வியாழக்கிழமை, அக்டோபர் 29
Shadow

உலக செய்திகள்

வினை விதைத்தவன் வினை அறுக்கத் தொடங்கி விட்டான் இலங்கையில் அதிபருக்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம்!

வினை விதைத்தவன் வினை அறுக்கத் தொடங்கி விட்டான் இலங்கையில் அதிபருக்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம்!

HOME SLIDER, World News, உலக செய்திகள்
  வினை விதைத்தவன் வினை அறுக்கத் தொடங்கி விட்டான் இலங்கையில் அதிபருக்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம்! இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டின் முன் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலால் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இலங்கை அரசின் புதிய விவசாயக் கொள்கையால் அந்நாட்டில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதோடு, உணவுப் பஞ்சமும் ஏற்பட்டுள்ளதால் அதிபர் ராஜபக்சேவை பதவி விலகக் கோரி பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது. இலங்கையில் அத்தியாவசியப் பொருட்க...
மின் வெட்டு, பெட்ரோல் டீசல் இல்லை, விண்ணை முட்டும் விலைவாசி, மருந்துகளுக்கு தட்டுப்பாடு அழிவின் விளிம்பில் இலங்கை!

மின் வெட்டு, பெட்ரோல் டீசல் இல்லை, விண்ணை முட்டும் விலைவாசி, மருந்துகளுக்கு தட்டுப்பாடு அழிவின் விளிம்பில் இலங்கை!

HOME SLIDER, World News, உலக செய்திகள்
  இலங்கையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இரு நாட்களுக்கு டீசல் வாங்க யாரும் வர வேண்டாம் என சிலோன் பெட்ரோலிய நிறுவனம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.  மருந்துகள் இல்லை.. நாள் ஒன்றுக்கு 10 மணிநேரம் மின்வெட்டு என கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியில் இலங்கை மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர் . எரிபொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதால், மின் உற்பத்தி மையங்களில், மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் 10 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, மருத்துவமனைகளுக்கு மட்டுமே மின்சாரம் வழங்கும் சூழல் நிலவுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் மின்சாரத்தை சேமிக்க அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நடைமுறைப்படுத்துமாறு ...
படைகளை குறைப்பதாக ரஷ்யா கூறுவதை நம்ப முடியாது என அமெரிக்கா எச்சரிக்கை!

படைகளை குறைப்பதாக ரஷ்யா கூறுவதை நம்ப முடியாது என அமெரிக்கா எச்சரிக்கை!

HOME SLIDER, ukrain war, World News, அரசியல், உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக உக்ரைன், ரஷ்யா இடையே துருக்கியில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் படைகளைக் குறைப்பதாக ரஷ்யா அறிவித்தது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, கீவ் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் படைகள் உக்ரைனின் வேறு பகுதியில், தாக்குதலை தீவிரப்படுத்த பயன்படுத்தப்படும் என எச்சரித்துள்ளார். ரஷ்யாவின் அறிவிப்பால் கீவ் நகருக்கான அச்சுறுத்தல் முடிந்து விட்டது என கருத முடியாது எனவும் ஜான் கிர்பி வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, பிரசல்சில் ஏப்ரல் 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெற உள்ள நேட்டோ, உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யா உடனான பேச்சுவார்த்தையில் அமைதிக்கான நேர்மறையான...
விழா மேடையில் அறை விட்ட சம்பவம் மன்னிப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்!

விழா மேடையில் அறை விட்ட சம்பவம் மன்னிப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது இந்த நிலையில், கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு வந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார். அவர் நடிகர் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் பற்றி நகைச்சுவையாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நடிகையின் கணவரும் ஹாலிவுட் நடிகருமான வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கி...
இந்தியாவிடம் மீண்டும் கையேந்தும் இலங்கை அரசு!

இந்தியாவிடம் மீண்டும் கையேந்தும் இலங்கை அரசு!

