந்து முடிந்தது. இயக்குனர் திரு வெற்றி மாறன் அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கம் ஏற்பாடு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் 1 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கி சிறப்பித்தார். மருத்துவ காப்பீடு அட்டைகளை வழங்கியதுடன் ஆரோக்கியம் சார்ந்த பல தகவல்களையும் பத்திரிகையாளர்களின் நலன் குறித்தும் மேலும் நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டார். ' உங்களுக்கும் சரி எனக்கும் சரி சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் உணவு உட்கொண்டு வாழ்வது என்பது அரிதான காரியம் ஆனால் நேரத்திற்கு சீரான உணவு எடுத்துக் கொண்டாலே நல்ல தூக்கம் என்பது தானாகவே கிடைக்கும். எப்போது தூங்கினாலும் சரி ஆழமான தூக்கம் அவசியம். நண்பர்களுடன் இணைந்து 2000 வரை...
பெர்லினில் நடைபெறும் ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சிறப்பு சிறுமி…

பெர்லினில் நடைபெறும் ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சிறப்பு சிறுமி…

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
  ஜெர்மனி நாட்டின் தலைநகரம் பெர்லினில் நடைபெறும் ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சிறப்பு சிறுமி.... ஜெர்மனியில் தற்போது சிறப்பு குழந்தைகள் மற்றும் சிறப்பு இளைஞர்கள் & இளைஞிகளுக்கான "ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் வேர்ல்ட் கேம் 2023" நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் உலகத்தில் உள்ள பல நாடுகளில் இருந்து சிறப்பு குழந்தைகள், சிறப்பு இளைஞர்கள் & இளைஞிகள் பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இப்போட்டியில் கலந்துகொள்ள சென்னையை சேர்ந்த ஒரு சிறப்பு சிறுமி மற்றும் இரண்டு சிறப்பு இளைஞர்கள் என மூவர் நீச்சல் போட்டியில் கலந்துகொள்ள சென்றனர்.  ஜூன் 20, 2023 அன்று நடைபெற்ற நீச்சல் போட்டியில் 25 மீட்டர் நீச்சல் போட்டியில் சென்னையில் இருந்து சென்ற 17 வயது சிறுமி பூஜா என்பவர் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தங்கப் பதக்கம் வென்ற பூஜா 'Down Syndrome Trisomy 21'...
மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்னை குறித்து பேச மறுப்பதேன்? – குஷ்பூவுக்கு மாதர் சங்கம் கேள்வி

மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்னை குறித்து பேச மறுப்பதேன்? – குஷ்பூவுக்கு மாதர் சங்கம் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகைகள்
  மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்னை குறித்து பேச மறுப்பதேன்? - குஷ்பூவுக்கு மாதர் சங்கம் கேள்வி பெண்களுக்கு பிரச்சனை என்றால் தேசிய  மகளிர் ஆணையம் கேள்வி கேட்கும் என கூறிய பாஜக நிர்வாகி  குஷ்பூ, மல்யுத்த வீராங்களைகளின் பிரச்னை குறித்து பேச மறுப்பதேன்? என அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.  திமுக நிர்வாகியான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி  தன்னை பற்றி பொது மேடையில் அவதூறாக பேசியதாகி கூறி பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருக்கும்  குஷ்பூ தனது அலுவலகத்திலிருந்து செய்தியார்களுக்கு அளித்த  பேட்டியில் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார். பெண்களை பற்றி அவதூறாக பேச தந்தைக்கோ கணவருக்கோ உரிமை இல்லாத போது  திமுக நிர்வாகியான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஒரு பொதுக்கூட்டத்தில் எப்படி பேச உரிமை இருக்கிறது ?  என கேள்வி எழுப்பி கடுமையாக சாடினார்.   அ...
பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவர்களோடு நான் கைகோர்ப்பேன்- திருமாவளவன்!

