சனிக்கிழமை, ஜூலை 25
Shadow

REVIEWS

இந்திரா மிரட்டல் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

இந்திரா மிரட்டல் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
      இந்திரா மிரட்டல் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5   இயக்கம்: சபரீஷ் நந்தா நடிகர்கள்: வசந்த் ரவி, சுனில், மெஹ்ரின் பிர்சாடா, அனிகா ஒளிப்பதிவு: பிரபு ராகவ் இசை: அஜ்மல் தாஹ்சீன் தயாரிப்பு: ஜாபர் சாதிக், இர்பான் மாலிக்   தமிழ் சினிமாவில் த்ரில்லர் கதை என்றால் ஒரே டைப்பில் அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் பல விதங்களில் அரைத்து தள்ளுவார்கள்… ஆனால்… இந்திரா சற்றே வித்தியாசமான கோணத்தில் யோசிக்க முடியாத திரைக்கதையோடு வந்திருப்பது சற்றே ஆறுதல்… சரி அப்படி என்ன வித்தியாசம்னு யோசிக்கிறீங்களா… வாங்க கதைக்குள்ள போகலாம்…   ஹீரோ வசந்த்ரவி ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரா இருந்தாலும் ஒரு நாள் நல்லா குடிச்சிட்டு  போலீஸ் ஜீப்பை விபத்தில் சிக்க வைத்ததால சஸ்பென்ஸ் ஆக்கப்படுகிறார்.. வீட்ல சும்மா இருப்பதால் குடிக்கு அடிமை ஆகிறார...
நாளை நமதே விமர்சனம்

நாளை நமதே விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  நாளை நமதே விமர்சனம் வெண்பா கதிரேசன் இயக்கத்தில் வெளியாகி உள்ள நாளை நமதே படத்தின் மைய கருவே பட்டியலின மக்களுக்கு அதிகாரம் மறுக்கப்படுவதும், ஆதீக்க சாதியின் அடக்குமுறைகளும்தான். கதைப்படி ஆண்டாண்டு காலமாக உள்ளாட்சி தேர்தல்களில் ஒரே சாதியை சேர்ந்தவரே தலைவராக ஏலம் எடுத்து வெற்றி பெற்று வருகிறார். இந்த சூழலில் அந்த உள்ளாட்சி தலைவர் பதவி பட்டியலினத்தவருக்காக ஒதுக்கப்படுகிறது. இதனால் அங்கே பெரும் மோதல் ஏற்ப்பட்டு பல உயிர்கள் பலியாகிறது. அதனால் தேர்தல் நடைபெறாமல் மீண்டும் அது பொதுத் தொகுதி ஆகிறது. பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அது தனித் தொகுதி ஆக அறிவிக்கப்படுகிறது. இந்த முறையாவது தேர்தல் நடந்ததா? யார் வெற்றி பெற்றார்கள்? என்ன நடந்தது என்பதே நாளை நமதே படத்தின் கதை. மதுமிதா மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார். இன்னும் பல கிராமங்களில் உள்ள தனித் தொகுதிகளின் நிலை இப்படி ...
ராகு கேது விமர்சனம்

ராகு கேது விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
    ராகு கேது விமர்சனம் தமிழில் பல ஆண்டுகளுக்கு பின் ரிலீஸ் ஆகியுள்ள புராண பக்தி படம் ராகு கேது. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த மோதலில் அசுரர்கள் இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களையும் துன்புறுத்தினார்கள். தேவர்கள் தங்களை அசுரர்களிடமிருந்து காப்பாற்றி அழியாத தன்மையைப் பெறுவதற்காக நாரதரின் யோசனைப்படி மகாவிஷ்ணுவை சந்தித்து தங்களை அசுரர்களிடமிருந்து காத்து அருளுமாறு வேண்டிக் கொண்டார்கள். அப்போது அவர், திருப்பாற்கடலில் மலையை மத்தாகவும், பாம்பைக் கயிறாகவும் வைத்து கடைந்தால் அதிலிருந்து அமுதம் உண்டாகும் என்றும், அதை அருந்துபவர்களுக்கு மரணம் கிடையாது என்று அசுரர்களிடம் தெரிவியுங்கள். இதைக் கேட்கும் அவர்கள் உடனே இதற்குச் சம்மதிப்பார்கள். அசுரர்களின் உதவியோடு பாற்கடலைக் கடையும் பணியைத் துவக்குங்கள் என்றார் மகாவிஷ்ணு. இந்திரன் அசுரர்களை அழைத்து பாற்கடலைக் கடையும் விஷ...
மாரீசன் கோடங்கி விமர்சனம் 3/5

