தனுஷ் வெளியிடும் ஜிவி.பிரகாஷின் ஜெயில்!
வசந்த பாலன் இயக்க ஜி.வி.பிரகாஷ் நடிக்கும்" ஜெயில் " சிங்கள் டிராக் நடிகர் தனுஷ் வெளியிடுகிறார்!
அங்காடி தெரு, வெயில்,அரவான் காவியத்தலைவன் என பல வெற்றி படங்களையும் புதுமை படைப்புகளையும் தந்தவர் இயக்குநர் வசந்த பாலன்.இவரது புதிய கண்ணோட்டத்தில்
ஜி .வி பிரகாஷ் குமார்,அபர்நதி ,நந்தன்ராம், பசங்க பாண்டி,ராதிகா,ரவிமரியா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ஜெயில்.
தனுசுடன் அதீதி ராவ் பாடிய லவ் மெலோடி
அங்காடி தெரு, வெயில்,படம் மூலம் ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுக படுத்தியவர் வசந்த பாலன்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசை,நடிப்பில் இணையும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.இந்த படத்தின் பாடல்களை சோனி நிறுவனம் வெளியிடுகிறது.படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தனுஷ்,அதீதி ராவ் காத்தோடு காத்தானேன் என்ற பாடலை பாடியுள்ளார்கள்.கபிலன் இப்பாடலை எழு...









