21திரைப்பிரபலங்கள் வெளியிட்டுள்ள “சா” படத்தின் முதல் பார்வை
*21திரைப்பிரபலங்கள் வெளியிட்டுள்ள "சா" படத்தின் முதல் பார்வை*
சாதீயக் கொடுமைகளின் கோரமுகமாய் விளங்கும் ‘ஆணவக் கொலை’யை, மையக் கருவாய்க் கொண்டு ‘சா’ எனும் ஒற்றை எழுத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ஒன்று தயாராகி வருகிறது.
Wafi Group Middle East நிறுவனத்தின் சார்பில் கேராளாவை சேர்ந்த சஞ்ஜீவ் மாதவன் தயாரித்துள்ள இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பேரரசு,நடன இயக்குனர் அஜய் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.இ.சபரி.
முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்துக்கு இசையமைத்துள்ளார் அவுஸ்திரேலியாவில் வாழும் ஈழத்து இசையமைப்பாளர் அருண்குமாரசுவாமி.
இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியுள்ளார் கவிஞர் அஸ்மின்.
இப்படத்தின் முதல் பார்வை புத்தாண்டு தினத்தில் இந்தியா,இலங்கை, அவுஸ்திரேலியா மூன்று நாடுகளில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இலங்கையில், இப்படத்தின் முதல்பார்வையி...









