வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

தமிழக அரசியல், கலைத்துறைக்கு ஜே.கே.ரித்திஷ் திடீர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு – TMJA இரங்கல் செய்தி

தமிழக அரசியல், கலைத்துறைக்கு ஜே.கே.ரித்திஷ் திடீர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு – TMJA இரங்கல் செய்தி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  தமிழக அரசியல், கலைத்துறைக்கு ஜே.கே.ரித்திஷ் திடீர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் இரங்கல் செய்தி தமிழக அரசியல், தமிழ் சினிமா , பொது வாழ்வு , சமூக சேவை என அனைத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்து பலரை கை தூக்கி விட்ட சகோதரர் ஜே.கே.ரித்திஷ் அவர்களின் திடீர் மரணம் பெறும் அதிர்ச்சியையும், சொல்ல முடியாத துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கலைத்துறை, அரசியல் என இரண்டிலும் பலரை உயர்த்தி அழகு பார்த்தவரை இறைவன் இத்தனை சீக்கிரம் தன்னிடம் அழைத்து கொண்டதை ஏற்க ஏனோ மனம் மறுக்கிறது. கஷ்டம் என்று தன்னை தேடி வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுத்து மகிழ்ந்த சகோதரனை இத்தனை சீக்கிரம் எங்களிடம் இருந்து எடுத்து கொண்டது நியாயமா என்று இறைவனை கேள்வி கேட்கத் தோன்றுகிறது. பாசம் மிக்கவரை இழந்து வாடும் அன்னாரின் மனைவி குழந்தைகள் துக்கத்தில் தமிழ் ...
கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் விமர்சனம்

கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
தயாரிப்பாளராக இருந்து இயக்குனராக அவதாரம் எடுத்து ‘மாயவன்’ என்ற ஹிட் படத்தை கொடுத்த சி வி குமார், தனது அடுத்த படைப்பாக ‘கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ‘A' தர சான்றிதழுடன் இன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். நாயகி ப்ரியங்கா ரூத் (ஜெயா), இரு தங்கைகளுடன் அழகான குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார். தன்னுடன் கல்லூரியில் படிக்கும் நாயகன் அசோக்(இப்ராஹிம்) மீது காதலில் விழுகிறார் நாயகி. இந்த விஷயம் ஜெயாவின் வீட்டிற்கு தெரியவர, காதலுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறி ஜெயா என்ற தன் பெயரை ரசியாவாக மாற்றிக் கொண்டு இப்ராஹிமை திருமணம் செய்து கொள்கிறார். மெட்ராஸின் தாதாவாகவும், போதை பொருள் கடத்தல் மன்னனாகவும் வரும் வேலு பிரபாகரனிடம் வேலைக்கு சேர்கிறார் அசோக். சில நாட்களிலேயே அசோக்கை போலீஸார் என்கவுண்டரில் சுட்டு கொன்று விடுகின்றனர்....
3 பிரபலங்களின் காதல் மெஹந்தி சர்க்கஸ் – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

3 பிரபலங்களின் காதல் மெஹந்தி சர்க்கஸ் – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கணத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களை தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்ப...
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோ ஆகும் காமெடியன்..!

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோ ஆகும் காமெடியன்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  காமெடியன் ஆகி ஹீரோ ஆன நடிகர்களின் வரிசையில் புதிதாக இணைந்திருப்பவர் யோகிபாபு. இப்போது யோகிபாபு இல்லாத படங்களே இல்லை என்ற நிலை தமிழ் சினிமாவில் உள்ளது. நடிகர் யோகி பாபு. இவர் தற்போது ஜினியின் 'தர்பார்', 'விஜய்யின் 'தளபதி 63' உள்பட பல 18 படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி காமெடி ஜானரில் உருவாகும் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்தில் அவரே கதை, கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். இன்னும் பெயரிடாத இப்படத்தை இயக்குநர் ராஜேஷ் உதவியாளர் ராஜசேகர் இயக்கவுள்ளார். ஏற்கனவே யோகிபாபு லொள்ளுசபாவிற்கு காமெடி ஸ்க்ரிப்ட் எழுதிய அனுபவம் உள்ளவர் என்பதால் அவரது ஸ்க்ரிப்டில் உருவாகும் காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....
அழகான ஹீரோயின் நிகிஷா படேலின் காமெடியில் எழில் படம்..!

