புதன்கிழமை, நவம்பர் 11
Shadow

HOME SLIDER

ஐபிஎல் 2023 – 10 அணிகள் விடுவித்துள்ள வீரர்களின் விவரம்!

ஐபிஎல் 2023 – 10 அணிகள் விடுவித்துள்ள வீரர்களின் விவரம்!

HOME SLIDER, NEWS, sports, விளையாட்டு செய்திகள்
ஐபிஎல் 2023 தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23-ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் விடுவித்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: சென்னை சூப்பர் கிங்ஸ்: டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், என் ஜெகதீசன், சி ஹரி நிஷாந்த், கே பகத் வர்மா, கேஎம் ஆசிப், ராபின் உத்தப்பா (ஓய்வு) மும்பை இந்தியன்ஸ்: கெய்ரோன் பொல்லார்ட், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் புத்தி, ரிலே மெரிடித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ் பஞ்சாப் கிங்ஸ்: மயங்க் அகர்வால்...
முதல் முறையாக இயக்குநர் வெங்கட் பிரபுவும், நடிகர் நாக சைதன்யாவும் இணையும் படம் தொடங்கியது!

முதல் முறையாக இயக்குநர் வெங்கட் பிரபுவும், நடிகர் நாக சைதன்யாவும் இணையும் படம் தொடங்கியது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *நாகசைதன்யா, வெங்கட்பிரபு, ஸ்ரீனிவாசா சித்தூரி, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸின் பைலிங்குவல் படத்தின் முக்கியமான ஆக்‌ஷன் ஷெட்யூல் துவக்கம்* முதல் முறையாக இயக்குநர் வெங்கட் பிரபுவும், நடிகர் நாக சைதன்யாவும் இணைந்திருக்கக்கூடியத் திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில், மிகப்பெரிய தயாரிப்புச் செலவில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் உருவாகி வருகிறது. பவன் குமார் வழங்ககூடிய இந்தத் திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். நாக சைதன்யா கதையின் நாயகனாக நடிக்க, நடிகர் அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்கிறார். கதையின் மிக முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்‌ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பில் அரவிந்த் சுவாமி இணைந்திருக்கிறார். ...
சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது – பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜூனா விருது!

சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது – பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜூனா விருது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசால் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இதேபோல் அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல், அர்ஜூனா விருதுக்கு 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச் சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவன், பேட்மிண்டன் வீரர் லக்‌ஷயாசென், எச்.எஸ்.பிரனோய் உள்பட 25 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வாழ்நாள் சாதனையாளர் விருது, புரஸ்கார் விருது உள்ளி...
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் ‘வால்டேர் வீரய்யா’ பட சிங்கிள் ட்ராக் இந்த வாரம் வெளியாகும்!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் ‘வால்டேர் வீரய்யா’ பட சிங்கிள் ட்ராக் இந்த வாரம் வெளியாகும்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் பாபி கொல்லி ( கே. எஸ். ரவீந்திரன்) இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'வால்டேர் வீரய்யா'. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. கமர்சியல் எண்டர்டெய்னராகத் தயாராகி வரும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை பற்றிய புதிய தகவலை 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் தன்னுடைய இணைய பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவருடைய இணைய பக்கத்தில், ':மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நடிகை ஊர்வசி ரௌத்லா இணைந்து கலக்கியிருக்கும் பாட...
யூடியூப் மியூசிக் குளோபல் 100 பட்டியலில் முதலிடத்தை பிடித்த விஜயின் “ரஞ்சிதமே” பாடல்!

