பாலியல் குற்றவாளிகளுக்கு இப்படியும் தண்டனை கொடுக்கலாம் என சர்ச்சையை கிளப்பும் மெய்ப்பட செய் – கோடங்கி விமர்சனம் 3/5
கடந்த 8 ஆண்டுகளை விட 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக அதிகரிப்பது இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் குற்றம் சாட்டி இருந்தது. அதோடு இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக நிலவுகிறது. மேற்கண்ட இரண்டு விஷயங்களையும் இணைத்து தனது இயக்கத்தில் மெய்ப்பட செய் என்ற பெயரில் ஒரு சினிமாவை வழங்கி இருக்கிறார் வேலன்.
கதைப்படி…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள கிராமத்தில், 4 நண்பர்கள் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கின்றனர், அந்த குழுவில் ஒருவரான கதையின் நாயகன், பக்கத்துக்கு ஊரில் உள்ள பெரிய மனிதரின் மகளை காதலித்து திருமணம் செய்கிறார், பிறகு கதாநாயகியின் அப்பா அவர்களை பிரிக்க நினைக்கிறார் ஆனால் அது முடியவில்லை, கதாநாயகனின் அப்பாவோ தன் மகனால் ஊரில் உள்ள அனைவருக்கும் பிரச்சனை என்பதனால் இவர்களை வீட்டைவிட்டு வெளியே ...









