MOVIES
“பிரேக்கிங் நியூஸ்”… ஜெய் பட பேரே இதான்..!
ஜெய் நடிப்பில் உருவாகும் புதிய படம் பிரேக்கிங் நியூஸ்.!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜெய் நடிப்பில் உருவாக உள்ள புதிய படமான பிரேக்கிங் நியூஸ் என்ற படத்தின் பூஜைகள் சென்னையில் உள்ள AVM ஸ்டூடியோஸ் நடைபெற்றது.
ஆண்ட்ரூ பாண்டியன் இயக்க உள்ள இந்த படத்தை ராகுல் பிலிம்ஸ் சார்பாக கே. திருக்கடல் உதயம் தயாரிக்கிறார்.
படத்தின் நாயகியாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமான பானு அறிமுகமாக உள்ளார்.மேலும் இப்படத்தில் தேவ்கில், வேதாளம் வில்லன் ராகுல் தேவ், மந்திரா பேடி, இஷா கோபிகா, பழ. கருப்பையா, ராதா ரவி, கிருதுவாரகீஷ் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர்.
தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படத்தில் புதிய தொழில் நுட்பத்துடன் 90 நிமிடங்கள் விசுவல் எபோர்ட்டில் இப்படம் உருவாக உள்ளது.
இயக்குனர் : ஆண்ட்ரு பாண்டியன்
ஒளிப்பதிவு : ஜானி லால்
இசை : விஷால் பீட்டர்
ஆர்...
90ML ஓவியாவின் மரண மட்ட குத்தாட்ட பாடல் ரிலீஸ்..!
நடிகை ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90ml படத்தின் மரண மட்ட வீடியோ பாடல் வெளியானது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை ஓவியா நடித்துத்திருக்கும் முதல் திரைப்படம் 90ml. அடல்ட் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை பெண் இயக்குநர் அனிதா உதீப் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில் வரும் மார்ச் 1ஆம் தேதி ரிலீஸ் அகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நியூ இயர் ஸ்பெஷல் பாடலான மரண மட்ட குத்து பாடல் வெளியானது. சிம்பு மற்றும் மிர்ச்சி விஜய் இணைந்து எழுத்தியுள்ள இப்பாடலை ஓவியா மற்றும் ஹரிஷ் கல்யாண் பாடியுள்ளனர்.
https://youtu.be/Nuq3qkIcLIA...
தமிழ் மண்ணையும், மக்களின் யதார்த்தத்தையும் பேசும் படம் “கண்ணே கலைமானே “
ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம் 'கண்ணே கலைமானே'. உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
"நான் சீனு ராமசாமி சாரின் முதல் படத்திலிருந்தே அவரின் ஒரு பெரிய ரசிகன். அவரது திரைப்படங்கள் எப்போதுமே பிரமிப்பூட்டுகின்றன. மிக யதார்த்தமான சினிமாக்களை கொடுப்பதும், அதன் மூலமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு சில இயக்குனர்களே உள்ளனர். அவர்களில் சீனு ராமசாமி சார் மிக முக்கியமானவர்" என்றார் நடிகர், எழுத்தாளர் ஷாஜி."இன்று காலை படத்தை பார்த்த பிறகு, கமலகண்ணனி...
அரசியல் நையாண்டி செய்யும் LKG படக்குழுவின் பரபரப்பு மெரீனா விசிட்..!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மறைந்த 5 முதலமைச்சர்களின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்திய LKG படக்குழு!நம் சமகால அரசியல் அல்லது சமூக பிரச்சினைகள் நையாண்டி செய்யும் திரைப்படங்களுக்குள் இருக்கும் ஒரு பொதுவான விஷயம் அவை ஒரு சிறிய அளவில் தான் அதை பேசும்.
உண்மையிலேயே, 'அரசியல் நையாண்டி' படங்களுக்கு இங்கே பெரிய பற்றாக்குறை தான் இருக்கிறது. ஏனெனில் அத்தகைய கதைகளை எழுதி, அதை சினிமாவாக உருவாக்குவதற்கு மிகச்சிறப்பான கதை ஆற்றல் தேவைப்படுகிறது. ஆனால் ஆர்.ஜே.பாலாஜியின் LKG படம் அதன் ப்ரோமொ விளம்பரங்கள் மற்றும் பாடல்கள் மூலம் மிகப்பெரிய வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் வெளியீட்டிற்கு முன்பே பெற்றிருக்கிறது.
மேலும், இந்த வகையான ஒரு படத்திற்கு அதிகாலை காட்சிகள் திரையிடப்படுவது என்பது படத்தின் மீதான அபரிமிதமான எதிர்பார்ப்பை காட்டுகிறது. இந்நிலையில் இந்த படக்குழு தமிழ்நாட்டின் மறைந்த, மக்கள் மனதி...
அரசியல் நையாண்டி செய்யும் படங்களில் LKG புதுரகம்..!
அரசியல் நையாண்டியை அடிப்படையாகக் கொண்ட படங்கள் ரசிகர்களை ஈர்க்க முதல் காரணம், சமகாலத்தில் நிகழும் சம்பவங்களை பகடி செய்வது தான். நையாண்டி என்பது நிகழும் சம்பவங்களை பற்றிய கோபத்தின் அல்லது விமர்சனத்தின் வெளிப்பாடு தான். அது தான் எல்லைகள் மற்றும் மொழியியல் தடைகளைத் தாண்டி பிரபலமானதாகிறது. ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படமான 'LKG' உலகளாவிய மேடையில் அனைவரையும் ஈர்த்திருக்கிறது.
