வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான் மறுமணத்திற்கு போட்ட கண்டிஷன்கள்?

மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான் மறுமணத்திற்கு போட்ட கண்டிஷன்கள்?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான் மறுமணத்திற்கு போட்டிருக்கும் கண்டிஷன்கள் தான் தற்போதைய ஹாட். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். இவரது இசையில் சூர்யா நடித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அண்ணாத்த படத்தில் சிறப்பாக பணியாற்றியதன் பொருட்டு ரஜினிகாந்திடம் சிறப்பு பரிசையும் பெற்றார். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரையில் மோனிகா ரிச்சர்டு என்பவருடன் கடந்த 2008-ம் ஆண்டு இமானுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே தனது மனைவியை விட்டு பிரிவதாக கடந்த டிசம்பர் இறுதியில் அறிவித்தார் இமான். இந்நிலையில் தற்போது தனது மறுமணம் குறித்து பேசியுள்ள இமான், மறுமணம் செய்துக் கொள்வதாக இருந்தால், தனக்கு வரும் மனைவி கண்டிப்பாக விதவை அல்லது விவாகரத்து...
இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை கூகுள் குட்டப்பா விழாவில் பிரபல இயக்குநர் குற்றச்சாட்டு

இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை கூகுள் குட்டப்பா விழாவில் பிரபல இயக்குநர் குற்றச்சாட்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
*இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை கூகுள் குட்டப்பா விழாவில் பிரபல இயக்குநர் குற்றச்சாட்டு* ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இதில் கே. எஸ். ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன், பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ரோபோ ஒன்றும் நடித்திருக்கிறது. ஆர்வி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு இன்று பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் விக்ரமன், ஆர்கே செல்வமணி ,ஆர் வி உதயகுமார், பேரரசு, கௌரவ் ...
கிராக்கி அதிகமுள்ள சீர்திருத்த திருமணத்தை நடத்தும் புரோகிதர் நான் – திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி

கிராக்கி அதிகமுள்ள சீர்திருத்த திருமணத்தை நடத்தும் புரோகிதர் நான் – திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி

HOME SLIDER, kodanki voice, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    வைதீக புரோகிதரைவிட கிராக்கி அதிகமுள்ள சீர்திருத்த திருமணத்தை நடத்தும் புரோகிதர் நான் - திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி   https://youtu.be/I7bgRnbGpb4  
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 375 காசுகளாக நிர்ணயம்!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 375 காசுகளாக நிர்ணயம்!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 370 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 375 காசுகளாக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.132-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.134 ஆக அதிகரித்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.66-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.4 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.70 ஆக அதிகரித்து இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்....
உக்ரைன், ரஷியா மோதலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க பத்திரிகையாளர் உயிரிழப்பு!

உக்ரைன், ரஷியா மோதலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க பத்திரிகையாளர் உயிரிழப்பு!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடந்து 19-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்தப் போரில் இரு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் தொடர்ந்து ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவின் வடமேற்கு புறநகர் பகுதியான இர்பினில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் பிரெண்ட் ரீனாட் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார் என தகவல்கள் வெளியானது....
ஈராக்கில் தூதரகம் மீது ஏவுகணைகள் வீச்சு: அமெரிக்கா கடும் கண்டனம்!

ஈராக்கில் தூதரகம் மீது ஏவுகணைகள் வீச்சு: அமெரிக்கா கடும் கண்டனம்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
வடக்கு ஈராக் பகுதியில் உள்ள இர்பில் நகரில் புதிதாக நிறுவப்பட்ட அமெரிக்க தூதரகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது நேற்று ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 12-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதில் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. தூதரகத்துக்கு அருகில் உள்ள டெலிவி‌ஷன் அலுவலக கட்டிடமும் பலத்த சேதமானது. இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. பக்கத்து நாடான ஈரானில் இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவத்துக்கு அமெரிக்காவும், ஈராக்கும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மிருகத்தனமான இந்த தாக்குதல் நிறுத்த...
ஜாக்கெட், பேண்ட்டில் வைத்து 9 பாம்புகள், 43 பல்லிகளை கடத்த முயன்ற அமெரிக்க நபர் கைது!

