சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக அப்பாவுக்கும் , மகனுக்கும் ஜோடியாக நடிக்கிறார்..!

கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக அப்பாவுக்கும் , மகனுக்கும் ஜோடியாக நடிக்கிறார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கீர்த்தி சுரேஷ் ஒரே நேரத்தில் அப்பா மோகன்லால், மகன் பிரணவ்மோகன்லால் ஜோடியாக நடிக்கிறார்..! கீர்த்தி மலையாளத்தில், மோகன்லால் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். ‘மரக்கார் அராபிகளிண்டே சிம்ஹம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை பிரியதர்‌ஷன் இயக்கி வருகின்றார். மலையாளத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகின்ற வரலாற்று படம் இது. இந்தப் படத்தின் பணிகள் நடைபெற்றுவரும் போதே அவர் மோகன்லாலின் மகனான பிரனவ் மோகன்லாலுடனும் இணைந்து நடிக்கஉள்ளார். 2016-ம் ஆண்டு வெளியான ‘ஜேக்கப்பிண்டே சுவர்க்கராஜ்ஜியம்’ படத்தை நிவின்பாலியை கதாநாயகனாகக் கொண்டு இயக்கியவர் வினீத். இவர் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் பிரனவ், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கஉள்ளதாக செய்தி வருகிறது. பொதுவாக ஹீரோக்கள் தான் இப்படி நடித்து வருகின்றனர். ஹீரோயின்கள் ...
துக்ளக் தர்பாரில் விஜய் சேதுபதியுடன் இணைந்த பார்த்திபன்..!

துக்ளக் தர்பாரில் விஜய் சேதுபதியுடன் இணைந்த பார்த்திபன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘சங்கத் தமிழன்’, கடைசி விவசாயி, லாபம், மாமனிதம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்திலும், துக்ளக் தர்பார் படத்திலும் நடிக்க இருக்கிறார். இதில் துக்ளக் தர்பார் படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். படத்தில் விஜய்சேதுபதியுடன் பிரபல நடிகர் பார்த்திபன் இணைந்து நடிப்பதாக தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....
மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜீத்குமார்..!

மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜீத்குமார்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
    மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜீத்குமார்..! நடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டுமல்லாது பார்முலா 1 கார் ரேஸ், பைக் ரேஸ் போட்டோகிராபி, ஏரோ மாடலிங், சமையல் என பல்வேறு துறைகளிலும் தன் முத்திரையை பதித்தவர். பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் சிறிய ரக விமானங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர், எம்.ஐ.டியை சேர்ந்த தக்ஷா எனும் மாணவர் குழுவுடன் சேர்ந்து சிறிய அளவிலான ஆளில்லா விமானம் தயாரிக்க வழிகாட்டியாக இருந்தார். இப்போது அவர் கவனம் துப்பாக்கி சுடும் போட்டிகளில் திரும்பி உள்ளது. சென்னை ரைபில் கிளப் சார்ப்பாக கோவையில் நடக்கும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்குமார் கலந்து கொண்டார். இதில் 10 மீட்டர் பிரிவில் சென்னை ரைபில் கிளப் சார்பாக நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். அகில இந்திய அளவிலான துப்பாக்கி ச...
இந்தியில் ஹிட் அடித்த ஆர்ட்டிகல் 15 படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் தனுஷ்..!

இந்தியில் ஹிட் அடித்த ஆர்ட்டிகல் 15 படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் தனுஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இந்தியில் ஹிட் அடித்த ஆர்ட்டிகல் 15 படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் தனுஷ்..! நடிகர் தனுஷ் கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது. கால்ஷீட் டைரி தேதி ஒதுக்க முடியாதபடி நிரம்பி வழிகிறது. பல படங்களில் நடித்து வந்தாலும் அவரது நிறுவனம் சார்பில் பட தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நல்ல படங்கள் அமையும் போது மீண்டும் பட தயாரிப்பில் இறங்க தனுஷ் முடிவு செய்து இருந்தார். சமீபத்தில் இந்தியில் ரிலீஸ் ஆன ஆர்ட்டிகல் 15 படம் அங்கே சூப்பர் ஹிட் அடித்தது. அதோடு நல்ல கதையமைப்பு உள்ள படம் என்ற பெயரையும் பெற்றது. இதனால் அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் முடிவு செய்து இருக்கிறார். சட்ட ஓட்டைகளை தோலுரித்த படம் என்பதால் இப்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டது....
இம்சை அரசன் விவகாரம் இறங்கி வந்த வடிவேலு… நஷ்டத்தை ஈடுகட்ட படம் நடிக்கிறார்..!