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவர்களோடு நான் கைகோர்ப்பேன்- திருமாவளவன்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
பெரம்பலூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. இன்று விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பாராளுமன்ற இரு அவைகளுக்கும் குடியரசு தலைவர் தான் தலைவராக இருக்கிறார். அரசியலமைப்பு சட்டமே அதை தான் உறுதிப்படுத்துகிறது. புதிதாக பாராளுமன்ற கட்டிடம் கட்டியுள்ள நிலையில் அதன் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. திட்டமிட்டே உள்நோக்கத்தோடு குடியரசு தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. ஜனநாயக மரபை சிதைக்கும் வகையில் மோடி அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவின் போது அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. தற்போது குடியரசு தலைவரும் அழைக்கப்படவில்...
பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவதில் டோனிக்கு நிகர் அவர்தான்- ஹர்திக் பாண்ட்யா!

பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவதில் டோனிக்கு நிகர் அவர்தான்- ஹர்திக் பாண்ட்யா!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
சி.எஸ்.கே. அணியிடம் தோற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறாமல் போனது குறித்து குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:- நாங்கள் பலமாக இருந்த போதும் சில தவறுகள் செய்துவிட்டோம். 15 ரன்களை கூடுதலாக விட்டு கொடுத்துவிட்டோம். இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது. நிறைய விஷயங்களை நாங்கள் சரியாக செய்தோம். சில ஓவர்களில் ரன் அதிகமாக சென்றுவிட்டது. ஆட்டத்தில் பனி வரும் என்று எதிர்பார்த்தேன். வரவில்லை. நாங்கள் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை. இறுதிப் போட்டியில் நுழைய எங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. தவறுகளை திருத்திக் கொண்டு அடுத்த போட்டியை சந்திப்போம். சிஎஸ்கே ரசிகர்களை மறைமுகமாக சாடிய ஜடேஜா பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவதில் டோனிக்கு நிகர் அவர்தான். அவரை போன்று பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவது கடினம். டோனி அடிக்கடி ...
பைக் சுற்றுலா நிறுவனம் தொடங்கிய அஜீத்!

பைக் சுற்றுலா நிறுவனம் தொடங்கிய அஜீத்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, sports, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  *அஜித்குமார் தனிப்பட்ட முறையில் வெளியிடும் அறிவிப்பு:* இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன்: 'வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்'. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் *ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride)* என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும். பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதி...
ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு – முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி

ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு – முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது! தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம். - முதல்வர் ஸ்டாலின்...
மலிவான அரசியல் செய்பவர்களின் எண்ணம் நிறைவேறாது – வீடியோ விளக்கம் வெளியிட்ட பிடி ஆர்

மலிவான அரசியல் செய்பவர்களின் எண்ணம் நிறைவேறாது – வீடியோ விளக்கம் வெளியிட்ட பிடி ஆர்

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  சர்ச்சைக்குரிய ஆடியோ தொடர்பாக, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வீடியோ மற்றும் அறிக்கை வெளியிட்டு பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் வரலாறு காணாத சாதனைகளையும், புதிய திட்டங்களையும், முக்கிய நிதி சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு, கடந்த 10 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை, வெறும் இரண்டே ஆண்டுகளில் செய்து முடித்துள்ளோம். அதனால்தான் இதனை திராவிட மடல் ஆட்சி என்று கூறுகிறோம். திராவிட மாடலை ஜீரணிக்க முடியாத சிலர்தான் இதுபோன்ற மலிவான தந்திரங்கள் கொண்ட போலியான ஆடியோ ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளனர். அடுத்த தலைமுறையின் நம்பிக்கை உதயநிதி ஸ்டாலின். எனக்கு சபரீசன் மிகவும் நம்பகமான ஆலோசகர். நான் பேசியதாக வெளியான ஆடியோ ஒளிப்பதிவு முழுக்க முழுக்க சித்தரிக்கபப்ட்டவை. இதுபோன்ற ஒலிப்பதிவுகள் உலக அளவில் கிடைக்கின்றது. பி...