’சாவீ’ திரைப்பட விமர்சனம் 3/5
’சாவீ’ திரைப்பட விமர்சனம் 3/5
நாயகன் உதய தீப், தனது தந்தையை தன் இரண்டு மாமன்கள் தான் கொலை செய்ததாக நினைத்து அவர்கள் மீது கோபமாக இருக்கிறார். அதே சமயம், மாமன் மகளை காதலிக்கவும் செய்கிறார். இதற்கிடையே, அவரது ஒரு மாமன் விபத்தில் இறந்து விடுகிறார். துக்க வீட்டில் அசதியில் அனைவரும் தூங்கி விட, பிணம் காணாமல் போகிறது. காணாமல் போன பிணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்குகிறது.
குடும்ப உறுப்பினர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொள்ளும் நிலையில், நாயகனின் மற்றொரு மாமனும் இறந்து விடுகிறார். இந்த தொடர் மரணங்களின் பின்னணி மற்றும் காணாமல் போன பிணம் என்ன ஆனது, என்பதை பிளாக் காமெடி ஜானரில் சொல்வதே ‘சாவீ’.
சாவு வீடு என்ற தலைப்பை ’சாவீ’ என்று மாற்றியிருக்கிறார்கள். புதிய தலைப்புக்கும் கதைக்கும் எந்தவித தொடர்பும் இல்லாதது போல் தான், இயக்குநர் என்ன சொல்ல வருகிறார், என்பது ஆரம்பத்தில் ...









