ரஜினி,விஜய்,அஜீத் பற்றி கருத்து சொல்லி சிக்கிய விவேக் ரசிகர்களை குரங்கு என குறிப்பிட்டதால் மீண்டும் சர்ச்சை!
ரஜினி, விஜய், அஜீத் ஆகியோரிடம் பிடித்த பண்புகள் என கருத்து வெளியிட்டதால் கமல் ரசிகர்களிடம் சிக்கிய விவேக்!
நடிகர் விவேக் அடிக்கடி ஏதாவது பேசியோ அல்லது பதிவிட்டோ சர்ச்சைகளில் சிக்குவார்.
இந்த முறை தனது "குருவி" பக்கத்தில் "எனக்குப் பிடித்த 3 முக்கியப் பண்புகள்.
1. யார் பற்றியும் அவதூறு பேசாதே- திரு. ரஜினிகாந்த்.
2.ignore negativity- திரு. விஜய்.
3.வாழு;வாழ விடு-திரு. அஜீத்" என பதிவிட அந்த பட்டியலில் கமல் பெயர் இல்லை என கமல் ரசிகர்கள் விவேக்கை வறுத்தெடுத்தார்கள்.
அதில் சிலரது கேள்விகளுக்கு விவேக் பதில் பதிவும் போட குருவி பக்கம் பரபரப்பாக காணப்பட்டது.
ஏற்கனவே தான் ஹீரோவாக நடித்து நீண்டகாலமாக கிடப்பில் இருந்து ரிலீசுக்கு வந்த பாலக்காட்டு மாதவன் படம் ரிலீஸ் ஆன அதே நேரத்தில் தனது பாபநாசம் படத்தை கமல் ரிலீஸ் செய்து தனது படத்தை ஓடவிடாமல் செய்துவிட்டார...









