வியாழக்கிழமை, அக்டோபர் 29
Shadow

உலக செய்திகள்

தியேட்டரில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் டிரோன் குண்டு தாக்குதல் 300 பேர் பலி!

தியேட்டரில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் டிரோன் குண்டு தாக்குதல் 300 பேர் பலி!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைனில் பொதுமக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தஞ்சம் அடைந்த திரையரங்கம் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 300 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 4-வது வாரமாக நீடித்து வருகிறது. பல்வேறு பகுதிகள் மீதும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக துறைமுக நகரான மரியுபோலை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கி வருகிறது. ஹைபர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பயங்கரமாக ஆயுதங்களுடன் தாக்குவதால் அந்நகரம் சீர்குலைந்துள்ளது. மரியுபோலில் 90 சதவிகித கட்டடங்கள் தாக்குதலில் உருக்குலைந்துள்ளன. அங்கு 3 லட்சம் பேர் மின்சாரம், குடி நீர் மற்றும் உணவு இன்றி சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகளை குறி வைத்து தாக்குவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பொதுமக்கள் மரியுபோல்...
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை துபாயில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை துபாயில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  துபாய் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.     இந்த சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் துபாய் எக்ஸ்போ 2022 பார்வையிடச் சென்ற என்னை நண்பர் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ஸ்டூடியோவுக்கு அழைத்து, தான் தயாரித்துள்ள 'மூப்பில்லா தமிழே தாயே' ஆல்பத்தை காண்பித்தார். தமிழுக்கும் இசைக்கும் உலகில் எல்லை இல்லை!" என மாண்புமிகு முதலமைச்சர் பாராட்டியுள்ளார். அதோடு ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டியோவில் இருக்கும் படங்களையும் வெளியிட்டிருக்கிறார். அவருடன் உதய் நிதி எம்.எல்.ஏ., துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதய் நிதி ஆகியோரும் உடனிருந்ததனர்....
துபாய் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த தமிழ் ரசித்து பார்த்த முதல்வர் ஸ்டாலின்

துபாய் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த தமிழ் ரசித்து பார்த்த முதல்வர் ஸ்டாலின்

HOME SLIDER, politics, உலக செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
துபாய் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த தமிழ் ரசித்து பார்த்த முதல்வர் ஸ்டாலின் துபாயில் உள்ள உலகிலேயே அதிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா கோபுரம் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழ்நாட்டின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அழகிய காட்சிப் படத்தினை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் ரசித்து பார்த்தார்....
UkRaine War- புதினின் தவறான முடிவால் ரஷ்யாவுக்கு பின்னடைவு!

UkRaine War- புதினின் தவறான முடிவால் ரஷ்யாவுக்கு பின்னடைவு!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஒரு மாதத்தை கடந்து விட்ட நிலையில். இப்போரில் ரஷ்யா மெல்ல மெல்ல தோல்வியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. ஐரோப்பா  கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நாடு உக்ரைன். சுமார் 4 கோடி மக்கள்  தொகை கொண்ட இந்நாட்டின் மக்கள் தொகையில் கால் பகுதியினர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். உக்ரைன் நாட்டு பொதுமக்களை காப்பாற்ற போவதாக கூறி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த மாதம் 24ஆம் தேதி போரை அறிவித்தார் புதின். 21ஆம் நூற்றாண்டில் ஒரு போரா? என உலக நாடுகள் அதிர்ச்சியான நிலையில், ஒரு மாதத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மடிந்துள்ளனர். அழகிய நகரங்கள் உருகுலைந்து சின்னாபின்னமாயுள்ளன. பார்த்து பார்த்து கட்டிய வானுயர்ந்த கட்டடங்கள் கான்கிரிட் குவியலாக காட்சியளிக்கின்றன. தடை விதிக்க...
ஐ.நா.வில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா, சீனா உள்பட 38 நாடுகள் புறக்கணித்தன!

ஐ.நா.வில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா, சீனா உள்பட 38 நாடுகள் புறக்கணித்தன!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. பொதுசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 140 நாடுகள் வாக்களித்தன. தீர்மானத்துக்கு எதிராக ரஷியா, பெலாரஸ், சிரியா, வட கொரியா, எரித்ரியா ஆகிய 5 நாடுகள் வாக்களித்தன. சீனா உள்ளிட்ட 38 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்தியா எதிர்பார்த்த அம்சங்கள் இந்த வரைவு தீர்மானத்தில் இல்லை என்பதால் இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய நீதிபதி எதிர்த்து கருத்து தெரிவித்த நிலையில் இந்த விவகாரத்தில் இந்தியா புறக்கணித்தது உலக அரங்கில் உன்னிப்பாக கவனிக்கபடுகிறது....
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றடைந்தார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றடைந்தார்!

