சனிக்கிழமை, ஜூலை 25
Shadow

REVIEWS

எம்புரான் எல்2 விமர்சனம் 3/5

எம்புரான் எல்2 விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
        எம்புரான் எல்2 விமர்சனம் 3/5   ஐயுஎஃப் எனும் கட்சியை வழி நடத்தி வந்த முதலமைச்சர் ராம்தாஸ் திடீர் மறைவுக்குப் பிறகு கேரள அரசியல் களத்தில் நிகழும் குழப்பங்களைத் தீர்க்க, வெளிநாட்டில் இருக்கும் அவரது மகன் ஜதினை(டொவினோ தாமஸ்) அழைத்து வருகிறார் நெடும்பள்ளி எம்.எல்.ஏவான ஸ்டீபன். ராமதாஸின் மறைவை பயன்படுத்தி ஆட்சியிலும்,  குடும்பத்திலும் அவரது கட்சியிலும் குழப்பங்களை ஏற்படுத்தியவர்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வருகிறார் ஸ்டீபன்.  அவருக்கு ‘குரேஷி அஃப்ராம்’ எனும் இன்னொரு பெயர் இருப்பதும், உலக நாடுகள் பல அஞ்சி நடுங்குகிற கேங்ஸ்டராக அவர் திகழ்வதும் தெரிய வருவதோடு முதல் பாகமான ‘லூசிஃபர்’ முடிவடைந்திருந்தது. ஆனால். இந்த முன்கதைச் சுருக்கம் ஏதும் சொல்லத்தேவை இல்லாமலேயே ‘எம்புரான்’ கதை தொடங்குகிறது. திரைக்கதை தொடக்கமே..  மதக்கலவரத்தால் பாதிக்கப்ப...
அதிரடி சம்பவம் செய்கிறாரா விகரம்? வீர தீர சூரன் கோடங்கி விமர்சனம் 4/5

அதிரடி சம்பவம் செய்கிறாரா விகரம்? வீர தீர சூரன் கோடங்கி விமர்சனம் 4/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  அதிரடி சம்பவம் செய்கிறாரா விகரம்? வீர தீர சூரன் கோடங்கி விமர்சனம் 4/5   பெரும்பாலும் மலையாள படங்களில் சாதாரண சின்ன விஷயத்தை வைத்து அத்தனை யதார்த்தமாய் திரைக்கதையை நகர்த்தி படம் பார்க்கிற நம்மை படத்தோடு பயணிக்க வைத்துவிடுவார்கள்…. அப்படி ஒரு அனுபவத்தை சரியான நடிகர்களை வைத்து இயக்குனர் அருண்குமார் வீரதீர சூரன் படமாக கொடுத்திருக்கிறார். சீயான்’ விக்ரம் நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இந்த படம் பல கட்ட போராட்டங்களை சந்தித்து நீதிமன்ற தடைகளை தாண்டி நேற்று மாலை 6 மணிக்கு மேல் தான் உலகம் முழுக்க ரிலீஸ் ஆனது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். உடன் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு, (பிருத்விராஜ்  உள்ளிட்டார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிராமத்து பின்னணியில் ஒரு அதிரடி ஆக்சன்...
பெண்களை ஷாக் ஆக்கும் “ராபர்” கோடங்கி விமர்சனம் 3/5

பெண்களை ஷாக் ஆக்கும் “ராபர்” கோடங்கி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
    பெண்களை ஷாக் ஆக்கும் “ராபர்” கோடங்கி விமர்சனம் 3/5 கிராமத்தில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வரும் இளைஞன் ஒருவன், பண ஆசைக்காகத் தடம் மாறுவதையும், அந்தப் பண போதை அவனை எப்படி கொடூரமானவனாக அடுத்தடுத்த கட்டங்களுக்குக் கொண்டு செல்கிறது என்பதையும் நகை பரிமாற்றத் தொடர்புகள் மற்றும் அவர்களின் ஏமாற்றுத் தனங்களையும் சொல்லும் திகிலான கதைதான் ‘ராபர்’. ஒவ்வொரு நாளும் பேப்பரிலும், டிவியிலும்  வரும் நகைப் பறிப்பு செய்திகளை கேட்டாலும் , அதில் அப்பாவி பெண்கள் பலியானது தெரிந்தாலும் அது 'யாருக்கோ' என்று எளிதில் கடந்து செல்கிறோம்.  ஆனால் நகைப்பறிப்புக்குப் பின் உள்ள 'திருட்டு' நெட்வொர்க், அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள், அந்த நகைகளை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்கிற விவரத்தை  பரபரப்பாக  திகில் மூடில் தர முயற்சித்து இருக்கிறார்  அறிமுக இயக்குநர் எஸ்.எம்.பாண்டி. சிறைக்குப் புத...
நிறம் மாறும் உலகில் விமர்சனம் 2.5/5