படத்தின் டிரெய்லர் சில யூடியூப் சேனல்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பாகி வரும் இந்தியா, நியூஸிலாந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஸ்ருதிஹாஸன் பாடிய சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டிருப்பது இந்த திரைப்படத்திற்கு ஒரு பெரிய பூஸ்டாக மாறியிருக்கிறது. கூடுதலாக, LKG படக்குழு ட்விட்டர் இந்தியாவில் படத்தின் புரமோஷன் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இயக்குனர் கே.ஆர் பிரபு ...
LKG அரசியல் பேசும் பொழுது போக்கு படம்..!
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருக்கும் படம் எல்.கே.ஜி. வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, படத்தின் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் கூறும்போது, "எல்.கே.ஜி எனது ஹோம் பேனரின் முதல் தயாரிப்பாகும். என் தந்தை ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளராக சினிமாவில் நுழைவதற்கு ஒரு கனவு கண்டார், ஆனால் துரதிருஷ்டவசமாக 46 வயதில் காலமானார். இந்த படத்தின் மூலம் அந்த கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆர்.ஜே. பாலாஜி மற்றும் அவருடைய மொத்த குழுவும் சொன்னபடியே படத்த...
BMW பைக் ஜெயிக்கனுமா… தேவ் பட போட்டியில் பங்கு பெறுங்க..!
உங்கள் குடும்பத்தில் தேவ் போன்று வாழ்க்கையை நேசித்து வாழ்பவர் யாராவது உள்ளனரா?. ஆம் என்றால் அவர்களை உலகிற்கு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
தேவ் திரைப்பட குழுவினர் சார்பில் அவர்களுக்காக 2 (இரண்டு) BMW சூப்பர் பைக்குகள் பரிசாக காத்திருக்கின்றன.
போட்டி பற்றிய விவரங்கள்:
a) நீங்களோ அல்லது
b) உங்கள் குடும்பத்தினரோ அல்லது உங்கள் நண்பர்களோ ஏன் இந்த BMW SUPER BIKE ஐ வெல்ல வேண்டும்
என்பதற்கான காரணத்தை எங்களுக்கு விளக்கி எழுதுங்கள்.
அதோடு பின்வரும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்:
கேள்வி 1: தேவ் திரைப்படத்தில், வாழ்க்கையை பற்றிய தேவின் சித்தாந்தமும், படத்தில் அவருடைய தொழிலும் என்ன?
கேள்வி 2: தேவ் திரைப்படத்தில், மேக்னா பணத்தின் மீது அதிக பற்று உடையவரா?
கேள்வி 3: தேவ் திரைப்படத்தில் தேவ்-மேக்னா பிரிவிற்கான காரணம் என்ன?
ஒவ்வொரு கேள்விகளுக்குமான பதிலை 100 வார்த்தைகளு...
சர்வதேச விருது போட்டிகளில் கலந்து கொள்ளும் பட ரகசியம்..! டுலெட் இயக்குனர் செழியன்
கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் என தரமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் இயக்குநர் செழியன்.. தற்போது தான் இயக்குநராக அறிமுகமாகியுள்ள முதல் படமான ‘ டு லெட் ’ படம் மூலமாக உலக அரங்கில் நமது தமிழ் சினிமாவை மீண்டும் ஒருமுறை தலைநிமிரச் செய்துள்ளார். ஆம்.. கடந்த வருடம் நவ-17ஆம் தேதி கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் தான் முதன்முதலாக கலந்துகொண்டது ‘ டு லெட் ’ படம். அந்த ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.. 32 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது. இந்த படம் வரும் பிப்-21ஆம் தேதி வெளியாகிறது. சர்வதேச திரைப்பட விருதுகள் குவித்தால் மட்டும் போதுமா..? இந்த படம் வணிகரீதியாக வெற்றி பெற்றுவிடும் வாய்ப்புகள் உள்ளதா..? எதனால் படம் வெளியாக இவ்வளவு தாமதம் என்பது குறித்தெல்லாம் தனது...
வரவேற்பு பெற்ற “காத்து வாக்குல ஒரு காதல்” டீசர்!
காதலர் தினத்தில் வந்த 'காத்து வாக்குல ஒரு காதல் ' படத்தின் டீஸரை பிபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.இந்தப் பூமியில் எங்கும் நிறைந்திருப்பது காற்று மட்டுமல்ல காதலும் தான். இரண்டையுமே கறுப்பா சிவப்பா என்று பார்க்க முடியாது. இனிப்பா கசப்பா என்று சுவைக்க முடியாது. ஆனால் உணர மட்டுமே முடியும்.காற்றில் கலந்து வரும் பூமணம் போலவும் துர் மணம் போலவும் காதலில் காமம் கலந்த கெட்ட காதலும் உண்டு.அன்பு செறிந்த தூய நல்ல காதலும் உண்டு. அப்படி ஒரு புனிதமான காதலை இரண்டு மயிலிறகு மனசுகளை இனம் பிரித்து ஒரு கதையாக இழை பிரித்து உருவாகும் படம் தான் 'காத்து வாக்குல ஒரு காதல்'.
சீரடி சாய்பாபா வழங்கும் எஸ்.பூபாலன் தயாரிப்பில் லைக் அண்ட் ஷேர் மீடியா இணை தயாரிப்பில் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி நாயகனாக நடித்து இயக்குகிறார் மாஸ் ரவி .நாயகியாக லட்சுமிபிரியா நடிக்கிறார். மற்றும...