அழகான ஹீரோயின் நிகிஷா படேலின் காமெடியில் எழில் படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  தமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியவராக இருக்கிறார் நடிகை நிகிஷா படேல். அரவிந்தசாமி நடிப்பில் வெளியான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் கொஞ்சநேரம் வந்தாலும் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்த நிகிஷா படேல் தற்போது இயக்குநர் எழில் இயக்கும் புதிய படத்தில் ஜிவி பிரகாஷோடு நடித்து வருகிறார்.     எழில் இயக்கும் படம் எதுவாக இருந்தாலும் அதில் ஹீரோவிற்கு போலவே ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்கும். அதனால் இப்படத்திற்குப் பிறகு தமிழில் நிகிஷா படேல் கவனம் ஈர்க்கும் நாயகியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இந்தப்படம் பற்றி நடிகை நிகிஷா படேல் கூறியதாவது,"இந்தப் படத்தில் நான் ஐடி நிறுவன ஊழியராக நடிக்கிறேன். படத்தின் நகைச்சுவை பகுதியின் ஆன்மாவே நான் தான் என்று சொல்லலாம். முதல் நாள் படப்பிடிப்பில் யோகா செய்யும் காட்சி படமாக்கட்டது. ஜிவி பி...
எம்ஜிஆரை வம்புக்கு இழுத்து வாங்கி கட்டிக் கொண்ட பப்ளிசிட்டி பா(ர்)ட்டி கஸ்தூரி..!

எம்ஜிஆரை வம்புக்கு இழுத்து வாங்கி கட்டிக் கொண்ட பப்ளிசிட்டி பா(ர்)ட்டி கஸ்தூரி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  எம்ஜிஆரை வம்புக்கு இழுத்து வாங்கி கட்டிக் கொண்ட பப்ளிசிட்டி பா(ர்)ட்டி கஸ்தூரி..! நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் மறந்து போன ரிட்டைர்டு நடிகை. வயசும் ஓடிப்போச்சி... இளமையும் இல்லாம போன பா(ர்)ட்டி நடிகை ஆனபிறகும் ரஜினி, கமல், விஜய், அஜீத் என்று பிரபலங்களை அவ்வப்போது வம்புக்கு இழுத்து சீப்பான பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும் பா(ர்)ட்டி. நேற்று சென்னையில் நடந்த ஒரு படவிழாவில் தொகுப்பாளினி வேலை செய்த பின் அந்த தயாரிப்பு நிறுவன செலவில் அதே நட்சத்திர ஓட்டலில் ரூம் எடுத்து ரொம்பவே"உற்சாக "மாக சாப்பிட்டுவிட்டு கிரிக்கெட் பார்த்திருப்பார் போல... அந்த விளையாட்டை நக்கல் அடிப்பதாக நினைத்து தேவை இல்லாமல் ஒரு டிவிட் போட... அது சிக்கலில் முடிந்திருக்கிறது. சிலர் வாயை கொடுத்து...... புண்ணாக்கி கொள்வார்கள். இந்த பப்ளிசிட்டி பா(ர்)ட்டி தன் கையை வைத்து தானே சூடு கட்டையை எடுத்து சொறிந்து கொண்டுள...
பி.எம்.நரேந்திர மோடி படத்தை வெளியிட தடைவிதித்தது இந்திய தேர்தல் ஆணையம்!!

