ஓஹோ எந்தன் பேபி விமர்சனம் 3/5
ஓஹோ எந்தன் பேபி விமர்சனம் 3/5
விஷ்ணு விஷால் தயாரிப்பில் தம்பி ருத்ரா ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கும் படம் தான் ஓஹோ எந்தன் பேபி. விஷ்ணு விஷாலும் நடிகராகவே நடிச்சி இருக்கார். வழக்கமான வயசுக்கு மீறுன காதல் கதை தான். ஆனா சொன்ன விதம் கொஞ்சம் புதுசு.
அப்படி என்ன புதுசுன்னு யோசிக்கிறீங்களா...
கதைப்படி ஹீரோவுக்கு படிப்பைவிட சினிமாமேல தான் லவ்... ஸ்கூல் படிக்கும் போதே பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தன்னைவிட வயதில் பெரிய பெண்ணைப்பார்த்து ஜொள் விடுகிறார். அந்த பெண்ணும் பார்த்த ஒரே நாளில் மொட்டைமாடிக்கு வரவழைத்து ஹீரோவுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்து ஹீரோவை பித்து பிடிக்க வைக்கிறார்... வீட்டில் தெரிந்ததும் ஹீரோவை வயதை காட்டி கழற்றி விடுகிறார்... முதல் காதல் பணாலாகிறது ஹீரோவுக்கு...
கல்லூரி முடித்து நண்பன் திருமணத்திற்கு வந்த இன்னொரு பெண் மிதிலாவ...