யூடியூப் மியூசிக் குளோபல் 100 பட்டியலில் முதலிடத்தை பிடித்த விஜயின் “ரஞ்சிதமே” பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் வாரிசு. பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கும் இந்த வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படமும் ரிலீஸாக இருக்கிறது. இதுக்கிடையிலே சமீபத்தில் வாரிசு திரைப்படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிளான ரஞ்சிதமே பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்து இருக்குது. இந்நிலையில் தற்போது யூடியூப் Music Global Charts குறித்த பட்டியலை வெளியிட்டு இருக்க்குது. அதில் டாப் 100 மியூசிக் வீடியோஸ் Global பட்டியலில் ரஞ்சிதமே பாடல் No.1 இடத்தை பிடித்து இருக்குது. விஜய் ரசிகர்கள் இணையத்தில கொண்டாடி வருகின்றனர்...
யார்ரா நீங்கெல்லாம்… என்னடா பண்ணி வைச்சிருக்கீங்க… “முகுந்தன் உண்ணி அசோசியேட்”! கோடங்கி விமர்சனம்

யார்ரா நீங்கெல்லாம்… என்னடா பண்ணி வைச்சிருக்கீங்க… “முகுந்தன் உண்ணி அசோசியேட்”! கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  யார்ரா நீங்கெல்லாம்… என்னடா பண்ணி வைச்சிருக்கீங்க… “முகுந்தன் உண்ணி அசோசியேட்”! கோடங்கி விமர்சனம்   சாலை விபத்தும்… வழக்கும் வருமானமும் இப்படி ஒரு லைனை வைத்துக் கொண்டு ஒரு முழு நீள ஷாக்கிங் படம் பாக்கனும்னா “முகுந்தன் உண்ணி அசோசியேட்” தான் பாக்கனும்…   யப்பா… யார்ரா நீங்கெல்லாம்… என்னடா பண்ணி வைச்சிருக்கீங்க… பாத்ததென்னவோ மலையாளத்துலதான்… ஆனா… ஒவ்வொரு ஷாட்டும்… ஒவ்வொரு வசனமும் அப்படியே படம் பாக்குற ரசிகனுக்கு புரியிற மாதிரி… அட அட… அடேய் யப்பா அபினவ் சுந்தர்… கொஞ்சம் தமிழ் சினிமா பக்கமெல்லாம் வந்து போப்பா…   வினித் சினிவாசன், சுராஜ் இந்த இரண்டுபேர மட்டும் வைச்சிகிட்டு முழுப்படத்தையும் கொஞ்சமும் பதட்டப்படாம… ஆனா படம் பாக்குற ரசிகனை பதட்டப்படுத்தி… சபாஷ் இயக்குனரே…   ஒருவரிக்கதை சொல்லனும்னா… வக்கீல் படிச்சிட்டு உதவியாளரா சேரும் ஹீரோ வ...
உலகப் புகழ்பெற்ற, கின்னஸ் சாதனை புரிந்த பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு இன்று 88 வயசு!

உலகப் புகழ்பெற்ற, கின்னஸ் சாதனை புரிந்த பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு இன்று 88 வயசு!

HOME SLIDER, Old is gold, கட்டுரை
  தென்னிந்திய திரை உலகில் மட்டுமின்றி உலகப் புகழ்பெற்ற, கின்னஸ் சாதனை புரிந்த பின்னணி பாடகி பி.சுசீலா அவர்களுக்கு இன்று 88ஆவது பிறந்த நாள். ???? இந்த உலகில் இசை உள்ளவரை சுசீலா பாடிய பாடல்களும் உயிருடன் இருக்கும். அத்தகைய மாபெரும் இசைக்குயிலுக்கு ஆந்தை சினிமா அப்டேட்ஸ் குழு சார்பில் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு அவரை பற்றிய சில நினைவுகளையும் பகிர்ந்து கொள்வோம் * ஆந்திராவில் விஜயநகரம் என்ற இடத்தில் புலப்பாக்க முந்தராவ் - கவுத்தாரம் தம்பதிகளுக்கு 1935ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரிகளும் மூன்று சகோதரர்களும். தந்தை ஒரு வக்கீல். பள்ளியில் படிக்கும்போதே இசையில் ஏற்பட்ட ஆர்வத்தால் ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். மேலும் ஆந்திர பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் டிப்ளமோ ...
மிரட்டுகிறதா “மிரள்” கோடங்கி விமர்சனம்!