மாரீசன் கோடங்கி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
    ஒரு திருடனும் ஞாபக மறதி பாதிப்பில் உள்ள ஒருவரும் பயணிக்க நேர்ந்தால் என்ன ஆகும்... குறிப்பாக ஞாபகமறதி நபரிடம் லட்சக்கணக்கில் பணம் இருப்பதை திருடன் தெரிந்து கொண்டு அதை பறிக்க திட்டமிட்டு நல்லவன் போல நடித்தால் என்ன நடக்குமோ அதைதான் திருடனாக பகத்பாசிலும், ஞாபகமறதி நபராக வடிவேலுவும் நடித்திருக்கிறார்கள். ஆனால், வடிவேலுவோ பகத் பாசிலுடன் பயணித்தாலும், அவருக்கே தெரியாமல் மிகப்பெரிய வேலை செய்கிறார். அதோடு, இவர்கள் பயணிக்கும் ஊர்களில் சிலர் கொல்லப்படுகிறார்கள். அவர்களை கொன்றது யார் என தெரியாமல் போலீஸ் திணறுகிறது. கொலைகளுக்கும், பகத் பாசிலுக்கும் என்ன தொடர்பு? வடிவேலு உண்மையில் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை. கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரது எதார்த்தமான நடிப்பு மற்றும் நகைச்சுவை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்ல முயற்சிக்கிறார்கள...
ஓஹோ எந்தன் பேபி விமர்சனம் 3/5

ஓஹோ எந்தன் பேபி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    ஓஹோ எந்தன் பேபி விமர்சனம் 3/5     விஷ்ணு விஷால் தயாரிப்பில்  தம்பி ருத்ரா ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கும் படம் தான் ஓஹோ எந்தன் பேபி. விஷ்ணு விஷாலும் நடிகராகவே நடிச்சி இருக்கார். வழக்கமான வயசுக்கு மீறுன காதல் கதை தான். ஆனா சொன்ன விதம் கொஞ்சம் புதுசு. அப்படி என்ன புதுசுன்னு யோசிக்கிறீங்களா... கதைப்படி ஹீரோவுக்கு படிப்பைவிட சினிமாமேல தான் லவ்... ஸ்கூல் படிக்கும் போதே பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தன்னைவிட வயதில் பெரிய பெண்ணைப்பார்த்து ஜொள் விடுகிறார். அந்த பெண்ணும் பார்த்த ஒரே நாளில் மொட்டைமாடிக்கு வரவழைத்து ஹீரோவுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்து ஹீரோவை பித்து பிடிக்க வைக்கிறார்... வீட்டில் தெரிந்ததும் ஹீரோவை வயதை காட்டி கழற்றி விடுகிறார்... முதல் காதல் பணாலாகிறது ஹீரோவுக்கு... கல்லூரி முடித்து நண்பன் திருமணத்திற்கு வந்த இன்னொரு பெண் மிதிலாவ...
ப்ரீடம் பட விமர்சனம் 3/5

ப்ரீடம் பட விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  ப்ரீடம் பட விமர்சனம் 3/5   உலக அரங்கையே உலுக்கிய ஒரு சம்பவம் 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதுதான்.  இந்த சம்பவத்திற்கு பின்னும் முன்னும் இலங்கையில் இருந்து சிங்கள அரச பயங்கரவாத்த்தால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்தவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் 43 பேர் வேலூர் கோட்டையில் விசாரணை கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் போலீஸ் கொடுமைகளில் இருந்து விடுதலையாக சுரங்கம் தோண்டி தப்பித்தனர் இவர்களில் 21 பேர் ஒரு சில வாரங்களில் மீண்டும் போலீசிடம் சிக்கினார்கள். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வலியும் வேதனையும் சோகத்தையும் உள்ளடக்கி உருவாகி இருக்கும் படம் தான் ச்சிக்குமாரின் ப்ரீடம்.   கதைப்படி இலங்கையில் இருந்து பலரும் அகதிகளாக இந்தியா வருகிறார்க...
பீனிக்ஸ் விமர்சனம் 3/5

பீனிக்ஸ் விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    பீனிக்ஸ் விமர்சனம் 3/5   அண்ணனை கொலை செய்த எம்எல்ஏ சம்பத்தை பட்டப்பகலில் படு பயங்கரமாக கொலை செய்கிறார் சூர்யா சேதுபதி. அதனால் அவரை பிடித்து சிறையில் அடைக்கிறார்கள். கொலையான எம் எல் ஏ சம்பத்தின் மனைவியான வரலட்சுமி சரத்குமார் தனது ஆட்களை சிறைக்கு அனுப்பி சூர்யா விஜய் சேதுபதியை தீர்த்துக்கட்டச் சொல்கிறார். சின்னப்பையன் தானே என நினைத்து சிறைக்குள் சூர்யாவை கொல்ல முயலும் அத்தனை பேரையும் அடித்து துவம்சம் செய்து தன்னை காத்துக் கொள்கிறார் சூர்யா. இதனால் ஷாக் ஆன வரலட்சுமி தரப்பு,  வட இந்தியாவில் இருந்து அடியாட்களை வரவழைத்து சூர்யாவின் கதையை முடிக்க முயற்சிக்கிறது. அதிலும் சூர்யா தப்பிக்கிறார். இப்படி வருகிற ரவுடிகளை எல்லாம் பந்தாடுகிற இந்த சூர்யா யார்? அவருக்கும் எம் எல் ஏ சம்பத்துக்கும் அப்படி என்ன தீராத பகை என்பதை அதிரடி ஆக்சன் மூலமாக விறுவிறுப்பா...
பறந்து போ கோடங்கி விமர்சனம் 4/5

