அப்போலோ மருத்துவமனைகளின் ₹8,600 கோடி விரிவாக்கத் திட்டம் – திட்ட இயக்குநராக உபாசனா காமினேனி கொனிடெலா நியமனம்!
அப்போலோ மருத்துவமனைகளின் ₹8,600 கோடி விரிவாக்கத் திட்டம் – திட்ட இயக்குநராக உபாசனா காமினேனி கொனிடெலா (Upasana Kamineni Konidela) நியமனம்!
புதிய மருத்துவமனைகள் அமைத்தல், ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்துதல், நோயாளிகளுக்கான மருத்துவச் சேவைகளை எளிதாக அணுகும் வகையில் வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை உபாசனா காமினேனி கொனிடெலா மேற்கொள்ள உள்ளார்.
அப்போலோ மருத்துவமனைகள் இந்தியா முழுவதும் தனது மருத்துவக் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில், உபாசனா காமினேனி கொனிடெலாவை Director – Projects பொறுப்பில் நியமித்துள்ளது. அப்போலோ குழுமத்தின் தலைமை நிர்வாகம், மருத்துவக் குழுக்கள் மற்றும் திட்டப் பங்குதாரர்களுடன் இணைந்து, இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட உள்ள மருத்துவமனைத் திட்டங்களின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தும் பணிகளில் அவர் கவனம் செலுத்த உள்ளார்.
...