மிரட்டுகிறதா “மிரள்” கோடங்கி விமர்சனம்!

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  மிரட்டுகிறதா “மிரள்” கோடங்கி விமர்சனம்! ”மிரள்” படத்தலைப்பின் மூலம் படம் முழுக்க படம் பார்ப்பவரை மிரள வைக்க நினைத்த இயக்குனர் சக்திவேலின் கணிப்பு தவறாகவில்லை! பரத்தின் மனைவியான வாணி போஜனுக்கு வினோதமான ஒரு பயங்கர கனவு வந்து அவரை மிரள வைத்து பட்த்தை தொடங்குகிறார்கள்… அப்போது ஆரம்பிக்கும் மிரட்சி இடைஇடையே காணாமல் போனாலும் கிளைமாக்ஸ்வரை வந்து முடிவது புதுசுதான். காதல் திருமணம் செய்து கொண்ட பரத்தும் வாணி போஜனும் பிரச்சனைகளில் இருந்து விடுபட வாணி போஜனின் சொந்த ஊருக்கு மகன் அங்கித்துடன் குலதெய்வ வழிபாட்டுக்கு போகிறார்கள். அவர்களுடன் பரத்தின் நண்பனான ராஜ்குமாரும் வந்து சேர்ந்து கொள்கிறார். அந்த ஊரே வினோதமாக இருக்க அந்த ஊரில் யாரும் கண்ணாடி பார்க்க கூட பயப்படுகிறார்கள்.. ஒரு வழியாக குலதெய்வ வழிபாடு முடிந்த கையோடு காரில் புறப்படும் பரத் வாணிபோஜன் குடும்பம் வழி நெடுக சந்திக்க...
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்”

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் டாக்டர். ஐசரி கே கணேஷ் வழங்கும் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’* நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி ’எல்.கே.ஜி.’, ‘மூக்குத்தி அம்மன்’ மற்றும் ‘வீட்ல விசேஷங்க’ ஆகிய மூன்று படங்கள் மூலம் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியைக் கொடுத்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக வட்டத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வரக்கூடிய டாக்டர் ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ’சிங்கப்பூர் சலூன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் இணைந்திருக்கிறார். இந்த வெற்றிகரமான கூட்டணியில் புதிய இயக்குநர் இணைந்திருப்பது சுவாரஸ்யம் தரக்கூடிய ஒன்று. வழக்கமாக ஆர்.ஜே. பாலாஜி அவரது படங்களுக்கு அவரே இயக்குநராக அல்லது அவரது முதன்மை/ உதவி இயக்குநர்களுடன் கூட்டணி...
நான் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதில்லை… தர்ஷன் யாரென்றே எனக்கு தெரியாது -நாடு பட விழாவில் அதிர்ச்சியளித்த இயக்குனர் சரவணன்

நான் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதில்லை… தர்ஷன் யாரென்றே எனக்கு தெரியாது -நாடு பட விழாவில் அதிர்ச்சியளித்த இயக்குனர் சரவணன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தர்ஷன் யாரென்றே எனக்கு தெரியாது ; நாடு பட விழாவில் அதிர்ச்சியளித்த இயக்குனர் சரவணன் ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் 'நாடு'. இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத 'எங்கேயும் எப்போதும்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, அழகுச்சிலை மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்து இயக்குனர் சரவணனுடன் இணைந்து பயணிக்கும் இசையமைப்பாளர் சத்யா தான் இந்த படத்திற்கும் இசை அமைத்துள்ளார். சக்திவேல் ஒளிப்பதிவை கவனிக்க, தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் இளையராஜா இந்த படத்தின் கலை வடிவமைப்பை கவனித்துள்ளார். பொன...