காதல் போனால் இன்னொரு காதல்… “ஜோ” – திரைப்பட விமர்சனம் 3/5
காதல் போயின் சாதல் என்றார் பாரதி, ஜோ படத்தின் இயக்குநர் ஹரிஹரன்ராம் காதல் போயின் இன்னொரு காதல் என சொல்லியிருக்கிறார். கேட்கும்போது எளிதாகத் தெரியும் ஆனால் படமாக பார்க்கும்போது நியாயமாகத் தெரியும் படி படமாக்கியிருக்கிறார்.
நாயகன் ரியோராஜ் கல்லூரியில் சக மாணவி மாளவிகா மனோஜை காதலிக்கிறார். வழக்கப்படி அந்தக் காதலுக்கு எதிர்ப்பு. கை கூடாத காதல் தோல்வி... சோகம். அதனால் சீரழியும் ரியோராஜைப் பாதுகாக்க அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். மனைவியாகும் பவ்யா ட்ரிக்காவால் ரியோராஜ்க்கு மேலும் சிக்கல் , அதன்பின் மனைவியின் சிக்கலை உணர்ந்து அதைத் தீர்க்க முயல்கிறார். அது என்ன சிக்கல்? அதை எப்படி எதிர்கொண்டார்? என்பதுதான் படம்.
துடிப்பான கல்லூரி மாணவர்,காதல் தோல்வி தாடியுடன் சோகமாகத் திரியும் பாவப்பட்ட இளைஞர், சிக்கல்களை எதிர்கொள்ளும் திறனாளி ஆகிய மாறுபட்ட உணர்வுகளைத் தோற்றத்தில் ம...