நிறம் மாறும் உலகில் விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  நிறம் மாறும் உலகில் விமர்சனம் 2.5/5 அம்மா… இந்த ஒற்றை சொல்லின் தீவிரத்தை சொல்ல முயற்சிக்கும் பல கதைகளை தமிழில் பார்த்து இருக்கிறோம்… அந்த வரிசையில் வந்திருக்கும் படம் நிறம் மாறும் உலகில். அம்மாவுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் லவ்லின் சந்திரசேகர் ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட் பரிசோதகர் யோகி பாபுவை சந்திக்கிறார். லவ்லினின் நிலையை புரிந்துக்கொள்ளும் யோகி பாபு, அம்மா என்பவர் எவ்வளவு முக்கியம் என்பதை அவருக்கு உணர்த்தும் வகையில் நான்கு கதைகள் சொல்கிறார். அந்த நான்கு கதைகளுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை ’அம்மா’ என்ற உறவு மட்டுமே. அம்மா பாசத்திற்காக ஏங்கும் தாதா, பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கினாலும் கடைசி காலத்தில் பசியோடு இறக்கும் அம்மா, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அம்மாவை காப்பாற்ற முடியாமல் போகும் மகனின் சோகம், அம்மா என்ற உறவுக்காக எதை வேண்டுமானால...
ஜிவி பிரகாஷுக்கு கிங்ஸ்டன் கை கொடுக்குமா?! கோடங்கி விமர்சனம் 2.5/5

ஜிவி பிரகாஷுக்கு கிங்ஸ்டன் கை கொடுக்குமா?! கோடங்கி விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  பத்திரிகையாளர் யோகி தேவராஜ் பின்னணி குரலுடன் படம் தொடங்கும் போதே ஒருவித அச்சம் ஏற்படுகிறது…டைட்டில் கார்டு போட்டு முடிவதற்குள் படம் பார்ப்பவர்களை உண்மையிலேயே மிரட்டுகிறது. கதைப்படி, தூத்துக்குடி மாவட்டம் தூவத்தூர் மீனவ கிராம மக்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதில்லை. அதைச் சபிக்கப்பட்ட கடல் பகுதி என்று நம்பும் அவர்கள், மீறிச் சென்றால் சடலமாகக் கரை ஒதுங்குகிறார்கள். இதனால் அங்கு மீன் பிடிக்க அரசு தடை விதிக்கிறது. 1982-ல் இறந்து போன போஸ் (அழகம் பெருமாள்) என்பவரின் ஆத்மாதான் இதைச் செய்கிறது என மக்கள் நம்புகின்றனர். அதே நேரத்தில் அந்தக் கிராமத்துக் கன்னிப் பெண்களும் அவ்வப்போது மாயமாகி பிணமாகின்றனர். அதற்கு என்ன காரணம்? பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டவராக இருக்கும் கிங்ஸ்டன், எப்படியாது பணத்தை சேர்த்து, தனக்கென்று ஒரு போட் வாங்கி, அதில் கடலுக்கு செல்ல வேண்டுமென நினைத்து...
எமகாதகி சினிமா விமர்சனம் 3.5/5

எமகாதகி சினிமா விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகைகள், விமர்சனம்
    பெரும்பாலும் கிராமத்து கதைகள் குடும்ப உறவுகளை மட்டுமே பேசும். ஆனால் “ரூபாவின் ரகசியம்” இந்த பாரம்பரியத்தைக் கடந்து ஒரு சுவாரஸ்யமான கிரைம் திரில்லரை உருவாக்குகிறது. இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் ஒரு சாதாரண குடும்பக் கதையை ஒரு திகில் நிறைந்த அனுபவமாக மாற்றியிருக்கிறார். தஞ்சாவூரில் உள்ள ஒரு கிராமத்தில் ஊர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஊர் தலைவர் செல்வராஜ் (ராஜு ராஜப்பன்) அவரது மனைவி சந்திரா (கீதா கைலாசம்) மகன் முத்து (சுபாஷ் ராமசாமி) மகள் லீலா (ரூபா கொடுவாயூர்) மருமகள் ஹரிதா (பிரேமா) கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள். லீலா சுவாசப் பிரச்சினையால் அவதிப்பட்டு, அவ்வப்போது இன்ஹேலர் பயன்படுத்துவார். மறுபுறம், ஊர் கோவில் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெறும் போது, முத்து அவனது இரண்டு நண்பர்கள் உதவியுடன் முன்பு கோவிலில் உள்ள கீரிடத்தை திருடி அதை அடமானம் வைத்து வி...
சப்தம் கோடங்கி விமர்சனம் 2.5/5

