 
            ‘வீரவணக்கம்’ கோடங்கி விமர்சனம் 3/5
            வீரவணக்கம் கோடங்கி விமர்சனம் 3/5
 
இல்லாத பல விஷயங்களையும், மிகைப்படுத்தி பல விஷயங்களையும் சொன்ன கேரளா ஸ்டோரிக்கு டப் கொடுக்கும் விதமாக அனில் V.நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத் நடிக்க, தமிழகம் மற்றும் கேரள மண்ணில், அடக்குமுறைக்கான போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில் வாழ்க்கை வரலாற்று டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வீர வணக்கம்”.
சக மனிதனைக் கொடுமைப்படுத்தும், ஜாதிய அடக்குமுறை இன்றும் நாடு முழுவதும் நடந்து வருகிறது. ஆனால் இன்றைய நிலைமையை விட மோசமான ஒடுக்குமுறை சுதந்திரத்திற்கு முன்பும் அதற்கு பிறகும் எப்படி தலைவிரித்து ஆடியது என்பதை மிக யதார்த்தமாக சொல்ல இயக்குனர் முயற்சித்து இருக்கிறார்.
தமிழகத்திலும், கேரளத்திலும் உண்மையில் வாழ்ந்து ஒடுக்கு முறைக்கு எதிராக போராடிய ஆளுமையான P கிருஷ்ணபிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் கதையை இந்த படத்தில் காட்சிப்படுத்...        
        
    
 
                            