இம்சை அரசன் விவகாரம் இறங்கி வந்த வடிவேலு… நஷ்டத்தை ஈடுகட்ட படம் நடிக்கிறார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      இம்சை அரசன் விவகாரம் இறங்கி வந்த வடிவேலு... நஷ்டத்தை ஈடுகட்ட படம் நடிக்கிறார்..! வடிவேல் நடித்து வெற்றிகரமாக ஓடிய இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் படமாக்கினர். சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேல் நடித்த இந்த படத்தை ஷங்கர் தயாரித்தார். சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் சிம்புதேவனுக்கும், வடிவேலுவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்து விலகினார் வடிவேல். அவரை சமரசப்படுத்தி மீண்டும் நடிக்க வைக்கும் முயற்சியில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் ஈடுபட்டன. ஆனாலும் வடிவேல் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதனால் தனக்கு ரூ.10 கோடிவரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று ஷங்கர் புகார் கூறினார். இதைத்தொடர்ந்து வடிவேல் புதிய படங்களில் ந...
ஹீரோக்களுக்கு இணையாக அதிகாலை காட்சியாக ரிலீஸ் ஆகி மாஸ் காட்ட உள்ள ஜோதிகா..!

ஹீரோக்களுக்கு இணையாக அதிகாலை காட்சியாக ரிலீஸ் ஆகி மாஸ் காட்ட உள்ள ஜோதிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஹீரோக்களுக்கு இணையாக அதிகாலை காட்சி ரிலீஸ் ஆகி மாஸ் காட்ட உள்ள ஜோதிகா..! பிரபலமான மாஸ் காட்டும் நடிகர்களின் படங்கள் மட்டுமே சில ஆண்டுகளாக அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டு வந்த நிலையில் தற்போது பெரும்பாலான நடிகர்களின் படங்களும் அதிகாலை காட்சி திரையிடப்பட்டு வருகிறது. ஹீரோக்கள் படங்கள் மட்டுமே அதிகாலை காட்சியை திரையிடப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு சில நடிகைகளின் திரைப்படங்களும் அதிகாலை காட்சிகள் திரையிடப்படுகின்றன. குறிப்பாக சமந்தா, நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகளின் படங்களும் அதிகாலை காட்சி திரையிடப்படுகிறது இந்த நிலையில் முதல் முறையாக ஜோதிகா நடித்த திரைப்படமும் அதிகாலை காட்சி திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை GK சினிமாவில் ஜோதிகா நடித்த 'ஜாக்பாட்' திரைப்படம் வரும் வெள்ளியன்று அதிகாலை 5.30 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான முன்ப...
நடிகர் இசையமைப்பாளர் பிரேம்ஜிக்கு விரைவில் டும் டும்…!

நடிகர் இசையமைப்பாளர் பிரேம்ஜிக்கு விரைவில் டும் டும்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் இசையமைப்பாளர் பிரேம்ஜிக்கு விரைவில் டும் டும்...! இசையமைப்பாளர் கங்கை அமரன் மகன் பிரேம்ஜி தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர். அதோடு இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய பெண் தேடி வந்தார்கள். இப்போது பெண் முடிவாகி விட்டது. அதை வழக்கம் போல குறியீடாக பிரேம்ஜி வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் போட்டிருக்கும் டி சர்ட்டில் திருமணத்திற்கு தயாரான ஆணும், பெண்ணும் இருக்கிறார்கள். கீழே கேம் ஓவர் என்றும் பிரேம்ஜி தலை குனிந்து முகம் காட்டாமல் பவ்யமாக நிற்கிறார். இனி மொட்டைப் பசங்க சகவாசம் இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறார் பிரேம்ஜி....
ரஜினி,கமல்,அஜீத்,விஜய் படங்கள் ரிலீஸ் செய்வதில் திடீர் கட்டுப்பாடு..