HOME SLIDER, politics, World News, உலக செய்திகள், தமிழக அரசியல்
துபாயில்  கடந்த அக்டோபா் 1-ல் தொடங்கிய சா்வதேச தொழில் கண்காட்சி மாா்ச் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இங்கு மாா்ச் 25 முதல் 31 வரை தமிழ்நாடு வாரமாக கண்காட்சியில் உள்ள தமிழ்நாடு அரங்கில் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இந்நிலையில், துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசுமுறை பயணமாக சென்னையில் இருந்து இன்று மாலை தனி விமானத்தில் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றடைந்தார். துபாய் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அந்நாட்டிற்கான இந்திய தூதர் அமன் பூரி வரவேற்றார். துபாய் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரங்கை நாளை நேரில் சென்று திறந்து வைக்கிறாா் https://www.youtube.com/watch?v=QxyC5nG5XkI துபாயில்  உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரிகளுடனான சந்திப்பு, வா்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவா்களுடனான சந்திப்பு ஆகியனவும் நடைபெறவுள்ளன. ...
மீண்டும் செக்ஸ் குற்றச்சாட்டில் சிக்கிய நித்தியானந்தா… வெளி நாட்டு பெண் பக்தை இ-மெயிலில் புகார்!

மீண்டும் செக்ஸ் குற்றச்சாட்டில் சிக்கிய நித்தியானந்தா… வெளி நாட்டு பெண் பக்தை இ-மெயிலில் புகார்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாருக்கு சொந்தமான தியான பீடம் உள்ளது. தற்போது கைலாசா எனும் தனி நாட்டில் நித்யானந்தா இருந்து வருகிறார். அங்கிருந்தபடி அவ்வப்போது வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகிறார் இந்த நிலையில், ராமநகர் மாவட்டம் பிடதி போலீசாருக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி புகார் அளித்துள்ளார். அந்த வெளிநாட்டு பெண்ணின் பெயர் சாரக் லான்ட்ரி ஆகும். பிடதி போலீசாருக்கு இ-மெயில் மூலம் அவர் புகார் அனுப்பி வைத்திருந்தார். அதில் கைலாசா நாட்டில் இருக்கும் நித்யானந்தா சாமியார், அவரது சீடர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி இருந்தார். மேலும் அந்த பெண் தனது டுவிட்டர் பதிவிலும் நித்யானந்தா மீது குற்றச்சாட்டு கூறி இருந்தார். ஆனால் நித்யானந்தா மீது இ-மெயில் வெளிநாட்டு பெண் அளித்திருக்கும் புகாரின் பேரில் பிடத...
சிறையிலேயே காதலியை திருமணம் செய்து கொண்ட விக்கிலீக்ஸ் நிறுவனர்!

சிறையிலேயே காதலியை திருமணம் செய்து கொண்ட விக்கிலீக்ஸ் நிறுவனர்!

HOME SLIDER, World News, உலக செய்திகள்
  விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் தன் நீண்ட நாள் காதலியான ஸ்டெல்லா மோரிஸை நேற்று திருமணம் செய்து கொண்டார். ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார். அசாஞ்சே 10 ஆண்டுகளுக்கு மேலாக ரகசியமான அமெரிக்க ராணுவ பதிவுகள் மற்றும் ராஜதந்திர விவகாரங்களை விக்கிலீக்ஸ் மூலம் வெளியிட்டார். ராணுவ ரகசியங்கள் வெளியிட்டது தொடர்பாக அவர் மீது அமெரிக்காவில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. அவ்வழக்குகளில் விசாரணையை எதிர்கொள்ள அமெரிக்க அதிகாரிகள் அவரை நாடு கடத்த முயன்றனர். எந்த தவறும் செய்யவில்லை என்று மறுக்கும் அசாஞ்சே, 2019 முதல் பெல்மார்ஷ் சிறையில் இருந்து வருகிறார், அதற்கு முன்பு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக இருந்தார் ...
”ரஷ்யாவை எதிர்ப்பதில் இந்தியாவுக்கு பயம்” – சொல்கிறார் அமெரிக்க அதிபர்

”ரஷ்யாவை எதிர்ப்பதில் இந்தியாவுக்கு பயம்” – சொல்கிறார் அமெரிக்க அதிபர்

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில் அந்நாட்டிற்கு எதிரான கூட்டணியில் இந்தியா இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார். அவரது கருத்து சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அணிசேராக் கொள்கையை கடைபிடித்து வரும் இந்தியா, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் நல்லுறவை தொடர்ந்து பேணி வருகிறது. உக்ரைனை ரஷ்யா கடுமையாக தாக்கி வரும் நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. குவாட் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இவற்றில் இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ளன இவற்றை சுட்டிக் காட்டி அமெரிக்காவில் வணிக தலைவர்களிடையே உரையாற்றிய அதிபர் ஜோ...