பிஜேபி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்த சூர்யாவுக்கு ரெய்டு மிரட்டலா..?
பிஜேபி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்த சூர்யாவுக்கு ரெய்டு மிரட்டலா..?
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக எதிர்க் கட்சிகளை தாண்டி இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தும் நபராக சூர்யா மாறியிருக்கிறார்.
சமீபத்தில் அவரது அகரம் பவுண்டேசன் சார்பில் மாணவர்களுக்கு நிதி தரும் நிகழ்ச்சியில் மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக கூறப்படும் புதிய கல்வி கொள்கையை கடுமையாக சூர்யா விமர்சித்தார்.
அதோடு, பல கிராமத்தில் பள்ளிக்கூடங்களில் அடிப்படை விஷயங்களே இல்லை இதில் புதிய கல்வி கொள்கை ரொம்ப அவசியமா என பொருள் படும் வகையில் கடும் வாதத்தை முன் வைத்தார்.
அதற்கு முன் சூர்யா மனைவி ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ராட்சசி படத்திலும் அரசு பள்ளிகளில் உள்ள அவலம் தோலுரிக்கப் பட்டிருந்தது. அந்த விழாவிலும் நீட் தமிழகத்தில் தேவையா என கேள்வி எழுப்பி இருந்தார் ஜோதிகா. இ...