HOME SLIDER, World News, உலக செய்திகள்
  இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்த இலங்கையின் பொருளாதாரம், கொரோனா தொற்றால் 90 சதவீத பாதிப்புக்கு உள்ளானது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டது. மக்கள் பொருளாதார நெருக்கடியின் பலமுனைத் தாக்குதலில் திகைத்து திண்டாடி வருகின்றனர்.  எரிபொருள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நிலக்கரி வாங்குவதற்கு கூட நிதி இல்லாததால், மின் உற்பத்தி முடங்கி உள்ளது. தினசரி பல மணி நேர மின்வெட்டு உள்ளது. இலங்கைக்கு இந்தியா உதவிக் கரம் நீட்டி வரும் நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியாவிடம்  ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடன் கேட்டிருந்தது. இதற்காக இலங்கை நிதியமைச்சர் பாசில் ராஜபக்சே கடந்த சில தினங்களுக்கு ...
உக்ரைன் மரியுபோலில் “,பயங்கர பேரழிவு” ரஷியா தாக்குதலில் தஞ்சம் அடைந்த 5,000 பேர் பலி!

உக்ரைன் மரியுபோலில் “,பயங்கர பேரழிவு” ரஷியா தாக்குதலில் தஞ்சம் அடைந்த 5,000 பேர் பலி!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா 34-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய படைகளின் தாக்குதல் காரணமாக மரியுபோலில் இதுவரை 5,000 பேர் பலியானதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. தியேட்டரில் தஞ்சம் புகுந்த ஏராளமானோர் இந்த தாக்குதலில் பலியானார்கள்.   உக்ரைனில் ரஷிய படைகளின் தொடர் தாக்குதல்களால் துறைமுக நகரான மரியுபோல் அழிவின் விளம்புக்கு சென்றுள்ளது என்றும், அந்த நகரில் சுமார் 5,000 பேர் இதுவரை பலியாகி உள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது...
ரஷிய நவீன ராக்கெட் தாக்குதல்களால் உக்ரைனில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு!

ரஷிய நவீன ராக்கெட் தாக்குதல்களால் உக்ரைனில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு!

HOME SLIDER, politics, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
உக்ரைன் மீதான ரஷிய போர் இரண்டாவது மாதமாக நடந்து வருகிறது. இந்தப் போரில் ராணுவ கட்டமைப்புகளைத் தாண்டி பொதுமக்களையும் குறிவைக்கும் வகையில் அடுக்கு மாடி குடியிருப்பு, ஆஸ்பத்திரிகள், பிரசவ ஆஸ்பத்திரிகள், குண்டுவீச்சு தவிர்ப்பு பதுங்குமிடங்கள் என ரஷிய படைகள் தாக்குதல் தொடுத்து வருகின்றன. தலைநகர் கீவ், மரியுபோல், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்றும் கனவு கைகூடாத நிலையில், பிற நகரங்களை ரஷிய படைகள் தொடர்ந்து குறி வைக்கின்றன. உக்ரைன் மீதான போரின் முதல் கட்டம் முடிந்து விட்டதாகவும், கிழக்கு உக்ரைன் மீது கவனத்தை செலுத்தப்போவதாக அறிவித்தபோதும், ரஷியா அதை இன்னும் செயல்படுத்த வில்லை. இந்தநிலையில் போலந்து வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அங்குள்ள வார்சா நகரில் ரஷிய மக்களுக்கு அவர்களது தலைவர் புதின் பற்றி பேசினார். அப்போது அவர், “கடவுளின் பொருட்டு இந்த மனிதர் (புதின்) அதிகாரத்தில் ...
போரால் தகவல் தொடர்பு சேவை முற்றிலும் செயலிழந்த உக்ரைன்!

