திங்கட்கிழமை, ஜூலை 27
Shadow

REVIEWS

“அவள் பெயர் ரஜினி” விமர்சனம் 2.5/5

“அவள் பெயர் ரஜினி” விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  ஒரு மர்மமான கொலை; அது மனிதரால் நிகழ்த்தப்பட்டக் கொலையா..? இல்லை அமானுஷ்ய சக்தியால் நடந்தக் கொலையா…? என்பதில் இருக்கும் குழப்பம்… இவைகளுக்கு விடை தேடிச் செல்லும் நாயகனின் பயணமே  “அவள் பெயர் ரஜினி” திரைப்படத்தின் கதை. நாயகனாக நடித்திருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். அவருடைய சகோதரியாக நமீதாப்ரமோத் நடித்திருக்கிறார். சகோதரி வாழ்வில் அதிர்ச்சிகரமான நிகழ்வு நடக்கிறது.அதுகுறித்து காவல்துறை விசாரிக்கிறது. ஆனால் எல்லா இடங்களிலும் காவல்துறையை முந்திச்சென்று துப்பறியும் வேடம் காளிதாஸ் ஜெயராமுக்கு. அதைச் சிரத்தையாகச் செய்திருக்கிறார். பாசப்பிணைப்பும் உண்மையை அறியும் தவிப்பும் சிறப்பு. நமீதாப்ரமோத், பாதிக்கப்படுகிற பெண்ணாக நடித்திருக்கிறார். அவருடைய கண்களிலேயே பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். காவல்துறை விசாரிக்கும் காட்சிகளில் அவருடைய நடிப்பு அவ்வளவு எதார்த்தம். படத்தின் பெயரிலிருக்க...
கட்டில் – திரைப்பட விமர்சனம் 2.5/5

கட்டில் – திரைப்பட விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  கட்டில் படத்தின் தலைப்பில் இருக்கும் கட்டிலைப் பாதுகாக்க கதாநாயகன் போராடுகிறார் என்பது ஒருவரிக்கதை. பூர்வீகவீட்டை விற்க நினைக்கிறார்கள் வெளிநாட்டில் தங்கிவிட்ட கதாநாயகனின் சகோதரனும் சகோதரியும். கதாநாயகனுக்கும் அவருடைய அம்மாவுக்கும் அதில் உடன்பாடில்லை எனினும் வேறுவழியின்றி சம்மதிக்கிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் பழங்காலக் கட்டிலைக் கொடுக்க நாயகனுக்கு மனமில்லை.அதைக் காப்பாற்றுவதிலும் பெரிய கனமான கட்டில் என்பதால் அதை இடம்மாற்றுவதிலும் சிக்கல்கள். இவற்றின் விளைவுகள்தாம் படம். நாயகன் கணேஷ்பாபு ரசித்து நடித்திருக்கிறார். அவர் சிரிக்கும் காட்சிகளைவிட சோகக்காட்சிகள் அதிகம். சிருஷ்டிடாங்கேவுக்கும் கனமான கதாபாத்திரம். அதை உணர்ந்து நன்றாக நடித்து தனக்கும் படத்துக்கும் பலமாக இருக்கிறார். மூத்தோர்களின் பிரதிநிதியாக இருக்கிறார் கீதாகைலாசம். அவருடைய பாத்திரப்படைப்பு சிந்திக்க வைக...
அன்னபூரணி – திரைப்பட விமர்சனம் 3/5

அன்னபூரணி – திரைப்பட விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
அன்னபூரணி – திரைப்பட விமர்சனம் 3/5 ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்த நயன்தாராவுக்கு பெரிய சமையல்கலைஞராக வேண்டும் என்பதுதான் ஆசை.பெண்கள் சமையல்கட்டை விட்டு வெளியே வரப் போராடும் கதைகள் பார்த்திருக்கிறோம்.இங்கோ சமையல் கலைஞராவதற்கே போராடவேண்டியிருக்கிறது. அது ஏன்? என்பதற்கான விடையாக வந்திருக்கிறது அன்னப்பூரணி படம். அன்பான அமைதியான நயன்தாரா. அசைவ உணவுகளை விரும்பி உண்கிறார்.அசைவம் சாப்பிடவே எதிர்ப்பு சமைப்பதென்றால்?கடும் எதிர்ப்பு,அதை மீறி சமையல் கலை படித்து சமைக்கப்போனால் அங்கும் சிக்கல்கள். அவற்றை எதிர்கொள்கிறார். நயன்தாராவின் நலன்விரும்பும் தோழன் கதாபாத்திரம் நாயகன் ஜெய்க்கு. அதையும் கம்பீரமாகச் செய்திருக்கிறார். பிரபல சமையல்கலை நிபுணராக நடித்திருக்கிறார் சத்யராஜ். சமையலின் மகத்துவத்தைப் பேசுவதற்காக இருக்கிறார் கே.எஸ்.இரவிக்குமார், நயன்தாராவின் தந்தையாக நடித்திருக்கும் அச்யு...
பார்க்கிங் விமர்சனம் மதிப்பீடு 3/5