ரஜினி,கமல்,அஜீத்,விஜய் படங்கள் ரிலீஸ் செய்வதில் திடீர் கட்டுப்பாடு..

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சேலம் ஏரியா வினியோகஸ்தர்கள் கவுன்சில் இணைந்து பங்கு பெற்ற அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் திரைப்படங்கள் வெளியிடும்போது ஏற்படும் இடையூறுகள், இன்னல்கள் மற்றும் சிக்கல்களை தீர்ப்பது குறித்தும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரிபடுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனையின் முடிவில் கீழ்க்கண்ட முக்கிய முடிவுகள் நிறைவேற்றப்பட்டன. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, ஜெயம்ரவி, ராகவாலாரன்ஸ் மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு சேலம் ஏரியாவில் 45 டிஜிட்டல் பிரிண்ட்கள் மட்டுமே ரிலீஸ் செய்வது என தீர்மானிக்கப்பட்டு உ...
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 கேமராமேன் திடீர் மாற்றம்..!

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 கேமராமேன் திடீர் மாற்றம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 கேமராமேன் திடீர் மாற்றம்..! உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த இந்தியன் 2 தொடங்கிய வேகத்தில் திடீரென கிடப்பில் போனது. கமல் கட்சி தொடங்கி அரசியலுக்கு போனதால் படம் டிராப் ஆனதாக கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுக்கு பின் இந்தியன் 2 வேலைகளை தொடங்கினார் ஷங்கர். ஏற்கனவே ஹீரோயின் காஜல் அகர்வால் இருந்தார். அவரோடு புதிதாக பிரியா பவானி ஷங்கர் இணைந்தார். படத்தின் அடுத்த கட்ட காட்சிகள் ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி பகுதியில் நடை பெற உள்ளது. இந்த நிலையில் படம் தொடங்கிய போது ரவி வர்மன் தான் ஒளிப்பதிவு செய்தார். இப்போது அவருக்கு பதில் ரத்னவேலு ஒளிப்பதிவாளர் ஆக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்திலும் ரத்னவேலு தான் ஒளிப்பதிவு செய்தார். ரவி வர்மன் மாற்றத்திற்கு காரணம் கூறப்படவில்லை. ஆகஸ்ட் மா...
குறும்படங்களை வரவேற்க புதிய தளம் ஷார்ட்பிளிக்ஸ்…!

குறும்படங்களை வரவேற்க புதிய தளம் ஷார்ட்பிளிக்ஸ்…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  குறும்படங்களை வரவேற்க புதிய தளம் ஷார்ட்பிளிக்ஸ்...! புதிய திரைப்படங்கள், இணைய சீரியல் பதிவுகளுக்கு அமேசான், நெட்பிளிக்ஸ், ஜீ5 என பல இணைய பிளாட்பார்ம்கள் செயல் படுகிறது. டிவி, சினிமாவுக்கு மாற்றாக இந்த முறை மிக பரவலாக வளர்ந்து வருகிறது. அதே நேரம் குறும்படங்கள், சினிமா வாய்ப்பு தேடுபவர்களுக்கு தனியாக எந்த வசதியும் இதுவரை இல்லாமல் இருந்தது. இப்போது அந்த குறையை போக்க ஷார்ட்பிளிக்ஸ் என்ற ஒரு தனித் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குறும்படங்களை யாரும் பதிவேற்றம் செய்யலாம். அதன் மூலம் அவர்களுக்கு அடுத்த உயர்வுக்கு வழி கிடைக்கும்....