ஜாக்கெட், பேண்ட்டில் வைத்து 9 பாம்புகள், 43 பல்லிகளை கடத்த முயன்ற அமெரிக்க நபர் கைது!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் யசிட்ரோ எல்லையில் போலீசார் வாகனங்களை சோதனை செய்து வந்தனர். கடந்த மாதத்தில் நடைபெற்ற சோதனை ஒன்றில் அவ்வழியாக வந்த டிரக்கை நிறுத்தி சோதனை செய்தனர். டிரக்கில் இருந்த நபரை போலீசார் வெளியேறச் சொல்லி சோதனை செய்தபோது, அந்த நபர் அணிந்திருந்த ஜாக்கெட், பேண்ட் பாக்கெட்டுகள் மற்றும் இடுப்பு பகுதிகளில் சுமார் 52 பையில் அடைக்கப்பட்டிருந்த 9 பாம்புகள், அரிய வகை 43 கொம்பு பல்லிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தியதில், இந்த ஊர்வனங்களை அமெரிக்காவிற்குள் கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, ஊர்வனங்களை கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்....
மருந்து கடைகளுக்கு தீ வைத்த மருத்துவ மாணவர்கள்- பீகாரில் பதற்றம்!

மருந்து கடைகளுக்கு தீ வைத்த மருத்துவ மாணவர்கள்- பீகாரில் பதற்றம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பீகார் மாநிலம் தர்பங்கா நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருந்துகள் கடை விற்பனையாளர்களுக்கும்,  மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது. இதையடுத்து அங்கிருந்த 4 கடைகள் மீது, மருத்துவ மாணவர்கள் சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். மருத்துவ கடை ஊழியர் ஒருவரும் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.இந்த தாக்குதலில் மூன்று போலீசார் காயமடைந்தனர். கடைகள் மற்றும் பல வாகனங்கள் தீக்கிறையாகின. இதை கண்டு அங்கு திரண்ட மருந்து விற்பனையாளர் வர்த்தக சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. உடனடியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்பங்கா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்....
“பொய்யா விளக்கு” ஈழத்தின் நிஜத்தை சொல்கிறதா? I the lamp of truth fact story?

“பொய்யா விளக்கு” ஈழத்தின் நிஜத்தை சொல்கிறதா? I the lamp of truth fact story?

HOME SLIDER, kodanki voice, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம், வீடியோ
  "பொய்யா விளக்கு" ஈழத்தின் நிஜத்தை சொல்கிறதா? I the lamp of truth fact story?   https://youtu.be/8X_u8A_WWOk
கிறுக்கி கிழித்து கசக்கிப்போட்டு தூசி தட்டப்பட்ட “மாறன்”  ஓவர் பில்டப்பு… தனுஷ் மாறனும் – கோடங்கி விமர்சனம்

கிறுக்கி கிழித்து கசக்கிப்போட்டு தூசி தட்டப்பட்ட “மாறன்” ஓவர் பில்டப்பு… தனுஷ் மாறனும் – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  ஓடிடிக்கு போற தனுஷ் படமெல்லாம் இப்படித்தான் இருக்கும் போல... கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல வந்த ஜகமே தந்திரம் இப்படித்தான் ஓவர் பில்டப்புல வந்து ஓடிடி போய் போன வேகத்துல அமுங்கி போச்சி... அடுத்ததா இந்த மாறன்... கதைப்படி தனுஷின் அப்பாவான நேர்மையான பத்திரிகையாளர் ராம்கி ஒரு உண்மை செய்தி போட்டதால கொல்லப்படுறார்... அதே நாளில் அம்மாவும் பிரசவத்துல பெண் குழந்தைய பெத்து குடுத்துட்டு செத்துப்போறாங்க... அப்பா அம்மா இல்லமலேயே தங்கச்சிய தனுஷ் வளர்த்து ஆளாக்குறார். தனுஷும் நேர்மையான பத்திரிகையாளரா இருக்கார். அரசியல்வாதியான வில்லன் சமுத்திரகனியோட ஒரு உண்மைய தனுஷ் கண்டு புடிச்சதால வில்லனால ஆபத்து, இடையிலயே அமீர் ஒரு வில்லனா வரார்... திடீர்னு தங்கச்சிய யாரோ கடத்துறாங்க... தனுஷ் தங்கச்சிய காப்பாத்துனாரா... வில்லன் என்ன ஆனார்... இதுதான் மாறன் கதை... சரி இவ்ளோ நேரம் கதைன்னு சொன்னதுல...