பார்க்கிங் விமர்சனம் மதிப்பீடு 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  பார்க்கிங் விமர்சனம் மதிப்பீடு 3/5 சென்னையில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வரும் ஹரிஷ் கல்யாண் தனது மனைவி இந்துஜாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஹிந்துஜா கர்ப்பமாக இருக்க புதிதாக ஒரு வீட்டிற்கு குடி பெயர்கின்றனர். அந்த வீட்டின் அடித்தளத்தில் அரசு ஊழியரான எம்எஸ் பாஸ்கர் தனது மனைவி மற்றும் மகளுடன் 10 வருடங்களாக அதே வீட்டில் வசித்து வருகிறார். கர்ப்பமாக உள்ள தனது மனைவியை வெளியில் அழைத்துச் செல்ல சிரமமாக இருப்பதால் ஒரு புது காரை வாங்குகிறார் ஹரிஷ் கல்யாண். அதனை வீட்டில் நிறுத்தும் போது அவருக்கும் எம்எஸ் பாஸ்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு சிறிய பார்க்கிங் பிரச்சனை பின்னாலில் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை சுவாரசியமாக சொல்லி இருக்கும் படம் தான் பார்க்கிங். இந்தப் படத்தை தாங்கி பிடிப்பது படத்தில் நடித்துள்ள நடிகர்கள் தான். ஜாலி பாய் ப...
காதல் போனால் இன்னொரு காதல்… “ஜோ” – திரைப்பட விமர்சனம்  3/5

காதல் போனால் இன்னொரு காதல்… “ஜோ” – திரைப்பட விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  காதல் போயின் சாதல் என்றார் பாரதி, ஜோ படத்தின் இயக்குநர் ஹரிஹரன்ராம் காதல் போயின் இன்னொரு காதல் என சொல்லியிருக்கிறார். கேட்கும்போது எளிதாகத் தெரியும் ஆனால் படமாக பார்க்கும்போது நியாயமாகத் தெரியும் படி படமாக்கியிருக்கிறார். நாயகன் ரியோராஜ் கல்லூரியில் சக மாணவி மாளவிகா மனோஜை காதலிக்கிறார். வழக்கப்படி அந்தக் காதலுக்கு எதிர்ப்பு. கை கூடாத காதல் தோல்வி... சோகம். அதனால் சீரழியும் ரியோராஜைப் பாதுகாக்க அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். மனைவியாகும் பவ்யா ட்ரிக்காவால் ரியோராஜ்க்கு மேலும் சிக்கல் , அதன்பின் மனைவியின் சிக்கலை உணர்ந்து அதைத் தீர்க்க முயல்கிறார். அது என்ன சிக்கல்? அதை எப்படி எதிர்கொண்டார்? என்பதுதான் படம். துடிப்பான கல்லூரி மாணவர்,காதல் தோல்வி தாடியுடன் சோகமாகத் திரியும் பாவப்பட்ட இளைஞர், சிக்கல்களை எதிர்கொள்ளும் திறனாளி ஆகிய மாறுபட்ட உணர்வுகளைத் தோற்றத்தில் ம...
“சில நொடிகளில்” – திரைப்பட விமர்சனம் மதிப்பீடு 3/5