போரால் தகவல் தொடர்பு சேவை முற்றிலும் செயலிழந்த உக்ரைன்!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த மாதம் 24ம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சிக்கி சீர்குலைந்துள்ளன. இந்நிலையில், ரஷியா போர் தொடுத்ததன் விளைவாக, உக்ரைனின் தேசிய தொலைத்தொடர்பு நிறுவனமான யுகேஆர் டெலிகாம் கடும் செயலிழப்பைச் சந்தித்துள்ளது. இது தொடர்பாக கீவ் நகர அரசு அதிகாரிகள் கூறுகையில், உக்ரைனில் தகவல் தொடர்பு சேவை கடுமையாக செயலிழந்துள்ளது. இதற்கு சைபர் தாக்குதல் காரணமா என விசாரித்து வருகிறோம்....
பணத்தை கொண்டு வரவில்லை, மக்களின் மனத்தையே எடுத்து வந்திருக்கிறேன்- அபுதாபியில் முதல்வர் ஸ்டாலின்

பணத்தை கொண்டு வரவில்லை, மக்களின் மனத்தையே எடுத்து வந்திருக்கிறேன்- அபுதாபியில் முதல்வர் ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள், தமிழக அரசியல்
  அபுதாபியில் உள்ள இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில், இந்திய சமூக மற்றும் கலாச்சார மையம் மற்றும் அபுதாபி வாழ் தமிழ் சமூகம் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-   நான்கு நாட்களாக துபாயிலும், இந்த அபுதாபி பகுதியிலும் நான் ஒரு சுற்றுப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். தமிழகத்திலே தான் சுற்றுப் பயணம் நடத்துவது எனக்கு வழக்கம். அவர்கள் அழைத்த இடங்களுக்கு எல்லாம் நான் போவது  உண்டு. அப்படி அழைக்கப்பெறும் இடங்களிலெல்லாம் எனக்கு வரவேற்புக்களை மகிழ்ச்சியோடு, உற்சாகத்தோடு, ஊக்கத்தோடு அவர்கள் என்னை வரவேற்பது உண்டு. அதற்குக் கொஞ்சம் கூட குறைவில்லாமல், கொஞ்சம் கூட இல்லை, ஒரு இன்ச் கூட குறைவில்லாமல், இந்த நான்கு நாட்களாக நான் திக்குமுக்காடிப் போயிருக்கிறேன். தமிழ்நாட்டை நோக்கி பல தொழில் நிறுவனங்களை ஈர்ப்ப...
Oscar 2022 – 94-வது ஆஸ்கர் விருது பெற்றவர்களின் முழுப் பட்டியல்!

Oscar 2022 – 94-வது ஆஸ்கர் விருது பெற்றவர்களின் முழுப் பட்டியல்!

CINI NEWS, HOME SLIDER, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  94-வது ஆஸ்கர் விருது விழா சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. யுஎஸ்ஸில் தயாராகும் படங்களுக்கான விருது விழாவாக இருந்தாலும், உலகம் முழுவதும் அதிகம் பேர் பார்க்கும் திரைப்பட விருது விழா இதுவாகும். இதில் வெற்றி பெற்ற கலைஞர்கள் மற்றும் படங்களின் முழுவிவரம்... 1. சிறந்த திரைப்படம் - கோடா 2. சிறந்த நடிகர் - வில் ஸ்மித் (திரைப்படம் - கிங் ரிச்சர்ட்) 3. சிறந்த நடிகை - ஜெசிகா சாஸ்டெய்ன் (திரைப்படம் - தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே) 4. ஆவணப்படம் - சம்மர் ஆப் சோல் (அல்லது, வென் தி ரிவொலியுசன் குட் நாட் பி டெலிவைஸ்ட்) 5. பாடல் - நோ டைம் டு டை ( படம் - நோ டைம் டு டை. இசை மற்றும் பாடல் வரிகள் பில்லி எலிஷ் மற்றும் ஃபின்னியாஸ் ஓஙகானல்) 6. சிறந்த இயக்குனர் - ஜென் ஷாம்பியன் (திரைப்படம் - தி பவர் ஆஃப் டாக்) 7. சிறந்த துணை நடிகர் - டிராய் காஸ்டர் (திரைப்படம் - கோடா) 8. சிறந்த சர்வதேச ...