ஜிவி பிரகாஷுக்கு கிங்ஸ்டன் கை கொடுக்குமா?! கோடங்கி விமர்சனம் 2.5/5
பத்திரிகையாளர் யோகி தேவராஜ் பின்னணி குரலுடன் படம் தொடங்கும் போதே ஒருவித அச்சம் ஏற்படுகிறது…டைட்டில் கார்டு போட்டு முடிவதற்குள் படம் பார்ப்பவர்களை உண்மையிலேயே மிரட்டுகிறது.
கதைப்படி, தூத்துக்குடி மாவட்டம் தூவத்தூர் மீனவ கிராம மக்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதில்லை. அதைச் சபிக்கப்பட்ட கடல் பகுதி என்று நம்பும் அவர்கள், மீறிச் சென்றால் சடலமாகக் கரை ஒதுங்குகிறார்கள். இதனால் அங்கு மீன் பிடிக்க அரசு தடை விதிக்கிறது. 1982-ல் இறந்து போன போஸ் (அழகம் பெருமாள்) என்பவரின் ஆத்மாதான் இதைச் செய்கிறது என மக்கள் நம்புகின்றனர்.
அதே நேரத்தில் அந்தக் கிராமத்துக் கன்னிப் பெண்களும் அவ்வப்போது மாயமாகி பிணமாகின்றனர். அதற்கு என்ன காரணம்? பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டவராக இருக்கும் கிங்ஸ்டன், எப்படியாது பணத்தை சேர்த்து, தனக்கென்று ஒரு போட் வாங்கி, அதில் கடலுக்கு செல்ல வேண்டுமென நினைத்து...