“சில நொடிகளில்” – திரைப்பட விமர்சனம் மதிப்பீடு 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    லண்டனில் வசிக்கும் மருத்துவர் ரிச்சர்ட்ரிஷி. அன்பான மனைவி புன்னகைப்பூ கீதா. கிளி போல் மனைவி இருந்தாலும் குரங்கு போல் துணைவி தேடும் ஆண்கள் வரிசையில் சேரும் ரிச்சர்ட்ரிஷி, மேலும் அழகான கிளியாக இருக்கும் யாஷிகா ஆனந்த்திடம் அடைக்கலம் ஆகிறார். திடீரென யாஷிகாஆனந்த் மரணிக்கிறார். அதனால் பதட்டமடைந்து அந்த மரணத்தை மறைக்கிறார் ரிச்சர்ட்ரிஷி. ஆனால் அவர் நினைப்புக்கு மாறாக நடக்கிறது. அதனால் பல சிக்கல்கள். அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதுதான் படம். லண்டனில் இருக்கும் மருத்துவர் என்பதற்கேற்ப அழகாக இருக்கிறார் ரிச்சர்ட்ரிஷி.அவர் மகிழ்ச்சியாக இருக்கும் காட்சிகளை விடப் பதட்டத்துடனும் பயத்துடனும் இருக்கும் காட்சிகள் அதிகம். அவருடைய உணர்வுகளைப் பார்ப்போருக்கும் ஏற்பட வைத்திருக்கிறார். மனைவியாக நடித்திருக்கும் புன்னகைப்பூ கீதாவின் பாத்திர வடிவமைப்பு பலமானது. கல்லானாலும...
ரெய்டு – திரைப்பட விமர்சனம்

ரெய்டு – திரைப்பட விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
ரெய்டு – திரைப்பட விமர்சனம் நேரமையான காவலதிகாரி, அவருடைய செயல்பாடுகளால் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள், காவலதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் புகுந்து அதைச் சீர்குலைக்கிறார்கள். அதனால் வெகுண்டெழும் அந்த அதிகாரி என்னவெல்லாம் செய்கிறார்? என்பதுதான் ரெய்டு படம். அதிரடிச் சண்டைகள் ஆக்ரோச மோதல்கள் என முழுமையான ஆக்சன் படத்துக்குரிய கதைக்களம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார் நாயகன் விக்ரம்பிரபு. காவலதிகாரிக்குரிய மிடுக்கு அவருக்கு இயல்பாகவே இருக்கிறது.மன உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு ஆவேசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யாவுக்கு அதிக வேலையில்லை என்றாலும், வருகிற காட்சிகளில் நிறைந்து நிற்கிறார். புன்னகையால் கவரும் அவருடைய கதாபாத்திரத்தின் முடிவு கஷ்டம். இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் அனந்திகாவும் கவனிக்க வைத்திருக்கிறார். இயக்குநர் வேலுபிரபாகரன், ரிஷிரி...
“ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்” டேஸ்ட்டா? வேஸ்ட்டா?  கோடங்கி பார்வை – 3/5  Jigarthanda Double X Review

“ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்” டேஸ்ட்டா? வேஸ்ட்டா? கோடங்கி பார்வை – 3/5 Jigarthanda Double X Review

HOME SLIDER, kodanki voice, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம், வீடியோ
  "ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்" டேஸ்ட்டா? வேஸ்ட்டா? கோடங்கி பார்வை - 3/5 Jigarthanda Double X Review   https://youtu.be/SXaTM993fHo
“ஜப்பான்” ஜாலியா? காலியா? கோடங்கி பார்வை – 3/5

“ஜப்பான்” ஜாலியா? காலியா? கோடங்கி பார்வை – 3/5

HOME SLIDER, kodanki voice, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம், வீடியோ
"ஜப்பான்" ஜாலியா? காலியா? கோடங்கி பார்வை - 3/5     https://youtu.be/mA7-2pIc8j0?si=1HHktbo6L4pd81WJ
இறுகப்பற்று ரசிக்கும் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

இறுகப்பற்று ரசிக்கும் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    இறுகப்பற்று ரசிக்கும் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5 காலங்கள் மாறிவிட்ட இவ்வுலகில் காதல் எவ்வளவு எளிது என்ற நிலையை அடைந்து விட்டதோ, அதேபோல் பிரேக் அப், விவாகரத்து உள்ளிட்ட சம்பவங்களும் சர்வ சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. வார்த்தைப்போர் தொடங்கி உடல் ரீதியான தாக்குதல், தம்பதிகளுக்குள் சண்டையே வராமல் இருப்பது உள்ளிட்ட பல காரணங்களை சொல்லி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுபவர்களின் செய்தியை நாம் தினமும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். இவை அனைத்திற்கும் மிக அழகாக விடை சொல்லியிருக்கிறது “இறுகப்பற்று”..! விக்ரம் பிரபு - ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் - அபர்ணதி, ஸ்ரீ - சானியா ஐயப்பன் ஆகியோர் வெவ்வேறு வாழ்க்கை நிலையை வாழும் தம்பதியினர். திருமண பிரிவு பிரச்சினைகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் மருத்துவராக வரும் ஷ்ரத்தாவுடன் கணவர் விக்ரம் பிரபுவுக்கு சண்டையே வந்தது இல்லை. அதையே ஒ...