பி.எம்.நரேந்திர மோடி படத்தை வெளியிட தடைவிதித்தது இந்திய தேர்தல் ஆணையம்!!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை இந்திய சினிமாவில் சமீபகாலமாக புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை விவரிக்கும் வர்த்தக ரீதியான திரைப்படம் 23 மொழிகளில் தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தில் பிரதமர் மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் நாள் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. நாடாளுமன்றத்துக்கான முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 11 ஆம் தேதிக்குப் பிறகு இந்தத் திரைப்படம் திரைக்கு வர உள்ளதால், அதை வெளியிடுவதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ஆனால், எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக படத்தை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது. இதைதொடர்ந்து, இதற்கிடையே, பாராளுமன்றத் தேர்தலின் முதற்கட...
CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகைகளில் அமலா பால் முக்கியமானவர். மைனா, அம்மா கணக்கு உள்ளிட்ட பல்வேறு படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். அவர் தற்போது ‘அதோ அந்த பறவை போல’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் வினோத் கேஆர் இயக்கத்தில் ஹாரர் திரில்லராக உருவாகிறது இந்த திரைப்படம். மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தொலைந்து போகும் ஒரு இளம் பெண்ணை பற்றிய கதைதான் ‘அதோ அந்த பறவை போல’. இதன் படப்பிடிப்புகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அமலா பாலின் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு ஆக்சன் காட்சி இதில் படமாக்கப்பட்டுள்ளது. https://www.instagram.com/p/BwBot7pnbtI/?utm_source=ig_share_sheet&igshid=1n7waow7iy58n இதில் அமலா பால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் காட்டுக்குள் அமர வைக்கப்பட்டிருக்கிறார். அமலா பால் இந்த புகைப்படத...
ஓட்டு கேட்டு  வராதீர்கள் -விஜய் ரசிகர் வீடுகளில் தொங்கும் போர்டுகளால் அதிமுக கூட்டணி ஷாக் !

ஓட்டு கேட்டு வராதீர்கள் -விஜய் ரசிகர் வீடுகளில் தொங்கும் போர்டுகளால் அதிமுக கூட்டணி ஷாக் !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருவதையொட்டி தமிழகத்தில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுகவினர் ஓட்டுக் கேட்டு வர வேண்டாம் என விஜய் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் ‘சர்கார்’. அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த கந்துவட்டிக் கொடுமை, மருத்துவத்துறை குறைபாடுகள் என பலவற்றையும் சுட்டிக்காட்டி இதில் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சர்கார் பட பேனர்களை எல்லாம் கிழித்து எரிந்தனர் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஓட்டுக்கேட்டு வரும் அதிமுகவினரை புறக்கணிக்கும் வகையில், அதிமுகவினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம், இது விஜய் ரசிகன் இல்லம் என்ற பதாகைகளை வீட்டு வாசலில் மாட்டி வைத்திருக்கின்றனர்...
நதியை இணையுங்கள்… கமலுக்கும் எனக்கும் உள்ள நட்பை கெடுக்காதீர்கள் – ரஜினி

நதியை இணையுங்கள்… கமலுக்கும் எனக்கும் உள்ள நட்பை கெடுக்காதீர்கள் – ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படப்பிடிப்பு கிளம்பிய சூழலில் சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு பற்றிய வாக்குறுதி உள்ளது வரவேற்கத்தக்கது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நதி நீர் இணைப்பு திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். நாட்டில் நதிகளை இணைத்தால் தண்ணீர் பிரச்னை, வறுமை தீரும் என தெரிவித்த ரஜினி, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே நதிகள் இணைப்பு குறித்து தாம் வலியுறுத்தியதாகவும், அந்த திட்டத்திற்கு பகீரத்ன யோஜனா என பெயர் வைக்குமாறு அவரிடம் கூறியதாகவும், பகீரத்ன என்றால் சாத்தியமில்லாதது சாத்தியமாகும் என்பது பொருள் என்றும் தெரிவித்தார். அப்போது, கமலுக்கு ஆதரவா என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த ரஜினி, யாருக்கும் ஆதரவு இல்லை என்ற என்னுடைய தேர்தல் நிலைப்பாட்டி...