சப்தம் கோடங்கி விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  சப்தம் கோடங்கி விமர்சனம் 2.5/5     இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி, லஷ்மி மேனன்,சிம்ரன், லைலா, எம் எஸ் பாஸ்கர், ராஜிவ் மேனன், விவேக் பிரசன்னா ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் ”சப்தம்”. மூணார் பகுதியில் படத்தின் கதை நகர்கிறது. ஒரு பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் இருக்கும் நூலகத்தில் அடுத்தடுத்து சில மாணவர்கள்  தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த தற்கொலைகள் எதனால் நடைபெறுகிறது என்பதை விசாரிக்க பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிபுணரான ஆதி அங்கு வருகிறார். இறந்து போன மாணவர்களின் உடலை பார்க்கும்போது கை, கால், முகம் அனைத்தும் கோணல்மாணலாகவும் உடலில் சைத்தானின் குறியீடு போன்ற ஒன்று இருப்பதையும் பார்க்கிறார் ஆதி. அதோடு அந்த நூலகம் பல வருடங்களுக்கு முன்பு தேவாலயமாக இருந்ததையும் கண்டுபிடி...
டிராகன் கோடங்கி விமர்சனம் 3.5/5

டிராகன் கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  டிராகன் கோடங்கி விமர்சனம் 3.5/5   நடிகர்கள்: பிரதீப் ரங்கநாதன்,அனுபமா பரமேஸ்வரன்,மிஷ்கின்,கவுதம் மேனன், ரவீந்தர், ஜார்ஜ் இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து   பள்ளியில் 96 சதவீத மார்க் எடுக்கிற நல்ல பையனாக வரும் பிரதீப் ரங்கநாதன் கூட படிக்கிற ஒரு பெண்ணிடம் காதலை சொல்கிறார். படிக்கிற பையனைவிட கெத்தாக சுத்தும் பையனைத்தான் பிடிக்கும் என அந்த காதலை அந்த பெண் நிராகரிக்க… கல்லூரியில் சேர்ந்த்தும் படிப்பை விட்டுவிட்டு பேரையும் டிராகன் என மாற்றிக் கொண்டு கெத்தாக சுத்தும் பிரதீப். அவரை கூட படிக்கும் அனுபமா பரமேஸ்வரன் அநியாயத்துக்கு காதலிக்கிறார். அந்த கல்லூரியின் பிரின்ஸ்பாலாக மிஷ்கின். படிக்காமல் 48 அரியர் வைத்து கல்லூரியில் இருந்து வெளியேறி நண்பர்கள் உதவியுடன் அப்பா அம்மாவிடம் கல்லூரியை முடித்து வேலையில் இருப்பதாக பொய் சொல்லி கெத்து காட்டி வரும் பிரதீப்பை ஒரு கட்ட்த்தில் காதலி அனுபமா கழற...
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் கோடங்கி விமர்சனம் 3.5/5

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
        நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் கோடங்கி விமர்சனம் 3.5/5   நடிகர்கள்: பவிஷ்,அனிகா,ப்ரியா பிரகாஷ் வாரியர்,சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் இயக்கம்: தனுஷ் இசை : ஜிவி பிரகாஷ் தனுஷ் இயக்கி தயாரித்திருக்கும் படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். தனுஷ் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக ஒரு காதல் கதையில்  அறிமுகப்படுத்தி இருக்கிறார். படம் தொடங்கும் போதே இது ஒரு யூஷுவல் காதல் கதை என்றே தொடங்குகிறது. கல்யாணம் வேண்டாம் என இருக்கும் ஹீரோ தன் அம்மா அப்பா கட்டாயத்தால் பெண் பார்க்க போகிறார். பெண்ணை பார்த்த்தும் ஷாக் ஆகிறார். அந்த பெண் ஹீரோவுடன் ஒன்றாக படித்த பெண் என்பது தெரிய வருகிறது. இருவரும் பழகிய பின் கல்யாணம் என முடிவெடுக்கையில் பிரேக் அப் செய்த காதலியின் கல்யாண அழைப்பு வருகிறது. அந்த காதல் பிரேக் அப் ஆன கதையை தோழியிடம் சொல்கிறார் ஹீ...
தண்டேல் விமர்சனம் 3/5

தண்டேல் விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    தண்டேல் விமர்சனம் 3/5 ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஸ்ரீகாகுளம் மீனவ சமூகத்தை சேர்ந்தவர் ராஜு (நாக சைதன்யா) அதே சமூகத்தை சேர்ந்தவர் சத்யா(சாய் பல்லவி). மீனவரான ராஜுவும், சத்யாவும் காதலிக்கிறார்கள். இந்நிலையில் கிராமத்து மீனவர்களுடன் சேர்ந்து 9 மாத காலம் மீன் பிடிக்க கிளம்பும்  ராஜூவை சத்யா தடுத்தும் கேட்காமல்  மீன் பிடிக்க சென்றபோது தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிடுகிறார்கள். இதையடுத்து பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ராஜு உட்பட சிக்கிய மீனவர்கள் நாடு திரும்பினார்களா? அவர்களுக்கு என்ன ஆனது என்பதே கதை. முதல் பாதியில் மீன சமூக வாழ்வியல். ராஜு, சத்யாவின் காதல். என நகர்கிறது.  இரண்டாம் பாதியில் பாகிஸ்தானில் சிக்கியவர்களுக்கு நடக்கும் பிரச்சனை என்ன ஆகுமோ என டென்ஷனாக வைத்திருக்கிறார் இயக்குநர் சந்து மொன்டட்டி. திரைக...