ரவியின் கோமாளி படக்கதை திருட்டு கதையா? உதவி இயக்குனருக்கு அங்கீகார கடிதம் கொடுத்த எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ்..!
ரவியின் கோமாளி படக்கதை திருட்டு கதையா? உதவி இயக்குனருக்கு அங்கீகார கடிதம் கொடுத்த எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ்..!
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கதை திருட்டு புகார் அதிகரித்த படி உள்ளது.
எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இயக்குனர் பாக்யராஜ் வந்த பின் பல அதிரடிகளை செய்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்க்கார் படக்கதையும் திருட்டுக்கதை என புகார் எழுந்த போது உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரனுக்கு எழுத்தாளர் சங்கம் கடிதம் கொடுக்க பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின் பட ரிலீஸ் நேரத்தில் வருண் ராஜேந்திரன் பெயர் டைட்டிலுக்கு முன் போடப்பட்டது.
இப்போது அதே போல மீண்டும் ஒரு அதிரடியை இயக்குனர் பாக்யராஜ் சத்தமில்லாம்ல் செய்திருக்கிறார்.
ஜெயம் ரவி நடித்து வரும் படம் கோமாளி. இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் பெரும் செலவில் தயாரித்து இருக்கிறார...









