துபாய் விமானத்திலிருந்து நெஞ்சுவலி காரணமாக அவசரமாக இறங்கிய அமைச்சர் துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதி!
தமிழக அமைச்சா் துரைமுருகன் இன்று காலை 9.50 மணிக்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் துபாய் செல்ல சென்னை விமானநிலையம் வந்தாா்.
அவருடைய வீசாவில் ஏதோ பிரச்னை என்பதால் பயணத்தை ரத்து செய்துவிட்டு, விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டாா்.
அதன்பின்பு அமைச்சரின் விசாவில் உள்ள பிரச்னையை சரி செய்து, புதிய விசா வாங்கிவிட்டு இன்று மாலை 6.50 மணிக்கு சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஏா்இந்தியா விமானத்தில் அமைச்சா் துரைமுருகனுக்கு டிக்கெட் போடப்பட்டது.
அமைச்சரும் இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்துவிட்டாா்.
ஏா் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் அமைச்சரை வரவேற்று விமானநிலையத்திற்குள் அழைத்து சென்றனா்.
அவருக்கு போா்டிங் பாஸ், பாதுகாப்பு சோதனை, சுங்கச்சோதனை, குடியுரிமை சோதனை அனைத்தும் முடித்து விமானத்திற்குள் ஏறியும் அமா்ந்துவிட்டாா்.
ஆனால் வ...









