’லோகா – அத்தியாயம் 1 : சந்திரா’ கோடங்கி விமர்சனம் 4/5
’லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’ விமர்சனம் 4/5
தென்னிந்திய சினிமாவில் சூப்பர் மேன் ஜானர் திரைப்படங்கள் என்பது மிக மிக அரிதானது. அதோடு இதுபோன்ற சூப்பர் ஹீரோ படங்களை ஹாலிவுட்டில் மட்டுமே பார்த்து ரசித்த நமக்கு இயக்குநர் டொமினிக் அருண் மிக அருமையாக கொடுத்த படம்தான் . ’லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’
கதைப்படி…
அதீத சக்திகள் கொண்ட நாயகி கல்யாணி பிரியதர்ஷன் பெங்களூர் நகரத்திற்கு வருகிறார். பேக்கரி ஒன்றில் பணியாற்றும் அவர் தங்கியிருக்கும அடிக்குமாடி குடியிருப்புக்கு எதிரே இருக்கும் வீட்டில் வசிக்கும் நஸ்லன், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகியோருக்கு கல்யாணி மீது ஈர்ப்பு வருகிறது.
அதே சமயம், அதே பகுதியில் மனிதர்களை கடத்தி அவர்களது உடல் உறுப்புகளை திருடும் கும்பலால் பரபரப்பு ஏற்படுகிறது. அந்த கும்பலுடன் தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டரான சாண்டியு...