பறந்து போ கோடங்கி விமர்சனம் 4/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    பறந்து போ விமர்சனம் 4/5   கற்றது தமிழ் இயக்குனர் ராம் படம் என்றாலே ஒரு சோகமும் உளவியல் ரீதியில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தி ரசிகனை அழவைத்தே அனுப்பி வந்தார் இவ்ளோ நாளா…. ஆனா இந்த பறந்து போ… சத்தியமா இயக்குனர் ராம் இப்படி ஒரு படத்தை தருவார்னு நினைக்கவே இல்லை… அவ்ளோ நேர்த்தியா சின்ன சின்ன விஷயங்களில் கூட ஒளிந்திருக்கும் அவ்ளோ பெரிய விஷயங்கள்… ஆரம்பமே ரொம்ப ஓவரா இருக்கா… ஒரு முறை இந்த படத்த போய் பாருங்க இதவிட பேசுவீங்க… கதை ரொம்ப சின்னது காலம் காலமா இருக்குறதுதான்… அப்பா அம்மாகிட்ட சண்டை போட்டுகிட்டு மகன் மலை ஏறுவதும் அவனைதேடி அப்பாவும் அம்மாவும் மலையேறி சமாதானம் பேசுறதும் புராண காலத்துலயே இருக்கே அப்படி ஒரு பையனுக்கும் அவனோட அப்பா அம்மாவுக்கும் இடையில நடக்குற அழகான உணர்வு கடத்தல்தான் பறந்து போ. வீட்டை எதிர்த்து காதல் கல்யாணம் செய்து கொண்ட சிவ...
கல் என கடவுளை விமர்சிக்கிறதா “கண்ணப்பா” விமர்சனம் 3/5

கல் என கடவுளை விமர்சிக்கிறதா “கண்ணப்பா” விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    கண்ணப்பா விமர்சனம் 3/5 மிக பிரமாண்ட சினிமாவாக வந்திருக்கும் ஒரு புராண கதைதான் கண்ணப்பா. சிவன் கண்ணில் ரத்தம் வழிவதை பார்த்து ஷாக் ஆன ஒரு பக்தன் தன் கண்களை பிடுங்கி சிவனுக்கு பொறுத்தியதாக ஒரு புராண கதை உண்டு. இதுதான் இந்த கண்ணப்பா கதையின் மைய கரு. படம் தொடங்கி முதல்பாதி முடிகிறவரை மையகருவை தேட வேண்டிய நிலை... கதையை தாண்டி திரைக்கதை எங்கோ பயணிக்கிறது. ஆத்தீகர்களுக்கான படமோ என எண்ணும் அளவுக்கு கடவுளை கல் என்றும், பலி கேட்பதெல்லாம் கடவுளா? என வசனங்கள் வருவதெல்லாம் ஷாக் தான்... அதோடு ஹீரோயினோடு ஹீரோ விஷ்ணு மஞ்சுவின் காதல் ரொமான்ஸ் எல்லாம் கண்ணப்பா கடவுள் படமா... கண்ண மூடுப்பா இது காதல் படம்பா என சொல்லும் அளவுக்கு ரொமான்ஸ் தூக்கல் ரகம். கண்டிப்பாக குழந்தைகளுக்கு இந்த ரொமான்ஸ் காட்சிகளில் கண்ணை மூட வைப்பார்கள் பெற்றவர்கள் என்பது மட்டும் நிஜம்... மோக...
லவ் மேரேஜ் விமர்சனம் 3/5

லவ் மேரேஜ் விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  லவ் மேரேஜ் 3/5 லவ் மேரேஜ் படத்தின் பெயரை பார்த்ததுமே ஜாலியான ரொமான்சான ஒரு படமாக இருக்கும் என நீங்கள் யோசித்தால் பாதி சரி மீதி... சரி கதைக்கு வருவோம்... 30 வயசை தாண்டிய விக்ரம் பிரபு பல இடத்தில் பெண் தேடியும் கிடைக்கவில்லை... யாரோ சொல்லி வேறு ஊரில் இருக்கும் சுஷ்மிதாவை பெண் பார்க்க ஒரு மினி வேனில் விக்ரம் பிரபு குடும்பமாக வருகிறார். பெண்ணைப் பார்த்ததும் பிடித்து விடுகிறது... உடனே நிச்சயதார்த்தம் நடத்துகிறார்கள். ஆடுகிறர்கள் பாடுகிறார்கள். எல்லாம் முடிந்து ஊர் திரும்ப வேனில் ஏறினால் வண்டி ரிப்பேர் ஆகிறது. சரி செய்ய முயற்சி செய்யும் போது திடீரென வைரஸ் நோய் பரவி வருவதால் அரசு ஊரடங்கு உத்தரவு போடுகிறது. இதனால் வேறு வழியின்றி பெண் வீட்டிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்ப்படுகிறது. இந்த சூழலில் திடீரென கல்யாண பெண் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்... இதன் பிறகு என்ன நடந்தத...